Published:Updated:

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'
'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

விவசாயத்தை உயர்த்திப்பிடிக்கும் பட்ஜெட் என்று பலரும் புகழாரம் சூட்டும் மத்திய பட்ஜெட் குறித்து விவசாய சங்க பிரமுகர் சிலரின் கருத்துக்கள் இங்கே...

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத்தலைவர் கு.செல்லமுத்து: உரமானியங்கள் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும், முதியோர் மருத்துவ காப்பீடு மற்றும் 5,500 கோடி ரூபாய் பயிர் காப்பீடு உள்ளிட்ட அமசங்களுடன் இயற்கை வேளாண்மைக்கு ஊக்கம் தரப்படும் என்கிற அறிவிப்புக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்கும் ஒரே தீர்வு கடன் தள்ளுபடி மட்டும்தான். அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வையாபுரி: பாசனத்திட்டங்களுக்கு முன்னுரிமை என்பது வரவேற்கதக்கது. அதே சமயம் பயிர்வாரி முறை அமல்படுத்தபடவேண்டும். நஞ்சைப்பயிரை புஞ்சை நிலத்தில் செய்ய வைத்த பசுமைப்புரட்சி முறைதான் தண்ணீர் பிரச்னைக்கு காரணம். அந்த மண்னுக்கு ஏற்ற விவசாயம் செய்தால் நிலத்தடி நீர் எப்பொழுதும் குறையாது.

இயற்கை வேளாண்மை ஊக்கபடுத்தப்படும் அதே வேளையில், அரசு விருந்துகளில் 70 சதவிகிதம் சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்படவும் வேண்டும். மானாவாரி விவசாயம்தான் 100 சதவிகித இயற்கை விவசாயம். அந்த விவசாயம் செய்பவர்களுக்கு மானியம் கொடுக்கவேண்டும்.

உழைக்கும் பண்ணை விலங்குகளான எருது, ஒட்டகம், குதிரை மற்றும் கழுதை உள்ளிட்ட விலங்குகளை பாதுகாப்பதுடன் செலவை அதிகரிக்கும் இயந்திர பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். இது போன்ற பல அறிவிப்புக்களை எதிர்பார்த்தேன்... ஏமாற்றம்தான் மிஞ்சியது.

'அரசு விருந்துகளில் 70% சிறுதானிய உணவு கட்டாயமாக்கப்பட வேண்டும்!'

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி: 2022-ல் விவசாயிகளின் வருமானம் இருமடங்கு ஆக்கப்படும், கிராமப்புற வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறோம் என்கிற அறிவிப்பு சாத்தியமில்லாத ஒன்று. 813 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், விவசாய வேலைகளுக்கு வர தயங்குகிறார்கள். இப்படியான சூழலில் விவசாயத்தில் வேலைவாய்ப்பு எப்படி உருவாகும்.

7-வது ஊதிய கமிஷனை நிறைவேற்றும் அதே வேளையில், கிடப்பில் உள்ள விவசாய கமிஷனையும் நிறைவேற்றவேண்டும். அப்பொழுது தான் விவசாயத்துக்கு விடிவு பிறக்கும்.

-ஜி.பழனிச்சாமி

அடுத்த கட்டுரைக்கு