Published:Updated:

டீன் கொஸ்டீன்

அம்மாவுக்கு டி.பி குழந்தைக்குப் பரவுமா?

டீன் கொஸ்டீன்

அம்மாவுக்கு டி.பி குழந்தைக்குப் பரவுமா?

Published:Updated:
##~##

கே.ராணி, திருச்சி-4.

 ''25 வயது இல்லத்தரசி நான். எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சமீபத்தில் ஒரு பரிசோதனையில் எனக்கு டி.பி. இருப்பதை உறுதி செய்தார்கள். இந்த நோய் பாதிப்பு என் குழந்தையையும் பாதிக்குமா? இந்தப் பயத்தினால், என் குழந்தை அருகில் செல்லவே பயமாக இருக்கிறது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர்.பால் சுதாகர், அப்போலோ மருத்துவமனை.

டீன் கொஸ்டீன்

''Mycobacterium tuberculosis என்னும் பாக்டீரியா உடலில் இருந்தால்தான், பரிசோதனையில் டி.பி. பாசிட்டிவ் என்று ரிசல்ட் காண்பிக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, டி.பி. தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஆனால், கவலைப்படாதீர்கள். இந்த நோய் நீங்கள் மிரளும் அளவுக்குக் கொடுமையான நோய் அல்ல. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட சிகிச்சையில் நோயைக்

டீன் கொஸ்டீன்

கட்டுப்படுத்திவிடலாம். எனினும், நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், உங்கள் குழந்தையிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. ஏனெனில், பொதுவாகவே குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். வீட்டில் இருக்கும்போதும், மூக்கு, வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். தும்மும்போது, வாயை மூடிக்கொள்ளுங்கள். தீவிர சிகிச்சை தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே, டி.பி. நோய் நெகட்டிவ் நிலைக்கு வந்துவிடும். அதன் பிறகு, உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு!''

சரண்யா, கோவை.

''கல்லூரியில் படிக்கும் டீன்-ஏஜ் மாணவி நான். எனக்கு ஆண்களைப்போல உதட்டுக்கு மேலே முடி வளர்கிறது. 'ரோமங்களை அகற்றினால் முடி இன்னும் அதிகமாக வளரும்’ என்று என் தோழிகள் பயமுறுத்துகிறார்கள். எங்கே கிண்டல் செய்வார்களோ என்று பயந்து, நான் எங்கும் வெளியில் செல்வது இல்லை. இந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்வது?''

வீணா, அழகுக் கலை நிபுணர்.

டீன் கொஸ்டீன்

''ஹார்மோன் மாற்றத்தினால், சில பெண்களுக்கு 13 வயது முதலே உதட்டுக்கு மேல் முடி வளர ஆரம்பிக்கும். சமயங்களில் சீரற்ற ஹார்மோன் சுரப்பு காரணமாக, அதிக அளவில் ரோம வளர்ச்சி இருக்கலாம். தற்காலி கத் தீர்வாக,  த்ரெட்டிங், வேக்ஸிங் முறைகள் கை கொடுக்கும். சிலர் அழகு நிலையம் செல்லாமல், ஹேர் ரிமூவிங் கிரீம் மூலம் தாங்களாகவே முடிகளை அகற்றுகிறார்கள். இதனால் அந்த இடம் கறுப்பாகிவிடுவதோடு, அலர்ஜி ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. முடிகளை நிரந்தரமாக அகற்ற டெர்மடாலஜிஸ்ட் நிபுணர்களின் ஆலோசனைப்படி லேசர் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம். இதனால், 10 முதல் 15 வருடங்கள் வரை ரோம வளர்ச்சி யைத் தடுக்கலாம்!''

ஆ.சுரேஷ், துறையூர்.

''மொபைல் பேங்கிங் வசதி என்றால் என்ன? அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?''

டீன் கொஸ்டீன்

எம்.பாலகிருஷ்ணன், தலைமைச் செயல்பாடு அதிகாரி, தேசியப் பணப் பட்டுவாடா நிறுவனம்.

''மொபைல் பேங்கிங் வசதி மூலம் மற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு, இருந்த இடத்தில் இருந்து பணம் அனுப்பவோ, பெறவோ, முடியும். இதை IMPS - Interbank Mobile Payment Service  என்பார்கள். இந்த வசதி தற்போது ஸ்டேட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 20 வங்கிகளில் செயல்பாட்டில் இருக்கிறது. ஒரு வங்கியின் வேறு கணக் குக்கு அல்லது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றத்தை மேற் கொள்ளலாம். இந்த வசதி இருக்கும் ஏதாவது ஒரு வங்கியை அணுகி, உங்கள் செல்போன் நம்பரைக் கொடுத்தால், அதனை வங்கிக் கணக்கோடு இணைத்து, மொபைல் பேங்கிங் சேவைக்கான MMID ( Mobile Money Identifier)  என்கிற பிரத்யேக ஏழு இலக்க அடையாள எண் தருவார்கள். இதே போன்ற வசதியைப் பெற்றிருக்கும் உங்கள் உறவினர், நண்பர்களின் கணக்குக்கு மொபைல் பேங்கிங் வசதி மூலம் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் நீங்கள் பணத்தை அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பிய தொகை, உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட விவரம், உடனடியாக உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வரும். இதேபோல், பணம் பெறுபவருக்கும் எஸ்.எம்.எஸ். தகவல் செல்லும். அதன் பிறகு ஏ.டி.எம். கார்டு மூலம் உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பெற்றோர்கள், வெளியூரில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு இதன் மூலம் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளலாம். ஆனால், இதைத் தனிமையான இடத்தில் வைத்துச் செயல்படுத்துங்கள். மேலும், மொபைல் பேங்கிங் ரகசிய இலக்கம் ரகசியமாகவே இருக்க வேண்டும்!''  

ப.தைலம்மாள், திண்டுக்கல்.

''என் நெருங்கிய உறவினர் நியூஸிலாந்து குடியுரிமை பெற்று அங்கே பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டார். அதைத் திரும்பப்பெறும் நடைமுறைகள் என்ன?''

கே.ருக்மாங்கதன், துணை பாஸ்போர்ட் அலுவலர்.

''தாமதிக்காமல் உடனடியாக அந்த நாட்டு காவல் நிலையம் ஒன்றில், பாஸ்போர்ட் தொலைந்த விவரத் தைப் புகாராகத் தெரிவியுங்கள். அந்தப் புகாரின் நகலுடன் சுய விவரங்களையும் பாஸ்போர்ட் விவரங்களையும் தெளிவாக எழுதி அனுப்பினால்,அவர்களுக்கு மீண்டும் பாஸ்போர்ட் வழங்குவார்கள்.இந்த நடைமுறையின்படி பாஸ்போர்ட் கிடைக்கக் குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அதற்குள், அவசர வேலையாக இந்தியா வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உடனடியாக நியூஸிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி, 'எமர்ஜென்ஸி சர்டிஃபி கேட்’ என்ற விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுத்து அத்தாட்சி பெற்றால், அதன் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப முடியும். ஆனால், இந்தச் சான்றிதழின் ஆயுள் ஒரு மாதம் மட்டுமே. அதுவும் 'ஒன் வே’ பயணத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும். மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிக்க பாஸ்போர்ட் அலுவலகத்தில் காணாமல் போன உங்கள் பாஸ்போர்ட் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு, புதிய பாஸ்போர்ட் பெற வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism