என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

##~##

பொழுது பொலபொலவென விடியத் தொடங்குகையில், கலகலவென மலரத் தொடங்குகிறது வேலூர் பூ மார்க்கெட்!  வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் பூ மார்க் கெட்டுக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மல்லி, கனகாம் பரம், ரோஜா, துளசி, ஜாதி மல்லி என்று ஆட்டோக்களில் பூக்கூடைகள் வந்து இறங்குகின்றன. பூக்களை ஒருபுறம் விறுவிறுவெனக் கட்டிக்கொண்டே, மறுபக்கம் மொத்த விற்ப னைக்காக கூடையில் கொட்டிக் கூவிக் கூவி விற்கிறார்கள்!

 கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூரில் இயங்கி வருகிறது இந்தப் பூ மார்க்கெட். ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த சமயம், இந்தப் பூ மார்க்கெட்டில் கிடைக்கும் ரோஜாப் பூக்கள்  என்றால், அவ்வளவு விருப்பமாம். வேலூர் அப்போது வட ஆற்காடு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கே இருந்து பெங்களூரு, மைசூர், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு தினந்தோறும் பூக்கள் ஏற்றுமதி ஆகின. ஆனால்,  இப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களுக்கு மட்டுமே பூக்கள் அனுப்பப்படுகின் றன.

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

''அரக்கோணம் முதல் திருப்பத்தூர் வரையுள்ள ஏரியாக் களில் இருந்து வரும் பூக்கள் அன்றன்றே விற்பனை ஆகி விடும்!'' என்கிறார் வெங்கடேசன். அதுவும் பெரும்பாலும் காலை 7 மணிக்குள் பூக்கள் காலியாகிவிடுமாம். ''முகூர்த்த நாட்களில் விடிகாலை 2 மணிக்கே  எல்லாப் பூக்களும் வித்துடும். எங்களுக்கு லீவுன்னு எதுவும் கிடையாது. ஏன்னா, தினமும் சந்தைக்கு வரும் அன்னிக்கே விக்கலைன்னா, அது வீணாத்தான் போகும். இங்கே பெரும்பாலும் எல்லாரும் மூணாவது, நாலாவது தலைமுறையாகத்தான் இந்தத் தொழிலைச் செய்துட்டு வர்றாங்க!'' என்கிறார் காதர் பாட்ஷா.

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

பூ மார்க்கெட்டில் கனகாம்பரம்தான் விலை அதிகம். கிலோ

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

250 முதல் 350 வரை விலை போகும். ''ரோஜா மட்டும் பீஸ் கணக்கு. பெரிசுன்னா

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

15, சின்னதுன்னா

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

5'' என்கிறார் சவரிமுத்து. அந்த நேரத்தில் அங்கு வந்த கல்யாணக் கோஷ்டி, மல்லிகைப் பூ விலை விசாரிக்க, 'முழம் 15 ரூவா’ என்றார் சவரிமுத்து. முகத்தைச் சுளித்து உதட்டைப் பிதுக்கி வந்தவர்கள் நகர, 'இங்கே வாப்பா... முழம்

இந்தப் பூக்கள் விற்பனைக்கு!

10 போட்டுக்கலாம்!’ என்று வாடிக்கையாளரை வசப்படுத்த முனைகிறார் வெங்கடேசன். ''யேய்... என்னாப்பா யாவாரம் பார்க்கிறே? இப்படி வர்றவங்க, போறவங்களுக்காக ரேட்டைக் குறைச்சா, தலையிலே துண்டு தான் விழும்!'' என்று அவரிடம் மல்லுக் கட்டுகிறார் சவரி முத்து.

பொக்கே வியாபாரிகள், பூ மாலை வியாபாரிகள், திருவிழா விசேஷங்களுக்காகப் பூ வாங்குபவர்கள் என்று கூட்டம் அதி காலையில் நெக்கித் தள்ள, பூக்களோடு சேர்ந்து நாமும் மணந் தோம்!

-கே.ஏ.சசிக்குமார், படங்கள்:ச.வெங்கடேசன்