என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''ஐஸ்வர்யா ராய்க்கும் காரத்தே கற்றுக் கொடுத்தேன்!''

''ஐஸ்வர்யா ராய்க்கும் காரத்தே கற்றுக் கொடுத்தேன்!''

##~##

''நான்லாம் ரோபோவுக்கே கராத்தே கத்துக்கொடுத்தவன்!''-காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார் வேலூரைச் சேர்ந்த 'கராத்தே’ ரமேஷ்.

  ''பத்தாவதுக்கு மேல படிப்பு ஏறலை. ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சேன். கராத்தே கத்துக்கிட்டு இந்திய அளவில் தங்கப் பதக்கம் வாங்கினேன். சினிமாவில் நுழைய அந்தப் பதக்கம்தான் டோக்கன். 'சட்டம் ஒரு இருட்டறை’ தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரம் 'நீறு பூத்த நெருப்பு’ படத்தில்  என்னைக் கதாநாயகனா அறிமுகப்படுத்தினார். படத்தில் விஜயசாந்தி எனக்குத் தங்கச்சியாக நடித்தார்.  10 வருஷங்களுக்குப் பிறகு, அதே விஜயசாந்திகிட்டே தெலுங்குப் படத்தில் நான் அடி வாங்குற மாதிரி நடிப்பேன்னு கனவுலகூட நினைக்கலை.

'நீறு பூத்த நெருப்பு’   படம் ஆறு நாள்கூடஓடலை. அட்டர் ஃப்ளாப்.  சினிமா சரிவராதுன்னு கராத்தே ஸ்கூல் ஆரம்பிச்சேன்.

''ஐஸ்வர்யா ராய்க்கும் காரத்தே கற்றுக் கொடுத்தேன்!''

ஆனாலும், சினிமா ஆசைவிடலை. சினிமா ஸ்டன்ட் யூனியனில் சேர்ந்தேன். 'தூங்காதே தம்பி தூங்காதே’ படத்துல ஸ்டன்ட் நடிகர் ஆனேன். வரிசையா, ரஜினி, கமல் படங்களுக்கு டூப் போட ஆரம்பிச்சேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளான்னு எல்லா திசைகளிலும் வாய்ப்பு கொட்டியது. அப்பத்தான்  பீட்டர் ஹெயின் மாஸ்டர், 'எந்திரன் படத்துல ரோபாவுக்கு கராத்தே கத்துக் கொடுக்க ணும். முடியுமா’ன்னு கேட்டார். சான்ஸை விடு வோமா?  

'எந்திரன்’ படத்தில் 'சிட்டி சிட்டி ரோபோ’ பாட்டுல  'ரோபோ’ ரஜினி ஐஸ்வர்யா ராய்க்கு கராத்தே கத்துக்கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன் இருக்கும். அந்தக் காட்சிக்காக ரஜினி சாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கராத்தேவின் சில நுணுக்கங் களைக் கத்துக் கொடுத்தேன்.

ரஜினி, விஜயகாந்த், அஜீத், மம்முட்டி, மோகன் லால், பிரசாந்த், பரத், சுமன்னு மும்மொழி நட்சத் திரங்களோடு பழக்கம் உண்டு. 'எந்திரன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் ரஜினி சாரோட போட்டோ எடுத்திக்கிட்டாங்க. ஆனா, நான் ஏற்கெனவே ரஜினி சாரோடு போட்டோ எடுத்து இருந்ததால், ரோபோகூட போட்டோ எடுத்துக்கிட்டேன். மாசத் துல 20 நாட்கள் ஷூட்டிங்., 10 நாட்கள் கராத்தே பள்ளின்னு வாழ்க்கை சுகமாவே இருக்கு!'' - உற்சாகமாகச் சிரிக்கிறார் 'கராத்தே’ ரமேஷ்.

- கே.ஏ.சசிக்குமார், படங்கள்: ச.வெங்கடேசன்