Published:Updated:

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

Published:Updated:
##~##

''அவுட்டோர் ஷூட்டிங்குக்காக தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் 35 நாட்கள் தங்கி இருந்த ஒரே ஊர்... நம்ம பாகனேரிதான்!'' - 80-களில் செட்டி நாட்டுப் பகுதிகளில் படமாக்கப் பட்ட 'முரட்டுக் காளை’ ஷூட்டிங் குறித்துப் பெருமை பேசுகிறார் குமரேசன்.

 அவுட்டோர் ஷூட்டிங் கலாசாரம் துவங்கிய பிறகு, சினிமா கம்பெனிகளின் தவிர்க்க முடியாத படப்பிடிப்புத் தளமாக மாறிவிட்டது செட்டி நாடு ஏரியா. தொந்தரவு தராத மக்கள், பிரமாண்ட பங்களாக்கள், கையைக் கடிக்காத பட்ஜெட், ருசியான சாப்பாடு - இவைதான் சினிமா யூனிட்களின் செட்டி நாடு முற்றுகைக்குக் காரணம். குமரேசன், கண்ணன் இருவர்தான் செட்டி நாட்டுப் பகுதிக்கு சினிமா மேனேஜர்கள். அங்கு டென்ட் அடிக்கும் சினிமா பிரபலங்களுடன் 'ஜஸ்ட் லைக் தட்’ நெருங்கிப் பழகு பவர்கள்,  தங்கள் அனுபவம் பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

''உலகப் புகழ் ரெஸ்லிங் வீரர் 'கிரேட் காளி’ வந்தார். அவரு உட்கார்ந்து இருந்தாலே, நிக்கிற மாதிரிதான் தெரியும். இனோவா காரில் ஒரே ஒரு ஸீட் வெச்சு ஆல்டரேஷன் செஞ்சுதான் அவரைக் கூட்டிட்டு வந்தோம். மதுரை தாஜ் ஹோட்டல்ல அவருக்காக 15 அடி நீளப் படுக்கை தயார் பண்ணோம். ஒரு வேளைக்கு 40 ரொட்டி, ரெண்டு முழுக் கோழியை சர்வசாதாரணமா உள்ளே தள்ளுவார்.

மனோரமா ஆச்சி வந்தாங்கன்னா, மறக்காம செட்டி நாட்டு ஸ்பெஷல் மணக்கோலம், சீப்புச் சீடைகளை வாங்கிக்குவாங்க. இங்கே இரண்டு முறை தனது பிறந்த நாள் கொண்டாடிய பிரபு,யூனிட்ல இருக்கிறவங்க ஆரம்பிச்சு, ரூம் பாய் வரை எல்லாருக்கும் புது டிரெஸ் எடுத்துக் கொடுத்து சந்தோஷப்பட்டார்!'' என்கிறார் குமரேசன்.

அப்படியே தொடர்கிறார் கண்ணன், ''இயக்குநர் ஹரி, தன் முதல் படமான 'தமிழ்’ படத்தை இங்கேதான் எடுத்தார். அந்தப் படம் ஹிட் ஆனதால், அடுத்தடுத்த படங்களில் ஒரு ஸீனையாவது இங்கே எடுத்திருவார். ஒவ்வொரு தடவை ஷூட்டிங் வரும் போதும், 'தமிழ்’ படம் எடுத்த 'சித்ரா மேனா’ வீட் டுப் படியில் கால்வெச்சு மிதிச்சுட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார். விக்ரம் ரொம்ப ஜாலி டைப். தினமும் அவருக்கு ஜிம் போயே ஆகணும். இங்கே ஷூட்டிங் வந்தா, காரைக்குடியில் இருக்கும் 'சுகன்யா ஜிம்’முக்குப் போயிருவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது சந்தோஷமான நியூஸ் சொன்னா அவங்களுக்குப் பரிசு கொடுப்பது சூர்யா ஸ்டைல். 'சிங்கம்’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, தியா பிறந்தாள். அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, யூனிட்ல இருந்த 140 பேருக்கும் புது டிரெஸ் எடுத்துக் கொடுத்து பிரியாணி விருந்துவெச்சார். ஆர்யா காலையில் எதுவும்  சாப்பிட மாட்டார். மதியம் கோழியும் சப்பாத்தியும் கட்டாயம் இருக்கணும்.

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

ராஜ்கிரணும், நாசரும் எவ்வளவு பிஸியா இருந்தாலும், அஞ்சு வேளை தொழுவாங்க. பிரகாஷ் ராஜ், கலைப் பொருள் பிரியர். செட்டி நாட்டு பங் களாக்களைப் பிரிச்சு விக்கிறாங்கன்னு கேள்விப் பட்டா, உடனே கிளம்பி வந்திருவார். இங்கே வாங்கின கலைப் பொருட்களை ஹைதராபாத் வீட்ல அழகா அடுக்கிவெச்சிருக்கார். ஹரியும் விக்ரமும் ஒரு செட்டி நாடு பங்களாவை வாங்கும் முனைப்பில் இருக்காங்க!'' என்றவர் வடிவேலுவைப் பற்றியும் சொன்னார்.

வடிவேலுவின் 403 நம்பிக்கை!

'' 'அரண்மனைக் கிளி’ படத்துக்காக மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பஸ்ல வந்த வடிவேலு தூக் கக் கலக்கத்துல குன்றக்குடியிலேயே இறங்கிட்டாரு. அதோட மலை ஏறி முருகனைக் கும்பிட்டு காரைக் குடிக்கு வந்திருக்கார். அப்போ மலர் ஹோட்டல்ல 403 நம்பர்  ரூம்ல  தங்கி இருக்கார். அந்த சென்டி மென்ட்படி இன்னிக்கும் செட்டி நாடுப் பகுதிக்கு ஷூட்டிங் வந்தா, குன்றக்குடி மலை ஏறி சாமி கும் பிட்டுட்டு, மலர் ஹோட்டலின் ரூம் நம்பர்403-ல் தான் தங்குவார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை!''

 - குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

வடிவேலுவின் 403 நம்பிக்கை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism