Published:Updated:

என் ஊர்!

''ஊருக்கு நல்லது செய்வேன்!''

என் ஊர்!

''ஊருக்கு நல்லது செய்வேன்!''

Published:Updated:
##~##

''எங்கள் ஊரான மேமாளூர், விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக்கொண்ட சின்ன குக்கிரா மம். சாதி இந்துக்கள், தலித்துகள், கிறிஸ்துவர்கள் கிராமத்தின் மக்கள்தொகையில் சமஅளவில் இருப் பார்கள். ஆனாலும் பெரிதாக சாதிய மோதல்கள் எதையும் எங்கள் ஊர்  எதிர்கொண்டது இல்லை!'' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டு தன் ஊர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி பாதையில் 12-வது கிலோ மீட் டரில் இருக்கிறது மேமாளூர். ஊரில் பெட்டிக் கடைகள் மட்டுமே இருக்கும். பெரிதாக பொருட்கள் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் திருக் கோவிலூருக்குத்தான் செல்ல வேண்டும். சிறுவயதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

படித்துக்கொண்டே எங்கள் நிலத்தில் விவசாய வேலைகளைச் செய்துகொண்டு இருப்பேன். கரும்பு வெட்டி வெல்லம் எடுப்பது, நெல், கம்பு, துவரை போன்ற பயிர்களை விளைவிப்பதில் எல்லா நிலைகளிலும் உள்ள வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. அந்தக் காலத்தில் ஏற்றம் கட்டி நீர் இறைப்போம். இப்போது எல் லாம் நிலத்தடி நீர் குறைந்து கீழே போய்விட்டதால் ஏற்றம் கட்டு வதைப் பற்றி எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

ஊரில்  ஏரி ஒன்று உண்டு. மழை பெய்தால் எங்களுக்கு குஷியாகிவிடும். நண்பர்களுடன் இரவு 12 மணி வரை கபடி விளையாடிவிட்டு வியர்க்க விறுவிறுக்கச் சென்று 'தொபுக்கடீர்’ என்று ஏரியில் விழுவோம்.  ஊரில் திரையரங்கம் கிடையாது என்ப தால்,  திருக்கோவிலூருக்குச் சென்று ஒரே நாளில் காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி, இரண்டாவது ஆட்டம் என்று மூன்று நான்கு சினிமாக்களை மொத்தமாகப் பார்ப்பது உண்டு. பிறகு, பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவோம்.

பள்ளியில் படிக்கும்போது எனக்கும் என் நண்பர் களுக்கும் பீடி குடிக்கும் ஆசை வந்தது. என் அப்பாவுக்கு எங்கள் ஊர் பெட்டிக் கடையில் கணக்கு இருந்தது. 'உங்கப்பா கணக்குல ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வா’ என்று நண்பர்கள் சொல்ல நானும் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கடைக்குப் போய் 'அப்பா ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வரச் சொன்னார்’ என்று கேட்டேன். 'உங்கப்பா சுருட்டு மட்டும்தானே குடிப்பார்?’ என்று அவர் புருவத்தை உயர்த்த. நான் வெலவெலத்துப் போனேன். அப் புறம் ஏன், எனக்கு பீடி குடிக்கும் ஆசை வரப்போகிறது?

என் ஊர்!

எங்கள் ஊரில் மருத்துவமனை இல்லாததால், இக்கட்டான சமயங் களில் திருக்கோவிலூருக்குத்தான்  செல்ல வேண்டும். பாம்புகள் நடமாட்டம் எங்கள்  ஊரில் அதிகம். ஆண்டுதோறும் நண்பர்கள் சேர்ந்து ஸ்லோ சைக்கிள் ரேஸ், குண்டு எறிதல் என்று நிறைய விளையாட்டுப் போட்டி களை ஊருக்குள் நடத்து வோம். எங்கள் ஊர் கபடி அணி மிகவும் புகழ் பெற்றது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை வென்ற அணி எங்களுடையது!  

இப்போது ஊர் முன்புபோல இல்லை. விவசாயம் பொய்த்து விட்டது. ஓரிருவர் செல்போன் வைத்திருப்பதைத் தவிர, நகர்ப் புறத்து வசதிகள் எதுவும் எங்கள் கிராமத்தை இன்னும் எட்ட வில்லை. இன்னமும்கூட அங்கே மாணவர்கள் படிப்பைத் தொடர் வதற்கான சூழல் இல்லை. நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊருக்குச் சென்றதும், எனக்கு ஒரு பெரிய விழா எடுத்து வரவேற்பு கொடுத் தார்கள். நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த நிகழ்வு அது. தலித்துகள், கிறிஸ்துவர்கள், சாதி இந்துக்கள், அனைத்துக் கட்சி நண்பர்கள் என்று அத்தனை பேரும் சேர்ந்து எடுத்த அந்த விழாவில், ஊரைச் சேர்ந்த புகழேந்தி, அருணகிரி போன்ற பலரின் முனைப்புடன் மாணவர்களுக்கு என்று ஒரு பயிற்சி மையம் துவக்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறோம். எங்கள் ஊரில் இன்னும் நிறைய பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமல்லவா?''

என் ஊர்!

- கவின் மலர், படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism