Published:Updated:

ஆடி வா பொம்மையா!

ஆடி வா பொம்மையா!

##~##

கூந்தலை  விரித்துப் போட்டு  திருதிருவென முறைக்கும் விழி களுடன் அமர்ந்திருக்கிறார்கள் பெண்கள். உடுக்கையை கையில் எடுத்தபடி இறங்கி வருகிறார் கோடாங்கி தங்கவேலு. நீல நிற புடவை  கட்டிய பெண் நாக்கைத் துருத்தி முறைக்க, 'உன் பேரு என்ன?’ என்று கேட்கிறார் தங்க வேலு. 'பொம்மையா!’ என்று ஆண் குரலில் பதில் வருகிறது. 'உன் சாதி என்ன?’- அடுத்த கேள்வி. (பேய்களிலும் சாதி உண்டாம்!) உடுக்கைக் கயிற்றின் டெம்போவை சரிசெய்து ரிதம் பார்த்து 'டுன்... டுன்டா.. டுன்... டுன்டா’ என்று தங்கவேலு அடிக்க,  'ராஜகம்பளம்’ என்கிறார் அந்தப் பெண். உடுக்கைச் சத்தத்துக்கு ஏதுவாக அந்தப் பெண்ணின் தலை ஆட ஆரம்பிக்கிறது. கஞ்சிரா அடிக்கும் லட்சுமணப் பெருமாள் பக்கம்  தங்கவேலு திரும்ப, சமிக்ஞை புரிந்து கஞ்சிராவை  அடிக்கத் துவங்குகிறார் லட்சுமணன். நாதச் சத்தம் தாடிச்சேரி மலை மீது எதிரொலிக்கிறது.

ஆடி வா பொம்மையா!

 தலையை விரித்துப் போட்டு, உடலை முறுக்கி 'பொம்மையா’ ஆட, அருகில் இருக்கும் மற்ற 'பேய்’கள் கொஞ்சம் நிதானமாக ஆடுகின்றன.

'யாரா இருந்தாலும்  
எவரா இருந்தாலும்
இறங்கி வா... ஓடி வா!
வில்லெடுத்து  
வில்லெடுத்து ஆடுகிறேன்...
ஆடி வா பொம்மையா
இறங்கி வா...                
பேயாக ஆடும் பொம்மையா
நாகம்மாள் தெய்வத்தோடு
அடங்கிடு!’
- எனத் தொண்டை நரம்பு புடைக்க லட்சுமண பெரு மாள் பாட, இன்னும் வேகம் கூட்டி ஆடுகிறார் 'பொம்மையா’. உடுக்கை அடித்தபடி 'கிட்ட வா.... போடு மண்டி’ என உறுமுகிறார் கோடாங்கி. பணிந்து மண்டி இடுகிறார் அந்தப் பெண். ''எத்தனை பேய் உன்னை பிடிச்சி இருக்கு?'' என்ற கேள்விக்கு ''பொம்மையா மட்டும்தான்!'' என்று ஆண் குரலில் பதில் வரு கிறது. ''இந்தக் கிருஷ்ணன் மேல் சத்தியமா எத்தனை ஆள்னு சொல்லு!'' எனக் கோடாங்கி அதட்ட, ''ஒரு ஆள்தான்!'' என்று விசும்புகிறது குரல். அடுத்த நிமிடம் பிரம்புக் கம்பால் சுளீர்என அடிக்கிறார் கோடாங்கி. திடுக்கிட்டுப் பின் வாங்குகிறார் அந்தப் பெண். ''இன்னும் எத்தனை பேருடா இந்த சந்நிதியில் வந்திருக்கீங்க?'' எனக் கோடாங் கிக் குரலை ஹைபிட்ச்சில் உயர்த்த, ''கிருஷ்ணவேணி'' என்கிறது கரகர குரல். ''அவஎன்ன சாதி? எப்படிச் செத்தா?'' என்று லட்சுமணப் பெருமாள் கேட்க, ''காதலிக்கக் கூடாதுன்னு சொன்னதால தென்ன மரத்து மாத்திரையை குடிச்சுச் செத்தேன்'' என்று மென்மையான பெண் குரலில் வருகிறது பதில். ''பொம்மையா போய் கிருஷ்ணவேணி பேசுறியா... பேசு பேசு!'' என்கிற லட்சுமணப் பெருமாள், ''இன்னும் ஆடுறியா இல்லை... இறங்குறியா?'' என்று சாய்ஸ் கொடுக்கிறார். ''ஆடுறேன்'' என்று ஆர்வமாகப் பதில் கொடுக்கிறார் 'கிருஷ்ணவேணி’! உடுக்கை சத்தம் மீண்டும் ஒலிக்க, தலைமுடி பறக்க, பேயாட்டம் போடுகிறார். உடுக்கைச் சத்தம் நின்றவுடன்  சுவிட்ச் ஆஃப் செய்ததுபோல ஆட்டத்தை நிறுத்துகிறார். அந்தப் பெண்ணின் முன் நெற்றி முடியைப் பிடித்து இழுத்து, ''முக்காலும் சத்தியமா... நாகம்மாள் மேல் சத்தியமாப் போயிடுவியா?'' எனக் கோடாங்கி கேட்க ''போயிடுறேன்!'' என்று உறுதி கொடுக்கிறார் அந்தப் பெண். அவருக்கு கோடாங்கி திருநீர் பூசிவிட, சோர்ந்து விழுகிறார். காத்திருந்த உறவினர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிச் செல்கிறார்கள்.

ஆடி வா பொம்மையா!

அடுத்ததாக முன் வந்து மண்டி போடுகிறார் அடுத்த பெண். ''யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் இறங்கி வா...!'' என லட்சுமணப் பெருமாள் கஞ்சிராவை அடிக்க... கோடாங்கி தங்கவேலு சுதி பிடித்து உடுக்கை அடிக்க ஆரம்பிக்கிறார். ''ம்ம்ம்ம்ம்ம்!'' என்று அடி வயிறு உறும, கண்கள் சொருக, நாக்கைத் துருத்தியபடி ஆட ஆரம்பிக்கிறார் அந்தப் பெண்!

- இரா.முத்துநாகு

ஆடி வா பொம்மையா!
அடுத்த கட்டுரைக்கு