Published:Updated:

ஜெயிச்சாச்சு...

ஜெயிச்சாச்சு...

ஜெயிச்சாச்சு...

ஜெயிச்சாச்சு...

Published:Updated:
##~##
'வ
ள்ளலின் வாரிசு’, 'கழகத்தின் காவல் தெய்வம்’, 'இந்தியாவின் இரும்புப் பெண்மணி’ என்று ரத்தத்தின் ரத்தங்களால் வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் பேனர்களில் ஜெயலலிதா புன்முறுவல் பூத்துக்கொண்டு இருக்க, ஜெய லலிதாவின் பதவி ஏற்பு விழா கொண்டாட்டம்... சென்னை கடற்கரைச் சாலையைத் திணறடித்துவிட்டது!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 எழிலகம் அருகே ரண்டக்க ரண்டக்க ரண கள ஆட்டத்தில் இருந்த மகளிர் அணியினரிடம் செவி சாய்த்தோம். ''அம்மா ஆட்சிக்கு வந்துட்டாங்க. இனிமேல் விலைவாசி குறைஞ்சுடும். மின்வெட்டு, தண்ணிப் பிரச்னை இருக்காது. ரௌடியிசம் ஒழியும். இன்னிக்குத்தான் எங்களுக்குத் தீபாவளி!'' உற்சாகம் பொங்குகிறது காட்பாடி பிரேமாவின் வார்த்தைகளில். ஜெயலலிதா முதல்வரானால் மண் சோறு சாப்பிடுவதாக வேண்டிக்கொண்டார்களாம் விஜயா, செந்தாமரை, குமாரி, பாப் பம்மாள் உள்ளிட்டக் குழு. ஊருக்குச் சென்றதும் முதல் வேலை வேண்டுதல் நிறைவேற்றுவதுதானாம்.

ஜெயிச்சாச்சு...

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் கனகம், அங்கம்மாள் குழுவினர், ''அம்மா ஜெயிச்சா முத்து மாரியம்மனுக்குப் பொங்கல், திருவேற்காட்டில் அர்ச்சனை, அபிஷேகம், பெரிய பாளையத்துக்குப் பாதயாத்திரைன்னு எங்க வேண்டுதலை நிறைவேத்தப் போறோம்!'' என்று கோரஸ் கோஷம் போடுகின்ற னர்.

''எனக்கு அம்மான்னா உயிரு. ஒரு வாரம் சோறு சாப்பிடாம வெறும் தண்ணி மட்டுமே குடிச் சுட்டு இருக்கேன். அம்மா பதவி ஏற்பு முடிஞ்சுதான் உண்ணா விரதத்தை முடிப்பேன்!'' என்று பையில் இருந்து எடுத்து, சாப் பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக் கிறார் சீதாலட்சுமி.

ஜெயிச்சாச்சு...

எம்.ஜி.ஆர். சமாதிக்குள் அதீத உற்சாக மிகுதியில் தொண்டர்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் 'நான் ஆணையிட்டால்’ என்று பாடிய படி அங்கும் இங்கும் எகிறி குதித் துக்கொண்டு இருந்தனர். 'எம்.ஜி.ஆர். சங்கரனை மடக்கி னோம். ''37 வருஷமா தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடிட்டு இருக்கேன். இப்பத்தான் ஆறு வருசமா பாட்டுக்கு டான் ஸும் ஆடுறேன். என் செல் போன்ல 435 எம்.ஜி.ஆர். பாட்டு, 95 எம்.ஜி.ஆர் படங்கள் இருக்கு. எம்.ஜி.ஆர். நடிச்ச 134 படத்தோட பாட்டும் டான்ஸும் எனக்கு அத்துப்புடி!'' என்று குஷியாக குதிப்பவர், ''தருமம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்!'' என்று ஃபைனல் டச் கொடுக்கிறார்.

ஜெயிச்சாச்சு...

எம்.ஜி.ஆர். சமாதியில் விழுந்து வணங்கிவிட்டு, சமாதி மீது காது வைத்து கடிகாரச் சத்தம் கேட் கிறதா என்கிற ஆராய்ச்சியில் தீவி ரமாக இருந்தார்கள் தொண்டர்கள். ''டேய் மாப்ள... ராத்திரி தங்கி இருந்து காலையில கோட்டைக்குப் போய், தொகுதியைப் பார்த்துட்டு ஊருக்குப் போவோம்டா!'' என்று ர.ர. ஒருவர் செல்போனில் பேசிய படி, தான் வந்த வாகனத்தைத் தேடி... கடற்கரை நோக்கிச் செல்கிறார்.

அடுத்த அதகளம் கோட்டையில்டோய்..!  

க.நாகப்பன், படங்கள்: வீ.நாகமணி

ஜெயிச்சாச்சு...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism