Published:Updated:

காதல் பூத்த தருணம்...

காதல் பூத்த தருணம்...

காதல் பூத்த தருணம்...

காதல் பூத்த தருணம்...

Published:Updated:
##~##

'காதல் பூத்தது எப்போது’  என்று காதல் தம்பதியர் சிலரிடம் கேட்டோம்.  வெட்கத்தில் வந்த வார்த்தைகள்...

 ராஜீவ்-ஷாகிரா, கொடுங்கையூர்: ''என் அலுவலகத்துக்குப் பக் கத்து அலுவலகத்தில்தான் ஷாகிராவுக்கு வேலை. பழக்கத் தில் ஒரு ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. ஒருநாள் பஸ் ஸ்டி ரைக். 'என்னை வீடு வரைக்கும் பைக்ல டிராப் பண்ண முடி யுமா?’ன்னு தயங்கித் தயங்கிக் கேட்டாங்க. அந்த பைக் பய ணம் தந்த தைரியத்தில் மறு நாள் கடற்கரையில் நான் என் காதலைச் சொன்னேன்!'' என்று ராஜீவ் சிரிக்க, ''ஒரு வேளை மறுநாள் அவர் புர போஸ் பண்ணலைன்னா, அதுக்கு மறுநாள், நானே காத லைச் சொல்லியிருப்பேன்!'' என்று புன்னகைக்கிறார் ஷாகிரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் பூத்த தருணம்...

செல்வமணி-ஜெனீமா, ஸ்ரீகாளிகாபுரம்: ''ஜெனீமா என் தாய் மாமன் பொண்ணு. சின்ன வயசுல இருந்தே எனக்கு அவள், அவளுக்கு நான்னு சொல்லித்தான் வளர்த்தாங்க. ஆனாலும் நாங்க பேசிப் பழகியது இல்லை. இடையில ரெண்டு பேர் வீட்லயும் பேச்சுவார்த்தை இல்லாமப் போச்சு. ஒரு விபத்துல எங்க கார் எரிஞ்சப்ப, பதறிப் போய் ஜெனீமா போன் பண்ணி என்னைப் பத்தி விசாரிச்சப்பவே, நான் முடிவு பண்ணிட்டேன்... என் கல்யாணம் அவங்களோடதான்னு!''

காதல் பூத்த தருணம்...

ராஜகுமாரன்-பரிமளா,தி.நகர்:  ''ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் திருவாரூர். கதை, கவிதைன்னு என் படைப்புகளை டைப் பண்ண இவங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்டியூட்டுக்கு அடிக்கடி போறப்ப பரிமளா எனக்குப் பழக்கம். மனசுக்குள்ள இருந்த காத லைச் சொல்ல வார்த்தைகள் வரலை. நம்ம கைவசம்தான் கவிதை ஆயுதம் இருக்கே! ஒருநாள் 'உன்னோடு சேர்ந்து மழையில் நனைய ஆசை... நாளை யேனும் குடை இல்லாமல் வா’ன்னு கவிதையைக் கொடுத்துட்டு அவங்க முகத்தையே பார்த்துட்டு இருந்தேன். கவிதையைப் படிக்கவும் வெட்கத்தில் அவங்களுக்கு டைப் அடிக்கவே வரலை. இப்போ எங்களுக்கு பத்தாவது படிக்குற பொண்ணு இருக்கா!''

அன்பழகன்-தமிழ்ச்செல்வி, பூந்தமல்லி: ''பஸ்ல போயிட்டு இருக்கும்போது தமிழ்ச்செல்வி காலைத் தெரியாம மிதிச்சுட்டேன். கோபமா திட்ட வந்தவங்ககிட்ட உடனே 'ஸாரி’ கேட்டேன். கோபத்தை முழுங்கிட்டு சின்னதா புன்னகைச்சாங்க. எனக்குள்ள ஒரு பல்ப்!'' என்ற அன்புவை இடைமறித்துத் தொடர்கிறார்  தமிழ்ச்செல்வி. ''அப்புறமும் ஃப்ரெண்ட்லி யாத்தான் பழகிட்டு இருந்தோம். ஒரு தடவை ராத்திரி 11 மணிக்கு நான் வேலை பார்க்கிற ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணாரு. 'என்னங்க... இந்த நேரத்துல போன் பண்றீங்க’ன்னு நான் கோபமா கேட்டதும், 'ஸாரிங்க... அப்போ வேற எப்போங்க போன் பண்ணட்டும்’னு  அப்பா வியாகேட்டாரு. '8 மணிக்கு போன் பண்ணுங்க’ன்னு நான் வெட்கத் தோடு சொன்னப்பவே எனக்கு இவரை ரொம்பப் பிடிச்சுருச்சு!''

இம்தியாஸ்-காத்தூன்பேகம், வண்ணாரப்பேட்டை: ''எங்க காதல்ல சின்ன வித் தியாசம். ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி ஒன்றரை வருஷத்து அப்புறம் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. ஒரு கல்யாண வீட்ல துறுதுறுன்னு ஒரு பொண்ணு சுத்திட்டு இருந்தாங்க. ஏதோ பொறிதட்ட பர்ஸ்லவெச்சிருந்த போட்டோவைப் பார்க்குறேன்... அவங்கதான் இவங்க!'' என இம்தியாஸ் உருக, ''அலட்டிக்காம அநியாயத் துக்கு நல்லவரா இருந்த இவரோட இயல்பு புரிந்த தருணம்தான் எனக்குள் இவர் மேல் காதல் பூத்தது!'' சிரிக்கிறார் காத்தூன் பேகம்.

- க.நாகப்பன், அ.முகமது சுலைமான், படங்கள்: அ.ரஞ்சித்

காதல் பூத்த தருணம்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism