என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''சங்கப் பணிகளால் எனக்கு இழப்பு அதிகம்!''

சொல்கிறார் ராமதாஸ்

''சங்கப் பணிகளால் எனக்கு இழப்பு அதிகம்!''
##~##

''தங்களுடைய இன்றைய முன்னேற்றத்துக்குக் காரணமாக இருந்தது யார்?''

 ''என் மனைவி. என்னுடைய எல்லா முன்னேற்றங்களுக்கும் அவள்தான் காரணம். வன்னியர் சங்கத்தில் நான் ஈடுபடுவதற்குத் தடையாக இல்லாமல், அதனால் பல பாதிப்புகள் குடும்பத்துக்கு ஏற்பட்டா லும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை உற்சாகப்படுத்தியவள். அடுத்து, என்னுடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும். சிறு வயதில் நான் அனுபவித்த வறுமையும்கூட, நான் இப்போது இருக்கும் நிலைமைக்குக் காரணம்!''

''சங்கப் பணிகளால் எனக்கு இழப்பு அதிகம்!''

''மன்னிக்கவே முடியாத குற்றம் என்று கருதுவது?''

''சங்கத்தில் இருந்துகொண்டு, வேறு கட்சிகளில் வேலை செய்யும் நபர்களை மன்னிக்க முடியாது!''

''இதுவரை யாரிடமும் கூறாமல், உங்கள் மனதுக்குள்ளேயே மறைத்து வைத்திருக்கும் சென்டிமென்ட்?''

''என் மனைவி இறக்கும் நாளிலேயே நானும் இறந்துவிட வேண்டும்!''

''உங்களின் சங்கத்தால் குடும்பத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டது உண்டா?''

''முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றால், வீடே தங்க மாட்டோம். குடும்பத்துடன் பிக்னிக் கிளம்பிவிடுவோம். இப்போது, தீபாவளி, பொங்கல் என்றால்கூட, வீட்டில் குடும்பத்தோடு இருக்க முடியவில்லை. என் தந்தை இறந்து வீட்டில் சடலம் இருக்கும்போதுகூட, இரண்டு கூட்டங்களில் போய்ப் பேச வேண்டிய நிர்பந்தம், தொழிலில் முழுக் கவனம் செலுத்த முடியாததால், ஒரு புறம் வருமானம் இழப்பு. இன்னொரு புறம், எம்.எஸ். படிக்கும் மருமகன், எம்.பி.பி.எஸ். படிக்கும் மகன், எத்திராஜ் கல்லூரியில் இலக்கியம் படிக்கும் மகள் ஆகியோரின் படிப்புச் செலவு... இவை எல்லாம் பொதுவாழ்க்கையில் சகஜம் என்பதால், புன்முறுவலுடன் இந்தப் பாதிப்புகளை ஏற்றுக்கொள் கிறேன்!''

''அரசியல்வாதிகளிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?''

''தேடிப் பார்த்து, பிறகு சொல்கிறேன்!''

''உங்கள் வாழ்க்கை முடிவதற்கு இன்னும் 24 மணி நேரங்களே இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கடைசி நிமிடங்களில் என்ன செய்ய விரும்புவீர்கள்?''

''என் மனைவியைக் கூப்பிட்டு, 'நான், நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். உப சத்தியமாக, என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறேன். இனி அந்த சத்தியத்தை நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறுவேன்!''