Published:Updated:

பிழைப்பு தேடி வந்த இடத்தில் நடந்த அதிசயம்- மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

பிழைப்பு தேடி வந்த இடத்தில் நடந்த அதிசயம்- மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!
பிழைப்பு தேடி வந்த இடத்தில் நடந்த அதிசயம்- மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

பிழைப்புத் தேடி கேரளாவிற்கு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மூன்றே நாட்களில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளார்.
 

பிழைப்பு தேடி வந்த இடத்தில் நடந்த அதிசயம்- மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் மொஃபிஜுல் ரஹனா ஷேக். 22 வயதான ஷேக், கூலி வேலைத் தேடி கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். கேரளாவிற்கு சென்ற மறுநாளே 50 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். மறுநாளே இவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

ஆனால், இவருக்கோ பயம். சக மேற்கு வங்க தொழிலாளிகள் தாக்கி அந்த  லாட்டரி சீட்டை பறித்துக்கொள்வார்களோ என அஞ்சிய ஷேக், பாதுகாப்பு கோரி அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னர், அந்த வாலிபரை வங்கிக்கு கூட்டி சென்ற காவல்துறையினர், லாட்டரி சீட்டை வங்கியில் செலுத்தி, அதற்குண்டான பரிசுத் தொகையை அவருக்கு கிடைக்கச் செய்துள்ளனர்.