16-11-2009

ஹ்ஹா... ஹ்ஹூ..

கற்றுத் தருகிறார் ஷீஹான் ஹூசைனி...

இங்கு கற்றுத்தரப்படும் பயிற்சிகளை நிஜமாகவே ஆபத்து சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலோ, நண்பர்களிடத்திலோ அல்லது வேறு எங்கும் எப்போதும் பயன்படுத்தக் கூடாது. இந்த உறுதிமொழியை மனதில் கொள்ளுங்கள். சரியா?

டாங் சு டோ...

இம்முறை நாம் பயன் படுத்தப்போகும் கலையின் பெயர் 'டாங் சு டோ' (Tang soo do). இது கொரிய நாட்டில் உருவான கலையாகும். மாஸ்டர் ஹவாங் கீ (Hawng kee) இதை உருவாக்கினார். ஜப்பானிய கராத்தே கலை, டேக்யோன் எனும் கொரிய கலை, சீனக் கலையான குங்ஃபூ ஆகியவற்றில் இருந்த சிறப்பான அம்சங்களைக் கொண்ட இந்த புதிய முறைக்கு, டாங் சு டோ என்ற பெயரை சூட்டியவர் சுங் டோ க்வான் (chung do kwaan).. மறைந்த ஹவாங் கீ இந்தக் கலைக்கு 'மூ துக் க்வான்' (Moo duk kwan)  என்று பெயரிட்டார். 1957 முதல் இதை 'சூ பஹ்க் டோ' (Soo bahk do) என்று அழைக்கிறார்கள். இந்தக் கலையில் 10-ம் நிலை பெல்ட் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியவர் ஹாலிவுட் நடிகர் 'சக் நாரிஸ்'. இவர் புரூஸ்லீயின் 'ரிட்டர்ன் ஆஃப் த டிராகன்' படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் தோன்றி உலகப் புகழ்பெற்றவர்.

இந்தக் கலையின் அமைப் புக்கு இப்போதைய உலகத் தலைவராக இருப்பவர் ஹெச்.சி. ஹவாங். இவர் ஹவாங் கீ-யின் மகன். இவரிடம் 1982-லேயே நேரிடையாகப் பயிற்சி பெற்ற முதல் இந்தியரான ஹ§சைனி, "இதுவரை நான் கற்ற தற்காப்புக் கலைகளில் மிகவும் சிறந்த கலை இது" என்கிறார்.

தகவல் டாங் சு டோ முறையில் மிக உயர்ந்த நிலை 'மிட் நைட் ப்ளூ பெல்ட்' ஆகும். மற்ற கலைகளில் பிளாக் பெல்ட்தான் உயர்ந்த நிலை.

தாக்கும் முறை டாங் சு டோ என்ற கலையில் 'ட்வி ஓ சா கி' (Dwi oh cha gi - jump kick) என்ற யுக்தியையும் 'சிட் பஹ்ல் கி பப்' (Chit Pahl Gi Bup-stomp kick) ஆகிய யுக்தியையும் பயன்படுத்தி, டாங் சு டோ சுட்டி மேக்ஸ், தன்னை அரிவாள் கொண்டு மிரட்டி, கடத்திச் செல்ல வந்திருக்கும் கடத்தல்காரனைத் தாக்கி... எப்படித் தப்பிக்கிறான் என்பதைப் பார்ப்போம்.

1. ஸ்கூல் வேனுக்குக் காத்திருக்கும் டாங் சு டோ சுட்டி மேக்ஸ்-ஐ எதிரி கடத்திச் செல்ல மிரட்டுகிறான். அப்போது பதற்றம் இல்லாமல் செயல்படுகிறான் சுட்டி. (இல்லையெனில் எதிரி நம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு ஓடிவிடுவான்.)

2. கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகும் கடத்தல்காரனின் கையை அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவனது மணிக் கட்டில் கட்டை விரலுக்கு மேலே நரம்பில் திடீரெனக் கடிக்கிறான் மேக்ஸ்.

3. எதிரி வலி தாங்காமல் கையிலிருக்கும் அரிவாளைப் போட்டுவிட்டு நிலை தடு மாறுகிறான். அதே வேளையில் டாங் சு டோ சுட்டி மேக்ஸ், தன்னுடைய ஸ்கூல் பேக்-ஐ கழற்றி விட்டபடி இரண்டடி பின்னால் செல்கிறான்.

4. அடுத்து, இரண்டு கால்களாலும் தரையை உதைத்து ஆகாயத்தில் எழும்பியபடி இருக்கும் போது(தாவல் உச்சத்தில் இருக்கும்போது) வலது நுனி காலால் 'ட்வி ஓ சா கி' என்ற யுக்தியால் எதிரியின் கழுத்து நரம்பில் தாக்குகிறான். கவனம் தாக்கும் போது உடலின் முழு பலத்தையும் நுனிக்காலுக்கு கொண்டு வந்து தாக்க வேண்டும்.

5. வலி தாங்காமல் எதிரி நிலைதடுமாறி தரையில் விழுகிறான்.

6. டாங் சு டோ சுட்டி மேக்ஸ் எதிராளியைத் தாக்கிவிட்டு, ஸ்டெடியாக இரண்டு கால்களையும் நிலத்தில் ஊன்றி... அடுத்த தாக்குதலான 'சிட் பஹ்ல் கி பப்' முறையில் தாக்குவதற்குத் தயாராகிறான். இது மிகவும் பயங்கரமான யுக்தியாகும். எதிராளி நிச்சயம் நம்மைத் தாக்க வருவான் என்ற சந்தேகம் இருந்தால் மட்டுமே இந்த யுக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

7. 'சிட் பஹ்ல் கி பப்' என்ற இந்த யுக்தியை நம் முதல் தாக்குதலால் எதிரி கீழே விழுந்தவுடன்... எதிராளியின் முக்கியமான பாகத்தில் மிதிப்பதற்காக பயன்படுத்தப் படவேண்டிய 'டெக்னிக்' ஆகும். இதைச் செய்வதற்கு இடது காலில் உடலின் எடை முழுவதையும் கொண்டு வந்து, வலது காலை மடக்கி நன்றாக மேலே தூக்கி, முழு உடல் பலத்தை யும் வலது காலுக்குக் கொண்டு வந்து எதிராளி யின் கழுத்தில் தாக்கும்போது, உடலின்அனைத்து எடையையும் கால்களுக்குக் கொண்டு வந்து கழுத்தில் மிதிக்க வேண்டும். இந்த யுக்தியைச் சரியாகப் பயன்படுத்தி னால், எதிராளி சுய நினைவு இழக்கும் நிலை ஏற்படலாம்.

டிப்ஸ் நீச்சல் தெரிந்த சுட்டிகள்... நீச்சல் குளத்தின் கரையில் இருந்து குளத்தில் குதித்து, 'ட்வி ஓ சா கி' உயர எழும்பி குதிக்கப் பழகலாம்.

அதேபோல, 'சிட் பஹ்ல் கி பப்' யுக்திக்காக இரண்டு தலையணைகளை மிதித்துப் பழகலாம். தினமும் குறைந்தது 30 முறை செய்து பழக வேண்டும்.

கவனம் எதிராளிக்கும் நமக்கும் இடையில் சரியான தூரம் இருந்தால் மட்டுமே நமது தாக்குதல் சிறப்பாக அமையும்.

-மாடல் மேக்ஸ்--(II),
அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல், சென்னை.