Published:Updated:

என் ஊர்!

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே, சின்னமலை!

என் ஊர்!

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே, சின்னமலை!

Published:Updated:
##~##

விதா பாரதி. பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பு உண்டாக்கி, டி.ஆர்.பி கியர் தட்டிய 'சித்தி’ தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். சின்னத் திரை முத்திரை மெகா சீரியல்களான 'நீலவானம்’, 'மருமகள்’, 'சலனம்’, 'மீரா’, 'மறக்க முடியுமா?’, 'ஈழம் - நேற்றும் இன்றும்’ தொடர்களின் இயக்குநர், தனது மனதுக்கு நெருக்கமான சென்னிமலை குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...  

 ''ஈரோடு மாவட்டம் சென்னிமலைதான் கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட தலம். புராணரீதியாக, 'வாயு பகவானுக்கும் ஆதிசேஷன் என்கிற பாம்புக்கும் நடந்த சண்டையில் ஆதிசேஷனின் தலை வெட்டப்பட்டு விழுந்ததுதான் சென்னிமலை’ என்பது ஆன்மிக வரலாறு. நான் சிறுவனாக இருந்தபோது சந்நியாசி ஒரு வர் மலைக் கோயிலின் 1,400 படிகளில் இரட்டை மாட்டு வண் டியை ஏற்றி, 'முருகனின் மகிமை’ என்றார். ஊரே அதிசயித்து 'அரோகரா’ போட்டது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் திராவிடர் கழகத்தினர் அதேபோல் மாட்டு வண்டியை ஏற்றிக் காட்டி, 'சாமி இல்லை... ஆசாமி வேலைதான்’ என்றார்கள். அதையும் அதிசயித்து ரசித்தது என் ஊர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

என் ஊர் பண்டிகைகள் சுவாரஸ்ய மானவை. தை மாதம், 'நிலா பிள் ளைக்கு சோறு மாத்தும்’ விழா. ஏழு நாட்கள் இரவு கூட்டாஞ்சோறு ஆக்கி, ஊரின் பொது இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு சோற்றை இறக்கிவைத்துப் பெண்கள் கும்மியடித்து, 'ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ... தாழம்பு சிட் டாட தலை நிறையா முக்காடு’ என்று பாடுவார்கள். ஏழாவது நாள் பௌர்ணமி அன்று விடிய, விடிய கும்மிப் பாட்டுப் பாடி விழாவை நிறைவு செய்வார்கள். நிலாவைக் குழந்தையாக்கி கொஞ்சி மகிழ்ந்த இயற்கையின் பிள்ளைகள் நாங்கள்!

பொங்கல் பண்டிகையை, 'பூப்பறிக்கிற நோம்பி’ என்போம். அதிகாலையில் இளம் பெண்கள், குழந்தைகள் மலை அடிவாரம் சென்று கும்மிப் பாட்டுப் பாடி பூப்பறிப்பார் கள். ஊருக்குத் திரும்பி சாணப் பிள்ளையார் பிடித்து, பூவை வைத்த பின்பே ஊரில் பொங்கல் வைப்பார் கள். தை மாதம் தேர்த் திருவிழாவும் உண்டு. குடை ராட்டினம், மரணக் கிணறு, சர்க்கஸ் என்று களைகட்டும் ஊர்!

என் ஊர்!

விவசாயமும் தறியும் ஊரின் பிர தான தொழில்கள். ஐயா, வீட்டில் தறி நெய்வார். அம்மா, வயல் வேலை பார்ப்பார். என் ஊர், மலைக்கு அந்தப் பக்கம், வளம் மிக்க கீழ் பவானி வாய்க்கால் பாசனம். மலைக்கு இந்தப் பக்கம் சுமாரான கிணற்றுப் பாசனம். சாயக் கழிவு நீர் பிரச்னையால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் கருகி வருகிறது. சாலை ஓர விவசாய பூமி, ரியல் எஸ்டேட் பூமியாக மாறி வருகிறது. மீதம் இருக் கும் விவசாயிகளும், பணப் பயிர் சாகுபடிக்கு மாறிவிட்டதால், கொத் தித் தின்ன தானியங்கள் இல்லாமல், பச்சைக் கிளிகளும் சிட்டுக் குருவிகளும் மடிந்து வருகின்றன. ஒத்தை நாடா தறியின் தாள லயம் போய், விசைத் தறியின் இரக்கமற்ற இரைச்சல் நீக்கமற நிறைந்து இருக்கிறது!

அன்று என் ஊரின் உணவு கம்பஞ் சோறும் கேழ்வரகு தோசையும்தான். விசேஷ நாட்களில் அரிசி மாவுடன் கருப் பட்டி கலந்து கச்சாயம் (அதிரசம்) செய்வார்கள். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, ஊருக்குள் புதிய கடை முளைத்தது. பெயர் அருக்காணி கடை. புரோட்டாவையும் சால்னாவையும் சென்னிமலைக்கு அறிமுகப்படுத்திய கடை அது. பள்ளி நேரம் போக வீதிதோறும் கில்லித் தண்டும், தெள்ளும் (பனங்கொட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்து அடிப்பது) பொறி பறக்கும்.

என் ஊர்!

கொங்கு நாட்டு திருமணம் பிரசித்தி பெற்றது. பந்தக்கால் நடுவதில் தொடங்கி, பந்தி விரிப்பது வரை, ஊரின் குடி படைகள் (அனைத்து சமூ கத்தினர்) அனைவருக்கும் அதில் உரிமை உண்டு. சமீபத்தில் ஒரு கல்யா ணத்துக்காக, ஊருக்குச் சென்றேன். பந்தி, 'பஃபே’வாக மாறி இருந்தது. ஆனால், சண்டை போட வருபவர் களைக் கூட வரவேற்று, ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்த பின்னரே பேசத் துவங்கும் மக்களின் உபசார குணம் மட்டும் மாறவில்லை!''

சந்திப்பு: டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: ஜெ.தான்யராஜு, 'இதயம்’ மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism