Published:Updated:

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!

ங்களை நான் எப்போது தெரியுமா, மானசீக குருவாக வரித்துக் கொண்டேன்...? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் விவசாயிகள் குறித்து கூறிய பரிவான வார்த்தைகளால் உந்தப்பட்டு, இந்த ஏகலைவன் உங்களை என் துரோணராக துதிக்க ஆரம்பித்தேன்.

ஆமாம். நீங்கள் மறந்திருந்தால், உங்களுக்கு நினைவூட்டுகிறேன், நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளில், “நீங்கள் உணவருந்தும் முன், உங்களுக்கு உணவளித்த விவசாயிக்காக இறைவனை வேண்டுங்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான், நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்...!”

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!

பணம்படைத்தவர்களை மட்டும் தம் அருகில் வைத்துக் கொள்ளும், ஆன்மிக குருக்களுக்கு மத்தியில், பாமர விவசாயிக்காக கவலைப்பட்ட நீங்கள் எனக்கு வித்தியாசமாக தெரிந்தீர்கள். ஆனால், பாமர விவசாயிகளின், விளை நிலங்களை அழித்து ‘உலக கலாச்சார திருவிழா’விற்கான, பார்க்கிங் அமைக்கப்பட்டதை எதிர்த்து, 80 விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்பதை படித்தவுடன் பதறிவிட்டேன்...

இப்போது என்ன ஆயிற்று குருவே...?  விவசாயிகளின் நலனுக்காக இறைவனை வேண்ட சொன்ன நீங்களா, விவசாயிகளின் பட்டினி போராட்டத்திற்கு காரணமாக இருப்பது...?

ஏன் மாறினீர்கள்...?

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!

காங்கிரஸ் காலத்தில் நீங்கள் லோக்பால் வேண்டி கட்டுமையாக போராடினீர்கள்... நான் மகிழ்ந்தேன்... ஒரு ஆன்மிக குரு என்பவரின் வேலை,  'சாமானியன் அகத்தில் ஒளியை ஏற்றுவது மட்டும் அல்ல ... புறத்தே அவனை பாதிக்கும்  விஷயங்களுக்காகவும் போராட வேண்டும்' என்று நம்புபவன் நான்... ஆனால், அண்மையில் ஒரு பேட்டியில் படித்தேன்,  நீங்கள் லோக்பால் தேவையில்லை என்று கூறியிருந்தீர்கள்...

காங்கிரஸ் ஆட்சி என்றால் ஒரு மாதிரியாகவும், பி.ஜே.பி ஆட்சி என்றால் ஒரு மாதிரியாகவும் உங்களை பேச தூண்டுவது எது...?

ஏன் மாறினீர்கள்...?

மீண்டும் களத்திற்கு வாருங்கள் குருவே, உங்களுடன் கரம் கோர்க்க தயாராகவே இருக்கிறேன்.

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!தூற்றுவோர், தூற்றட்டும்...! உலக அமைதிக்காக உங்கள் செயல்பாட்டை அந்த மூடர்கள் அறியமாட்டார்கள். ஆம், நீங்கள் கொலம்பியாவில் அமைதியைக் கொண்டு வர எவ்வளவு முயற்சி

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!

எடுத்தீர்கள் என்பதை நான் அறிவேன். அங்கு அரசுக்கும், ரெவலியுஷனரி ஆர்ம்டு ஃபோர்சஸ் ஆஃப் கொலம்பியா (Revolutionary Armed Forces of Colombia - FARC) என்ற புரட்சிகர குழுவுக்கும் மத்தியஸ்தம் செய்து,  அவர்களை காந்திய வழிக்கு திருப்பினீர்கள். அதுபோன்று அஸ்ஸாமிலும் சில முயற்சிகள் எடுத்தீர்கள். ஆனால், இந்தியாவில் தொடர்ந்து பழங்குடிகளுக்கு எதிரான தாக்குதல் நடக்கிறது, அண்மையில் கூட சோனி சோரி முகத்தில் திராவகம் வீசினார்கள். இதற்கெல்லாம், பெரும்பாலும் காரணம், பெரு நிறுவனங்களின் இலாப வெறிதான்.

ஏன் குருவே, நீங்கள் அப்பாவி பழங்குடிகளுடன் கரம் கோர்க்காமல், பெருநிறுவனங்களுடனே சேர்ந்து செயல்படுகிறீர்கள்...?

என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு...?

உங்கள் கூட்டங்களுக்கு வருவோருக்கு நன்கு தெரியும், நீங்கள் இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை, எவ்வளவு அருமையாக விவரிப்பீர்கள் என்று... இயற்கையின் அழிவு, மனிதனின் அழிவு என்று பேசியதாக கூட நினைவு... நம் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது, இயற்கை நமக்கு வேண்டிய ஆற்றலை தரும் என்று கூறியது நீங்கள்தான்...

ஆனால், இப்போது அந்த தூய்மையான எண்ணத்தில் நஞ்சை விதைத்தது யார்...? எதற்காக யமுனா வெள்ளச் சமவெளியை அழித்து, நாம் எந்த கலாச்சாரத்தை காக்க திருவிழா எடுக்கப் போகிறோம் குருவே...?

என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?

' என்ன ஆயிற்று குருவே உங்களுக்கு....?' -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, சீடனின் ஒரு கடிதம்...!

மீண்டும் வாருங்கள்.... எங்கள் அறம் போதித்த குருவாக, இயற்கையை நேசிக்க கற்று கொடுத்த பேராசனாக, களத்தில் முன்னின்று போராடிய போராட்ட குருவாக...!!!

உங்களை சுற்றி எழுப்பபட்டுள்ள அரிதாரம் பூசிய கோட்டைகளை உடைத்து, மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையில், உங்களை உண்மையான சீடர்களில் ஒருவன்.

  - குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சீடன்

அடுத்த கட்டுரைக்கு