Published:Updated:

ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!

பரபர பிராட்வே பெட் அனிமல் மார்க்கெட்...

ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!

பரபர பிராட்வே பெட் அனிமல் மார்க்கெட்...

Published:Updated:
##~##

விடுமுறைச் சோம்பல் கொஞ்சமும் இல் லாமல், ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே பரபரக்கத் தொடங்கிவிடுகிறது சென்னை பாரிஸ் பிராட்வே தியேட்டரின் எதிரே இருக்கும் சந்து.

 லேப்ரடார்,  பொமேரினியன், வெள்ளை எலி, முயல், வாத்து, கோழி, வான் கோழி என செல்லப் பிராணிகளின் சந்தை களை கட்டி இருக்கிறது. ''வெள்ளெலி... வெள்ளெலி சார்... ஜோடி 200தான்!'' என்று   சிறுவன் ஒருவன் வியாபாரம் பேச, கூண்டுக்குள் பெருவிரல் சைஸில் இரண்டு வெள்ளை எலிகள் திருதிரு என விழித்துக் கொண்டு இருக்கின்றன. நாய்ச் சந்தையாகத் தோன்றி, இப்போது இங்கு சகல செல்லப் பிரா ணிகளும் விற்பனைக்கு வருகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!

''அது ஆச்சுங்க 70 வருஷத்துக்கும் மேல. சுதந்திரத்துக்கு முன்னாடி  வெள்ளைக்காரங்க அவங்க வீட்டு நாய்க் குட்டிகளை ஜோடி சேர்க்க, இப்படி அடிக்கடி ஒண்ணு கூடுவாங்களாம். அதுவே இப்படி எல்லாப் பிராணிகளையும் கைமாத்திக்கிற இடமா ஆகிடுச்சு. அப்படி அப்படியே சாதாரண மக்களும் அவங்கவங்க பிராணிகளை விற்க வர ஆரம்பிச்சாங்க!'' - என்று சுருக்க வரலாறு சொல்கிறார் கிளி

ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!

வியாபாரி சரவணன். ஆள் உயர வான்கோழியை வைத்து இருந்தவர் ''போற வர்றவங்க எல்லாம் ஆசையாப் பார்க்குறாங்க. விலையைச் சொன்னாத்தான் எஸ்கேப் ஆயிடறாங்க. ஏற்கெனவே வீட்டில் மூணு வான்கோழி இருக்கு. எல்லாத்தையும் வெச்சி வளர்க்க முடியலை. இன்னிக்கு இதை எப்படியாவது வித்துட்டுப் போகணும்னு வந்தா... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை!'' என்று புலம்பியவரின் அருகில் வந்த ஒரு குழந்தை, ''ஹை... வான்கோழி! வாங்கிக் கொடுங்க டாடி..!'' என்று அடம்பிடிக்க வான் கோழி பார்ட்டியின் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பிரகாசம். சமயங்களில் ஆளுயர வான் கோழிகளும் இங்கு தலை நீட்டுமாம்.

இருப்பதிலேயே முயல் கூட்டம்தான் கொள்ளை அழகு.  வெள்ளை ரோமம், சிவப்புக் கண்கள் என பார்த்து ரசிப்பதற்காகவேனும் சும்மா ஒரு முயலைப் பிடித்துச் செல்கிறார்கள். செல்லமாக வளர்க்க உள்ளங்கை சைஸில் இருந்து, மாமிசப் பிரியர்களுக்காக மோட்டா சைஸ் வரை (அச்சோ!) ரகம் ரகமாகக் கூறு கட்டிவைத்து இருக்கிறார்கள் முயல்களை.

நாய்களுள் அல்சேஷனில் இருந்து பக் வகை வரை பல ரக நாய்கள் வாலாட்டிக்கொண்டு இருக்கின்றன. மார்க்கெட் ரேட்டைவிட இங்கு நாய்கள் விலை குறைவு. வாத்துகளை ஒரு பெரிய மரச் சட்டத்துக்குள் அடைத்துவைத்து, அதற்குள்ளேயே தானும் அமர்ந்துகொண்டு வாத்துக்களை விற்றுக்கொண்டு இருக்கிறார் ஒருவர்.

எதுவுமே வாங்க வேண்டாம்... அந்தச் சந்துக்குள் சும்மாவேனும் ஒரு நடை நடந்து வந்தாலே 'அனிமல் பிளானட்’டில் உலவிய உணர்வு!

- இர.ப்ரீத்தி,    படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism