Published:Updated:

என் ஊர்!

பேச்சிலர்ஸ் பாரடைஸில் ரத்னா கஃபே சாம்பார் இட்லி!

என் ஊர்!

பேச்சிலர்ஸ் பாரடைஸில் ரத்னா கஃபே சாம்பார் இட்லி!

Published:Updated:
##~##

''ஹஹ்ஹாஹாஹா... 'திருவல்லிக் கேணி’ன்னாலே மனசுக்குள்ள மத்தாப்பூதான். பைகிராஃப்ட்ஸ் ரோடு, ஹிந்து ஹை-ஸ்கூல், பார்த்தசாரதி கோயில், மெரினா பீச், ரத்னா கஃபே, ஸ்டார் தியேட்டர், வெங்கடேஸ்வரா ஹாஸ்டல், எம்.ஏ. மேன்சன்னு மறக்க முடியாத இடங்கள். எப்போ அந்தப் பக்கம் போனாலும் என் கார் 10 கி.மீ. வேகத்தில் ஊர்ந்துதான் போகும்.

திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலை வீரப்பெருமாள் முதலித் தெருவில்தான் எங்கள் வீடு இருந்தது.  அப்பா என்.சுப்ரமணியம், சுதந்திரப் போராட்டத் தியாகி. 'மதுரை மித்ரன்’ என்ற பத்திரிகை நடத்தியவர். அம்மா, பொன்னம்மாள் கர்னாடக சங்கீதப் பாடகி. நல்லா வீணை வாசிப்பாங்க. சமையலும் நல்லா பண்ணுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்க குடியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் பின்னணிப் பாடகி சுசீலாம்மா குடியிருந்தாங்க. என் முதல் பிறந்த நாளப்போ எனக்கு மோதிரம் போட்டுட்டுப் போய்தான் தமிழில் முதல் பாட்டையே பாடினாங்களாம்.  எப்பவும் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதும் போவதுமாகவே இருப்பாங்க. அதனால வீடு எப்பவும் கலகலப்பாவே இருக்கும்.  

என் ஊர்!

அப்பெல்லாம் பீச்ல இப்ப உள்ள மாதிரி கூட்டம் இருக்காது. காந்தி சிலை இருக்கும் இடத்தில் கொஞ்சமே கொஞ் சம் பேர் இருப்பாங்க.  கண்ணகி சிலைக் குப் பின்னால இருக்கிற சிமென்ட் மேடையில் ஸ்பீக்கர்வெச்சு சாயங்கால நேரங்களில் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலி பரப்புவாங்க. வெளியூர்ல இருந்து படிக்க வர்றவங்க, வேலைக்கு வர்றவங்க எல்லாம் திருவல்லிக்கேணி மேன்சன்களில்தான் லேண்ட் ஆவாங்க. 'பேச்சி லர்ஸ் பாரடைஸ்’னே சொல் வாங்க அந்த ஏரியாவை. நானும் கல்யாணம் பண் ணிக்கிற வரை பேச்சி லர்ஸ் பாரடைஸ் சுகங் களை அனுபவிச்சுதான் வளர்ந்தேன்.  

வாரத்தில் மூணு நாளாவது ரத்னா கஃபே சாம்பார் இட்லி சாப்பிடலைன்னா என் னமோ மாதிரி இருக் கும். அங்கே சாம் பார் செய்யிற  மாஸ்டர் வீட்டுக்குப் போகும்போது, பாதுகாப்புக்கு ஆளுங்களைக் கூடவே அனுப்புவாங்கன்னு சொல் வாங்க.

என் ஊர்!

விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல்னு எந்த பண்டிகைக்கும் திருவல்லிக்கேணி களை கட்டும். ரதசப்தமின்னாக்கூட அதுக்குத் தேவையானப் பொருட்கள் முதல் நாளே வந்து இறங்கிடும். சாந்தி தியேட்டர்ல சிவாஜி படம் ரிலீஸ் ஆகும். பாரகன் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம். ஸ்டார் தியேட்டரில் இந்திப் படம்.

அப்பெல்லாம் இளைஞர்கள் ஹிந்திப் பாடல்களை 'ஹம்’ பண்ணிட்டே கிடார் வாசிக்கிறது ஃபேஷன். நானும் பாக்கெட் மணியை சேர்த்துவெச்சு ஒரு கிடார் வாங்கினேன். சரஸ்வதி கான நிலை யம்னு ஒரு சபா இருந்திச்சு. அங்கேதான் கே.பால சந்தர் சார் எப்பவும் டிராமா ரிகர்சல் பண்ணுவார். நாகேஷ், ஸ்ரீகாந்த்னு பலரும் அங்கே வந்துதான் நண்பர்களோடு கார்ட்ஸ் விளையாடுவாங்க.  

படிப்புல நான் ஆவரேஜ்தான். ஆனா, மியூஸிக், யோகா, ரெஸ்லிங், வாள் சண்டைன்னு...  ஆர்வம் அதிகம். கிடார், புல்புல்தாரான்னு எல்லாத்தையும் எனக்குக் கத்துக்கொடுத்த குருகுலம் திருவல்லிக் கேணிதான்.

தூர்தர்ஷன் 1975-ல் தொடங்கியபோது, ஜனாதி பதி உரை முடிந்ததும் ஒலித்த இசை என்னுடையது தான். அதேபோல் தூர்தர்ஷனின் இரண்டாவது சேனல் ஆரம்பித்தபோது, அதில் ஒளிபரப்பான டிராமாவுக்கு நான்தான் மியூஸிக். பிறகு ஆர்க் கெஸ்ட்ரா ட்ரூப்வைத்து நடத்தினேன். கே.பால சந்தர் சாரால் நடிகன் ஆனேன். இப்போ அடை யாறுல குடியிருக்கேன். பல ஏரியாக்கள் பார்த்தாச்சு, ஏகப்பட்ட நாடுகள் சுத்தியாச்சு. ஆனா, இப்போ வரை திருவல்லிக்கேணி தந்த சந்தோஷத்தை வேறு எந்த இடமும் எனக்குத் தந்தது இல்லை!''

- எஸ்.கதிரேசன்,படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism