Published:Updated:

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!
சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

சென்னைக்கு மிக அருகில் இருக்கிற மிக முக்கியமான ட்ரெக்கிங் ஸ்பாட்!

நாகலாபுரம் - சென்னையிலிருந்து 90கிமீ

ஆந்திராவின் திருப்பதிக்கு அருகில் இருக்கின்ற மலைப்பகுதியில் இது அமைந்துள்ளது. இங்கே ட்ரெக்கிங் செய்கிற வழியில் இயற்கையின் அழகை ஆசை தீர ரசிக்கலாம். கூடவே அழகான அருவிகளிலும் குளிக்கலாம். ஒரே நாளில் போய் திரும்ப முடியும். ஆனால், மிகவும் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும். பதிமூன்று கிலோமீட்டர் நீள்கிற இப்பயணத்தின் இறுதியில் இருக்கிற சுனையில் குளிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். நவம்பர் டூ ஜனவரி இங்கே செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும்

தடா அருவி - சென்னையிலிருந்து 90 கிமீ

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

உப்பலமடகு என்கிற தடா அருவி,  ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து பைக்கிலேயே இளைஞர்கள் போய்வருகிற இடம் இது. நாகலாபுரம் அளவுக்கு கடினமான ட்ரெக்கிங்காக இருக்காது. ஆனால் அதே அளவுக்கு இனிய அனுபவத்தை தரக்கூடியது. பேஸ்கேம்பிலிருந்து காய்ந்துபோன மலையில் தொடங்கும் பயணம் போகப்போக அடர்த்தியான காட்டுக்குள் நுழைந்து,  இறுதியில் ஒரு சூப்பரான அருவியில் முடியும்! இரண்டு கிலோமீட்டர்தான் நடக்கவேண்டியிருக்கும். போகும் வழியெல்லாம் சின்ன சின்ன சுனைகளில் ஜாலி ஆட்டம் போடலாம். போகும் வழியில் ஒரு சிவன் கோயிலும் உண்டு. ஜூனிலிருந்து நவம்பர்வரை சென்றால் சிறப்பான அனுபவமாக இருக்கும்.

செஞ்சி கோட்டை - சென்னையிலிருந்து 160 கிமீ

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

தமிழ்நாட்டில் மிச்ச சொச்சமுள்ள கோட்டைகளில் இதுவும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து மிக அருகில் இருப்பதால் வீக்எண்டில் ஒரே நாளில் போய்வரமுடியும். இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைக்கு வரலாற்று ட்ரெக்கிங் போவது கொஞ்சம் அறிவையும் வளர்த்துக்கொள்ள உதவும். இதில் ஏறுவதும் கடினமானதல்ல. அதனால் குழந்தைகளையும் கூட அழைத்து செல்லமுடியும் என்பதால், குடும்ப சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம் இது. வருடம் முழுக்க எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அதிக செலவும் வைக்காத இடம்.

ஏலகிரி பெருமாடு அருவி - சென்னையிலிருந்து 220கிமீ

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

சென்னைக்கு பக்கத்திலேயே இருக்கக்கூடிய அருமையான மலைவாசஸ்தலம். சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற இடம் இது. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருப்பதால் கொஞ்சம் குளுமையும் இருக்கும். இங்குள்ள பல இடங்களும் ட்ரெக்கிங் போவதற்கேற்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் இங்கே ட்ரெக்கிங் போகலாம். 14ஹெர்பின் பெண்டுகளை கடந்து பயணித்து மலையேறுவதே நல்ல இனிமையான பயணமாக இருக்கும். இங்குள்ள ட்ரெக்கிங்ங்குகளில் சிறந்தது பெருமாடு அருவிக்கு செல்வதுதான். மூன்று கிலோ மீட்டர் நீள்கிற இந்த ட்ரெக்கிங் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். முடிவில் நாம் காண்கிற நாற்பதி உயரமுள்ள அருவியின் அழகு கண்கொள்ள காட்சியாக இருக்கும். கூடவே அருவியில் குளித்தும் மகிழலாம்.

தலக்கோணா அருவி - சென்னையிலிருந்து 190கிமீ

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

அடர்த்தியான ஆந்திர காட்டுப்பகுதியில் சித்தூருக்கு அருகில் இருக்கிறது இந்த அருவி. இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தால் எளிதில் அருவியை அடையலாம். சித்தேஸ்வரசாமி கோயில் ஒன்று வழியில் இருக்கிறது. பல்வேறு வித மூலிகைகளை கடந்து வருவதால், இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. இது ஶ்ரீவெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்ககில் இருக்கிறது. 270அடியிலிருந்து விழக்கூடிய இந்த அருவியை பார்ப்பதே மிகசிறப்பான பயணமாக மாற்றிவிடும்.

- வினோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு