Published:Updated:

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

Published:Updated:
##~##

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா!

 காலை முதல் விழா ஏற்பாடுகளால் கல்லூரி களை கட்டியிருக்க, வேட்டி, சேலைகளில் மாணவர்கள் வெரைட்டி காட்டினார்கள். கல்லூரி அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். ''எல்லா ஆசிரியர்களும் எங்களுடன் ஃப்ரீயாப் பழகினாங்க... எந்த நேரம் எந்தச் சந்தேகம் கேட்டாலும் அதைத் தீர்த்துவெச்சாங்க!'' என்று மகேந்திரபாபு சொல்லும் போதே, பின்பக்கத்தில் இருந்து, '''நீங்க வெறும் தாஸா?’ன்னு கேட்டது நீதானே?'' என்று ஒரு டெரர் கமென்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

பேராசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தை, அவர் களைப்போன்று நடித்துக் காட்டியும், மிமிக்ரி செய்தும், சக்தி கலகலப்பூட்ட... அரங்கத்தில் சிரிப்பலைகள். மேடையில் இருந்த பேராசிரியர் சந்தோஷ்குமார் திடீர் என பத்ம வாசுகி என்கிற மாணவியிடம் மைக் கொடுத் தார். ''நீங்க ஒரு ஜட்ஜ் ஆக இருக்கீங்க... நமது பிரின்ஸ் பால் ஒரு அக்யூஸ்டா உங்க முன்னாடி நிக்கிறார். அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க?'' என்று சந்தோஷ் குமார் கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல் ''சட்டம் தன் கடமையைச் செய்யும்'' என்ற பத்ம வாசுகியின் பதிலுக்கு செம அப்ளாஸ்.

''இப்படிப்பட்ட எனது மாணவர்கள் இருக் கும் வரை, நீதி ஒருநாளும் சாகாது. இந்தக் கல்லூரிக்கும் நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது!'' என்று முதல்வர் எபினேசர் உணர்ச்சிவசப்பட, மாண வர்கள் முகங்களில்  பெருமிதம்!

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நடத்திய பிரிவு உபச்சார விழாவில் பேசிய கஜேந்திரன், ''இந்தக் கல்லூரியில் நாங்கள் கற்றுக்கொண்டது பாடத்துடன் வாழ்க்கையையும்தான். சமூகப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட யாரும் முன் வருவது இல்லை. பெரும்பாலும் போராட் டங்களில் களம் இறங்குவது, சட்டக் கல்லூரி மாணவர்கள்தான். ஆனால், நம்மை 'கலவரம் செய்பவர்கள்’, 'ரௌடிகள்’ என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. எந்தத் துறைக்கு நாம் சென்றாலும், அநீதிக்கு எதிரான போராட்டக் குணத்தை இழந்துவிடக் கூடாது. எந்தப் போராட்டமும் வெற்றி, தோல்வி என்ற முடிவைக் கொண்டு இருப்பது இல்லை. அதனால், கடைசி வரை போராடுவோம்!'' என்று கம்பீரமாக முழங்கி னார்!

''வாழ்க்கையில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால், துன்பங்கள், நஷ்டங்கள், சோதனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளாவிட்டால், ஒருநாளும் வெற்றி பெற முடியாது.

சவால் நிறைந்த வாழ்க்கையில் நீங்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் என் ஆசை!'' என்று வாழ்த்தி வழி அனுப்பினார் கல்லூரி முதல்வர் எபினேசர்!

- பா.ஜெயவேல், படங்கள்: எல்.ராஜேந்திரன்

''உங்க செருப்பு பிஞ்சிருக்கா?''

''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது!''

டந்த மே 3-ம் தேதி...  மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே, கையில் ஊசி, நூலோடு நின்று கொண்டு இருந்தார் அந்தச் சிவப்பு சட்டை, ஜீன்ஸ் பேன்ட் இளைஞர். ''உங்க செருப்பு பிஞ்சி இருக்கா? வாங்க தெச்சுக்கொடுக்கிறேன்!'' என்று வலிய கூப்பிட் டுக்கொண்டு இருந்தவரை கூர்ந்து பார்த்தால்... அது ரேடியோ மிர்ச்சியில் 'மதுரை ஷோ’ பண்ணும் ஆர்.ஜே. கார்த்திக். ''நான் தினமும் மக்கள் பிரச்னைகளைப் பத்தி பேசுவேன். எத்தனை நாளைக்குத்தான் ஏ.சி. அறையில் உட்கார்ந்து மக்கள் பிரச்னைகளைப் பேசுறது? அதான், நேரடியாக் களத்தில் இறங்கிட்டேன். உழைப்பாளர் தினத்தைக் கொண்டாட உழைக்கும் மக்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆசைப்பட்டேன். நேத்து சென்ட்ரல் மார்க்கெட்டுக்குப் போய் மூட்டை தூக்கினேன். அவங்க பிரச்னைகளை ரேடியோவில் பேசவெச்சேன். ரயில்வே ஸ்டேஷனில் சமோசா விக்கப் போனேன். துப்புரவுத் தொழிலாளர்களோடு சேர்ந்து ஊரைக் கூட்டுறது, பூ விக்கிறது, செருப்பு தைக்கிறதுன்னு களம் இறங்கிட்டேன். நேரடியாப் பார்த்தாதான் மக்கள் எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியுது'' - பேசிவிட்டு செருப்பு தைப்பதில் மும்முரமாகிவிட்டார் கார்த்திக்!

- இரா.கோகுல்ரமணன், படங்கள்: ஈ.ஜெ.நந்தக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism