Published:Updated:

மதராசப்பட்டினம் டு சென்னை!

சிட்டி ஆல்பம்

##~##

ரு நகரத்தின் வரலாறு வரம் என்றால், அதன் சாபம் மக்களின் அலட்சியம். எழுபதுகளின் தொடக்கம் வரை சீரும் சிறப்புமாக இருந்த சென்னையின் பாரம்பரியம் சீர்குலைந்து போனதில் நம் பங்கும் அதிகம். அதை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது 'MADRAS&ITS PAST & ITS PRESENT’ புத்தகம். சுருக்கமாக, மதராசப்பட்டினம் சென்னை ஆன கதை.

 நூலின் ஆசிரியர் எஸ்.முத்தையா வரலாற்று ஆய்வாளர். சென்னையைப்பற்றி இதற்கு முன்னும் ஏராளமானப் புத்தகங்களை எழுதியவர்.

மதராசப்பட்டினம் டு சென்னை!

அண்ணா சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், மறைமலை அடிகள் பாலத்தின் கீழ் அடையாற்றில் ஆனந்த நீராடும் சைதை பகுதி மக்கள், ஜார்ஜ் கோட்டை அகழியில் உல்லாச படகுச் சவாரிப் போகும் பிரிட்டிஷ்காரர்கள் எனப் புத்தகத்தின் ஒவ்வொரு புகைப்படமும் கடந்த காலத்தின் காவிய அழகைப் பறைசாற்று கின்றன.

சென்னையை அப்போது படம் பிடித்த அதே ஆங்கிளில் இப்போது அதே பகுதியைப் படம் பிடித்து, அந்தப் பகுதியின் வரலாறு அதன் இன்றைய நிலைமைப்பற்றி தெளிவான, சுலபமான ஆங்கிலத்தில் தகவல் அளித்து இருக்கிறார்கள்.

தனி ஒரு மனிதனின் வரலாறே பரவசங்களை ஏற்படுத்தும்போது, நாம் வாழும் நகரத்தின் வரலாறு நம்மை எவ்வளவு பரவசப்படுத்த வேண்டும்! ஆனால், அந்த நகரத்தின் வளங்களை வயிறுமுட்ட உறிஞ்சிவிட்டு, எஞ்சிய சக்கையை அதன் மீதே உமிழ்ந்துகொண்டு இருக்கிறோம் நாம்!

- மோ.அருண் ரூப பிரசாந்த், படம்: ச.இரா.ஸ்ரீதர்

மதராசப்பட்டினம் டு சென்னை!
அடுத்த கட்டுரைக்கு