Published:Updated:

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

Published:Updated:
##~##

ப்போதும் ஏ.சி. போட்டதுபோலவே இருக் கிறது ஏற்காடு. சேலத்தில் இருந்து, பஸ், கார், பைக் என எதில் பயணித்தாலும், அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் ஏற்காட்டை, தொட்டு விடலாம். போகும் வழி எல்லாம் ஓங்கி வளர்ந்த ஓக் மரங்கள்... காபி மற்றும் மிளகுத் தோட்டங்கள். மலைப் பாதையோரப் பாறைகளில் ஆங்காங்கே கவிதையாகக் கசிந்து உருகுகிறது தண்ணீர்!  

 ஊருக்குள் நுழைந்ததும் வரவேற்கிறது ஏற்காடு ஏரி. வருடம் முழுக்கத் தண்ணீர் வற்றாத ஏரி இது. எந்த சீஸனிலும் ஜாலி படகு சவாரி இங்கு நிச்சயம். ஏரியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது கிளியனூர் நீர் வீழ்ச்சி. இரண்டு கி.மீ. வரை வாகனங்களில் பயணிக்கலாம். அதன் பிறகு கொஞ்சம் ஆபத்தான காட்டு வழிப் பாதையில் 'நடராஜா சர்வீஸ்’. வயதானவர்கள், குழந்தைகளுடன் செல்பவர்களுக்கு, இந்தப் பயணம் அத்தனை உசிதம் அல்ல. அங்கு சுமார் இரண்டு தென்னை மர உயரத்தில் இருந்து அருவி கொட்டுகிறது. பயங்கரக் குளிர்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

ஆனால், விஷயம் தெரியாமல் பலர் அருவியில் தலை நனைக்கிறார்கள்.  தண்ணீர்பார்க்க 'பளிச்’ என்று  இருந்தாலும், அது ஊற்றுத் தண்ணீர் அல்ல. ஏரியின் கசிவு நீர் மற்றும் சில கிரா மங்களின் கழிவு நீர் இது. எனவே உஷார்!

ஆன்மிக அன்பர் கள் சேர்வராயன் கோயிலில் இருக்கும் காவிரியம்மனை வழிபடலாம். இந்தக் கோயிலில் ஒருவர் மட்டும் செல்லும் வகையில் உருவான குகை ஒன்று உள்ளது. இருட்டாக இருக்கும் இதனுள் சில அடிகள் மட்டுமே செல்ல முடியும். அதன் பின், சுரங்கப் பாதை சிதிலம் அடைந்துகிடப்பதால், உள்ளே செல்ல யாரும் முயற்சித்தது இல்லை. இந்தப் பகுதிதான் சேர்வராயன் மலைத் தொடரின் உச்சிப் பகுதி. அந்த உச்சியே மைதானம்போல பரந்து விரிந்து பசுமையாக இருக்கிறது. இங்கு குடும்பத்துடன் இயற்கையை ரசித்து நேரத்தைச் செலவிடலாம். ஆனால், குழந்தைகளை வேலியோரம் செல்ல விட வேண்டாம். அந்தப் பக்கம் கிடுகிடு பள்ளத்தாக்கு!

அடுத்து லேடீஸ் ஸீட் மற்றும் ஜென்ட்ஸ் ஸீட். இவை இரண்டும் அருகருகே இருக்கின்றன. இங்கு டெலஸ்கோப் மூலம் சேலத்தைப் பார்க்கலாம். மஞ்சக் குட்டை என்ற பகுதியில் புதிய வியூ பாயின்ட் ஒன்றை சகல வசதிகளுடன் கட்டி இருக்கிறார்கள். இங்கு செல்லும்போது, நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் மேகங்கள் உங்கள் கன்னம் உரசிச் செல்லும். இங்கே இருந்து சேலம், சங்ககிரி, தர்மபுரி ஆகிய ஊர்களின் மொத்தப் பரப்பையும் 'ஏரியல் வியூ’வில்  ரசிக்கலாம்!

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

காரிலோ, பைக்கிலோ செல்பவர்களுக்கு, ஏற்காட்டை சுற்றிப் பார்ப்பதில் பிரச்னை இருக்காது. டாக்ஸி மற்றும் ஆட்டோ வாடகை, பர்ஸைப் பதம் பார்க்கும். ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்தும், ஏரிக்கு அருகில் இருந்தும், 'ஏற்காடு டு ஏற்காடு’ அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்த்துத் திரும்ப  கட்டணம்

ஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்!

50தான்! ஆனால், மே மாதம் மட்டுமே இந்தப்  பேருந்து உண்டு!

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism