Published:Updated:

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

Food Festival

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

Published:Updated:
Food Festival
##~##

துரையிலும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க் கைச் சக்கரத்தோடும் ஒன்றிவிட்ட ஒரு விஷயம்... தமுக்கம் சித்திரைப் பொருட்காட்சி!

 மீனாட்சி அம்மன் கோயில் சித்தி ரைத் திருவிழா கொடி ஏற்றியதும் தொடங்க வேண்டிய பொருட்காட்சி, இந்த வருடம் தேர்தல் கெடுபிடி காரண மாக தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனாலும், உற்சாக உறியடிகளுக்குப் பஞ்சம் இல்லை!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமுக்கம் மைதானத்தில் மாலை 4 மணிக்கே நீண்ட வரிசையில் காத்து இருந்து, குழந்தைகளைக் கையில் பிடித்தபடி, குடும்பம் குடும்பமாகப் பொருட்காட்சிக்குள் நுழைகிறார்கள். மலிவு விலை ஃபேன்ஸி ஸ்டோர், எதை எடுத் தாலும் ஏழு ரூபாய் கடை, ஜவுளிக் கடை, போர்வை-தலையணை உறைக் கடை போன்றவைதான் பெண்களின் முதல் தேர்வு. ஸ்டிக்கர் பொட்டு, ஃபேன்ஸி வளையல், பிளாஸ்டிக் பொருட் கள், அலங்காரப் பொருட்கள், நைட்டி, தலையணை உறை போன்றவற்றை வாங்கியபிறகுதான், சாவகாசமாகக் குழந்தை களின் கதறலைக் கவனிக்கிறார்கள் இல்லத்தரசிகள். ''ராட்டி னம் ஆடிட்டு வந்து வாங்கலாம் செல்லம். இல்லைன்னா, தொலைஞ்சிரும்'' என்று சமாதானம் சொல்கிறார்கள். குழந் தைகளும் அரைகுறை நம்பிக்கையுடன் தலையசைக்கின்றன.

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

மழலைகளுக்கான மினி கார் தொடங்கி ஜெயன்ட் வீல் வரைக்கும் 20-க்கும் மேற்பட்ட ராட்டினங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 'ஏதாவது ரெண்டு ராட்டினம்தான் ஆடலாம். நீயே செலெக்ட் பண்ணு!' என்று குழந்தைகளிடமே சாய்ஸ் கொடுக்கிறார்கள். சமர்த்தாக தலை ஆட்டும் குழந்தைகள் 'டோராவின் பயணங்கள்’ போய், ரயிலில் ரவுண்ட் அடித்து முடித்ததும், மறுபடியும் அழுது அடம்பிடிக்க ஆரம்பிக்கி றார்கள்.

இருக்கவே இருக்கிறார்கள் அப்பத்தாக்கள். 'எத்தனை வருஷம் தான் இதையே பார்க்குறது? எல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு'' என்று கிரவுண்டில் கால் நீட்டி உட்கார்ந்துவிடும் அப்பத்தாக்கள் தான், நடமாடும் 'கிளாக் ரூம்’. குழந்தைகளை அப்பத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு, பெரிய டெல்லி அப்பளத்தை (இது மட்டும் அவுட் ஆப் ஃபேஷன் ஆகவே ஆகாதோ?) வாங்கி வருகிறார்கள் தந்தைக் குலங்கள். வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, அழும் குழந்தைக்கும் இறங்கி வரும் தந்தைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது, 'விளையாட்டு சாமான் கடைக்குப் போவது!’

குழந்தைகள் கேட்பது எப்போதும் கிடைப்பது இல்லைதான்.

