Published:Updated:

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

Published:Updated:
##~##

'கோடை காலம்’ என்றால் நாம்தான் குளிர்பானக் கடைகள், இளநீர், ஏ.சி., சுற்றுலாத் தளங்கள் எனத் தலை தெறித்து ஓடுகிறோம். ஆனால், பசங்கள் கோடை விடு முறைக் காலத்தைக் கொளுத்தும் வெயிலில்தான் விளையாடித் தீர்க் கிறார்கள்!

 விழுப்புரத்தில் உள்ள முத்துதோப்பு, கைலாச நகர் தெரு கூச்சலும் குதூகலமும் ஆகக் காலையிலேயே களை கட்டிவிட்டது. ''நான்தான் ஃபர்ஸ்ட்!'' என்றபடி கோலியை உருட்டிவிட்டான் ஒரு பொடியன். திடீரென 'அப்ஸ்’ என்று கத்தியபடியே கோலியைக் கையில் தூக்கி, தொடையில் வைத்து அடித்தான் லோகேஸ்வரன். பொதுவாகத் தரையில்தான் கையை ஊன்றிக் கோலிக் குண்டு அடிக்க வேண்டும். ஆனால், அங்கே ஜல்லி கொட்டி இருந்ததால்தான் இந்த 'அப்ஸாம்’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

பக்கத்திலேயே பாவாடையைத் தூக்கிப் பிடித்தபடி, சிறுமிகள் 'ஜில்லி’ விளையாடிக்கொண்டு இருந்தனர். மொத்தம் ஏழு கட் டங்கள். எந்தக் கட்டத்தில் சின்னக் கல் இருக்கிறதோ, அந்தக் கட்டத்தை மட்டும் மிதிக்காமல் தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டும். ''ஏய்... ராதிகா கோட்டை மிதிச்சுட்டா!'' என்பது பாலமதியின் புகார். ''நானாடி அழுவுணி ஆடறேன்? கிந்தி அடிச்சுத்தான் தாண்டினேன். கண்ணை என்ன பொடனியிலயா வெச்சிருக்கே?'' என்று சொல்லும்போதே அழுகை வந்துவிட்டது ராதிகாவுக்கு.

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஆரவாரம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால்   பட்டம் பறந்துகொண்டு இருந்தது. இன்னொரு பக்கம், ஜாலி கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள். மாடியில் இருந்து பந்து கீழே விழுந்தால், அதை எடுத்து வருவதற்கு என்றே சில பொடிப் பையன்களையும் வைத்து இருக்கிறார்கள். 'நான்தான் போவேன்!’ என்று பொடிசுகளுக்குள் பந்து பொறுக்க ஏகப்பட்ட போட்டி. சிக்ஸரும் ஃபோருமாக வெளுத்துக் கட்டிக்கொண்டு இருந்தார்கள் 'மொட்டை மாடி’ டோனிகளும் சச்சின்களும்.

கீழே இறங்கி வந்த நம் தலைக்கு மேல் 'விர்’ என்று பறந்தது ஒரு கல். 'வேட்டைக்காரன்’ விஜய் கெட்டப்பில் உண்டிக் கோலை எடுத்து குறி பார்த்துக்கொண்டு இருந்தான் லோகேஸ்வரன். ''ஸ்கூல்ல வரிசையா பலூன் கட்டித் தொங்க விட்டு, இப்படிக் குறி பார்த்து அடிக்கச் சொல்லி டிரெயினிங் கொடுத்தாங்க. அதாங்ணா இப்படி!'' என்று விஜய் வாய்ஸ் கொடுத்தான் லோகேஸ்வரன். ''ஏன்டா, இப்படி உசிரை வாங்குற, போற வாறவங்க தலையில விழுந்தா பஞ்சாயத்தைக் கூட்டுவாங்கே!'' என்று லோகேஸ்வரனின் அம்மா, அர்ச்சனையை ஆரம்பிக்க, வேட்டைப்புலி பதுங்கி வீடியோ கேம்ஸ் விளையாடப் போனது.

இதற்குள் சாயந்தரம் ஆகிப் போக, காலையில் ஜில்லி விளையாடிய சிறுமிகள் கூட்டம் இப்போது பல்லாங்குழிக்கு மாறியிருந்தது. ஆனால், பல்லாங்குழிக் கான கட்டங்களைத் தரையிலேயே சாக்பீஸால் வரைந்து இருந்தார்கள். ''ஐந்து காய் சேர்ந்துட்டு, எடுத்துக்க'' என்று காலையில் சண்டை போட்ட பாலமதி சொல்ல, ராதிகா கட்டத்தை வழித்துக் காய் களை எடுத்துக்கொண்டாள்.

குழந்தைகளின் உலகம் நம் மையும் குழந்தையாக்கும் குதூ கலத்துக்காக... ஆண்டு முழுவதும் கோடை விடுமுறையாக இருக்கலாமே!

- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

அப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism