16-11-2009

பம்பிள்பீ எங்கே?

இரா.முருகன்

ஆஸ்திரேலியாவில் இப்போது ஒரு புது வேலை உருவாகி இருப்பதாக கார்டியன் செய்தித்தாளில் அண்மையில் நியூஸ் வந்தது. 'தக்காளிச் செடியை உலுக்க வேண்டும்'.

ஆம்! நாள் முழுக்க தோட்டங்களில் சுற்றித் திரிந்து, ஒவ்வொரு தக்காளிச் செடியின் பக்கத்தில் போய், மெள்ள அசைக்க வேண்டும். செடியின் பூக்களில் இருந்து மகரந்தத் துகள்கள் கீழே கொட்டும். அது காற்றில் பறந்துபோய் அயல் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும். இந்த வேலையைத் திறம்படச் செய்யத்தான் ஆட்கள் தேவை. தாராளமான கூலி உண்டு!

இந்தச் செய்தியைப் படித்ததும் இதென்ன கலாட்டா என்று தோன்றும். ஆனால், இது உண்மை.

பம்பிள்பீ (Bumblebee)  எனப்படும் குண்டுத் தேனீ இனம் மிகவும் குறைந்துவிட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள், ஆஸ்திரேலியாவின் அறிவியலாளர்களும் இயற்கை விஞ்ஞானிகளும்.

கடந்த எழுபது வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பம்பிள்பீ-களின் எண்ணிக்கை குறைந்து வந்து, இப்போது கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்டது. ஆனாலும் செடி, கொடி, மரங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் தக்காளிச் செடியும் உண்டு. முக்கியமாக, ஆஸ்திரேலியா நாட்டில் விளையும் தக்காளி.

அங்கே திடீரென தக்காளியின் உற்பத்திகுறைந்ததால் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டு யோசித்தார்கள். சட்டென்று விடை கிடைத்தது. 'பம்பிள்பீ எங்கேய்யா?' அடித்துப் பிடித்துத் தேடினார்கள். அது போயே போச்சு!

பம்பிள்பீ இனம், தேன் சேகரித்து வைப்பது மட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான பணியை வெளி உலகத்துக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்து வந்திருக்கின்றது. அது... ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு மகரந்தத்தை இலவசக் கூரியர் டெலிவரி செய்ததுதான். பம்பிள்பீ காசு வாங்காமல் செய்த காரியம் இல்லையா இது. உடல் கனமான இந்தத் தேனீ சாவதானமாகப் பறக்கும்போது, அதைப் பிடித்துக் கொன்றதும்... இதையே ஒரு விளையாட்டாக இத்தனை காலம் செய்ததும் வினையாகிவிட்டது. குண்டுத் தேனீ கொட்டினால் ரொம்ப வலிக்கும் என்ற தவறான எண்ணமும் இந்த பம்பிள்பீ வேட்டைக்குக் காரணம்.

இது தவிர, விவசாயத்துக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தியதும் மிக முக்கியமான காரணம் என்கிறார்கள்.

மனிதர்கள் பூச்சி வர்க்கங்களைப் படுவேகமாக அழித்து வருகிறார்கள். கொசுவையும், கரப்பான் பூச்சியையும் தொலைத்தால் சரிதான். மகரந்தச் சேர்க்கை நடத்தி விவசாயிக்கு நண்பனாகப் பறக்கும் தேனீயையும் அழிக்க வேண்டுமா? நமக்கு தேனை சேகரித்துக் கொடுப்பவை இவைதானே!

இயற்கையையும் நமக்கு நல்லது செய்கிற உயிரினங்களையும் அழித்துக் கொண்டே போனால் குண்டுத் தேனீ மாதிரி எதிர்கால உலகில் தேனீ, காக்கை, கிளி கூடக் காணாமல் போய்விடும். இப்போதே சென்னை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிவதில்லை. இப்படியே போனால்... அடுத்தடுத்த தலைமுறைகள் விலங்குகளைப் பற்றி பாடப் புத்தகத்தில்தான் படிக்க முடியும்.