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''

10-க்கு டோரா, மிக்கி மௌஸ் ஸ்டிக்கர்களையும் வாங்கிக் கொடுத்து, அழுகையை நிறுத்த சாக்கோபாரை கையில் திணித்து, ஓட்டமும் நடையுமாக வெளியேறுகிறார்கள். குடும்பஸ்தர்களுக்கு அவதியே அனுபவம் என்றால், இளைஞர்களுக்கோ ஜிலீர் கொண்டாட்டம். தாவணிகளைப் பின்தொடர்ந்து ஃபேன்ஸி கடைகளுக்குள்ளும் கூச்சம் இல்லாமல் நுழைகிறார்கள். கன்னிக் கிளிகளுக்கும் தெரியும். கடைக்காரருக்கும் தெரியும். இருந்தாலும் யாரும் எதுவும் சொல்வது இல்லை. அவிங்க ஐஸ்க்ரீம் சாப்பிட்டா, இவிங்க 'சம்மருக்கு நல்லது மாமே’ என்கிறார்கள். ஃபிகர் மிளகாய் பஜ்ஜி கடித்து, 'உஷ்’ என்றால், 'காரம் ஜாஸ்திண்ணே!’ என்று கடைக்காரரிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் கொலம்பஸில் ஏறினால், அதற்குப் பின் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, தொண்டை வரை உருளும் பயத்தை மறைத்துக் கூச்சலிடுகிறார்கள். திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டால், ஜென்ம சாபல்யம். ''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!' என்று புளங்காகிதம் அடை கிறார்கள். சிரிக்காவிட்டாலும், நஷ்டம் இல்லை. அடுத்த மான்... அடுத்த வேட்டை!

'இந்த ஓர் இடத்துக்கு மட்டும் தைரியமா வந்திட்டா... நீ என்ன கேட்டாலும் வாங்கித் தாரேன்' என்று புது மனைவியை மாப்பிள்ளைகள் அழைத்துச் செல்லும் இடம் 'அருந்ததியின் திகில் கோட்டை’. இருட்டுக்குள் திடும் என முகத்துக்கு நேரே வந்து ஆடும் எலும்புக் கூட்டைப் பார்த்ததும் மாப்பிள்ளை மார்பில் புதுப் பெண் முகம் புதைக்க, திகில் ரூம் அவ்வப்போது ஜிலீர் ரூம் ஆகிவிடுகிறது.

செலவு பிடிக்கிற விஷயம் என்றாலும், வருடந்தோறும் பொருட் காட்சிக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல; அயல்நாடுகளில் இருந்தும் (சும்மா ஒரு விளம்பரம்தான்) ஆள் வர ஆரம்பித்து இருக் கிறார்கள். துபாயில் இருந்து வந்து இருக்கும் ஜோ, 'சொந்த ஊர் மதுரை. ஒரு மாச லீவுல ஊருக்கு வந்திருந்தேன். இன்னும் நாலு நாள்ல துபாய் போகணும். 'அதிசயம் போலாமா’ன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப, என் வொஃய்ப் சித்திரைப் பொருட்காட்சி நடக்கிறதை ஞாபகப்படுத்தினா. எந்த ராட்டினத்துக்குப் போனாலும் 30 ரூபா அவுட். பஜ்ஜி, டெல்லி அப்பளம்னு எதை வாங்கினாலும்,  20 ரூபா காலி. பெரியவ செர்லின் 1,000 ரூபாய்க்கு பொம்மை வாங்கி வேட்டு வெச்சிட்டா. சின்னவ ஜேலிஸ் செருப்பைத் தொலைச்சிட்டா. ஆனாலும் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்'' என்று சிரிக்கிறார் ஜோ.

முத்துக்கண்ணன் - வசுமதி தம்பதியோ, ''எங்க ஊர் சிவகங்கை யில் சுத்திப் பார்க்க எதுவும் இல்லை. அதான், இங்கே கிளம்பி வந்துட் டோம். ஒரு கட்டைப் பை நிறைய பொருள் வாங்கியாச்சு. எல்லா ராட் டினமும் ஆடிட்டுத்தான் கிளம் பணும்!'' என்றார்கள் லட்சிய வெறியோடு.

கலவையான உணர்வுகளைச் சுமந்து சுழன்றபடியே இருக்கிறது காலமும் ராட்டினங்களும்!

  - கே.கே.மகேஷ், படங்கள்:என்.ஜி.மணிகண்டன்

''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே!''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism