என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நாவலூரின் டி.டி.எஸ் டூரிங் டாக்கீஸ்!

முறுக்கு... அதிரசம்... 10 ரூபாய் டிக்கெட்

##~##

சென்னைக்கே புது நிறம் சேர்க்கும்,  சாஃப்ட் வேர் துறையின் அசுர வளர்ச்சி பழைய மகாபலிபுரம் சாலையில் பளீரென பிரதிபலிக்கும். இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பளபளா மினுமினு  அலுவலகங்கள் அங்கு விண் முட்டி நிற்கும். அந்த வான் உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் நாவலூரில் ஒளிந்திருக்கிறது என்.ஆர்.கே. டூரிங் டாக்கீஸ்.

நான்கு புறமும் தார்பாய் விரித்த திரை மறைப்பு, அழுக்கு ஏறிய பெஞ்சுகள் எனப் பழமை மாறாமல் இயங்கும் அந்த டாக்கீஸில், ஆச்சர்யமாக டி.டி.எஸ். வசதி இருக்கிறது. மாலைக் காட்சி ஆரம் பிப்பதற்கு அறிகுறியாக முதல் மணி அடித்த சமயம் அந்த டூரிங் டாக்கீஸுக்கு விசிட் அடித்தோம்.

நாவலூரின் டி.டி.எஸ் டூரிங் டாக்கீஸ்!

''25 வருஷங்களா இயங்கும் இந்த தியேட்டரை 17 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன்.  அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர் தியேட்டர்ல ரெண்டு ரூபாய் சம்பளத்துக்கு ஆபரேட்டரா இருந்தேன். வழக்கமா தினமும் சாயங்காலம் ரெண்டு ஷோ போடுவோம். சனி, ஞாயிறுகளில் மட்டும் பகல்ல எக்ஸ்ட்ரா ஒரு ஷோ. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் படங்கள் அதிகமா ஓடுச்சு. பிறகு விஜய், அஜீத் படங்கள். பெஞ்ச் டிக்கெட் 10 ரூபாய். பாக்ஸ் டிக்கெட் 15 ரூபாய். அதுக்கு முன்னாடி மண் தரை தான். தரையில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாதுனு அரசாங்கம் சட்டம் போட்டதால், வேற வழி இல்லாம மண் தரையில் பெஞ்ச் போட் டோம்.

நாவலூரின் டி.டி.எஸ் டூரிங் டாக்கீஸ்!

சாஃப்ட்வேர் கம்பெனி ஆட்கள், கட்டட வேலை செய்யும் வட இந்தியர்களுக்காக நாலஞ்சு வருஷமா ஹிந்தி படங்களும் நிறையப் போடுறோம்.  தொழிலாளிகள் வாங்குற சம்பளத்துக்கு இங்கே இருக்குற சினிமா மால்களில் 200, 300 கொடுத்து படம் பார்க்க முடியாது. அதான் இங்க வந்து திருப் தியா படம் பாத்துட்டு போறாங்க!''  எனும் தியேட் டர் உரிமையாளர் கன்னியப்பன், டூரிங் டாக்கீஸின் ட்ரெண்ட் குறித்து தொடர்கிறார்.

''இங்கே 'அம்மன்’ படம் 15 நாள் ஓடுச்சு. 'சூரிய வம்சம்’ மூணு வாரம் ஓடுச்சு. எங்க தியேட்டர்ல ரொம்ப நாள்(!) ஓடின படங்கள் இவைதான். இது போக, விஜய் நடிச்ச 'வசீகரா’ படம் நல்லா போகும். இதுவரை 10 தடவைக்கும் மேல அந்தப் படம் போட்டு இருக்கோம். இப்பப் போட்டாலும் தொடர்ந்து ஒரு வாரம் ஓடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாரக் கடைசிகளில் ஒரு ஷோவுக்கு ஆயிரம் பேர் வருவாங்க. டி.டி.எஸ். போட்டா இன் னும் கூட்டம் வரும்னு நினைச்சு, அஞ்சு லட்சம் வரை செலவு பண்ணி ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் டி.டி.எஸ். போட்டேன். எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல டி.டி.எஸ். இருக்குற ஒரே டூரிங் டாக் கீஸ் நம்மதுதான்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஷோவுக்கு இப்ப 100 பேர் வர்றதே பெரிய விஷயமா இருக்கு.

நாவலூரின் டி.டி.எஸ் டூரிங் டாக்கீஸ்!

செங்கல்பட்டு வட்டாரத்தில் மட்டும் 157 தியேட்டர் இருந்தது. இப்ப அது 56 தியேட்டர்களா குறைஞ்சிருக்கு. கேபிள் டி.வி, திருட்டு வி.சி.டி, இலவசமா கொடுத்த டி.வி-ன்னு எங்க பாதிப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள். முன்னே இங்க 15 பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. தியேட்டருக்கு வர்ற வங்களைவிட இங்கே வேலை செய் றவங்க கூட்டம் அதிகமாக இருந்த  மாதிரி இருந்தது. அதான், இப்ப நாலு பேரை மட்டும் வேலைக்கு வெச்சிருக்கேன்!''  சோகப் புன்ன கையுடன் முடிக்கிறார் கன்னியப்பன்!

- பா.ஜெயவேல், படங்கள்: ஜெ.தான்யராஜு