Published:Updated:

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

Published:Updated:
##~##

'ஆத்தாடி மாரியம்மா... சோறு ஆக்கிவெச்சேன் வாடி அம்மா...’ - லவுட் ஸ்பீக்கர் அலறிக்கொண்டு இருக்க... கூட்டம் கூட்டமாக வந்து நாக்கில் அலகு குத்திக்கொண்டு இருந்தார்கள்திருநங்கைகள். களை கட்டும் கரகாட்டத்துக்கு ஒத்திசைவாக குத்தாட்டம்! உடனே, கூத்தாண்டவர் கோயில் கோலாகலம் என்று நினைத்துவிட வேண்டாம்.

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சேலம் ஐந்து ரோடு - ஸ்டேட் பேங்க் காலனியில்சமீபத் தில் திருநங்கைகளுக்கு என்றே பிரத்யேகக் கோயில் கட்டி இருக்கிறார்கள். பெயர், தட்டாங்குட்டை மாரியம்மன் கோயில்!

மஞ்சள் சேலையில் பக்தி பரவசம் பொங்கக் கையில் வேப்பிலை ஏந்தி வந்தார் ராதிகா. கடந்த ஆண்டின் மிஸ் கூவாகம்! மடியில்வைத்து இருந்த வேலினை அவர் பூசாரி கையில் கொடுக்க, ஆத்தாவுக்கு முன்புவைத்து தீப ஆராதனை காட்டப்பட்டது. வேலுக்கு மஞ்சளும் விபூதியும் பூசினார்கள். ராதிகா கண்களை இறுக்கி மூடி, பயபக்தியோடு ஆத்தாவை கும்பிட்டுக்கொண்டே 'ஆத்தா£...’ என்று அலறியபடி நாக்கை நீட்டினார். சுற்றி இருந்த திருநங்கைகள் குலவி சத்தமிட  ராதிகாவின் நாக்கை இழுத்துப் பிடித்து வேலைச் சொருகினார் பூசாரி!

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

அடுத்தடுத்து வரிசையில் வந்த அரவாணிகளுக்கும் இதே ஸ்டைலில் அலகு குத்தும் படலம் அரங்கேறியது. உடலில் மஞ்சளைப் பூசிக்கொண்டு ஆடை எதுவும் அணியாமல் வேப்பிலையால் உடலை  மறைத்தபடி வந் தார் ஓர் அரவாணி. அவருக்கும் நாக்கில் வேல் பாய்ச்சப்பட்டது. தொடர்ந்து திருநங்கைகளின் தர்மகர்த்தாவான தேவியம்மா, வாயில் விரல் வைத்து 'உய்ய்ய்ய்ய்’ என்று விசில் கொடுக்க... திருநங்கைகளின் ஊர்வலம் துவங்கியது. வழி நெடுகிலும் செம ஆட்டம்!  

'மாங்குயிலேபூங்குயிலே’ பாட்டை பறையிலேயே அடித்து பட்டையைக் கிளப்பினார்கள். கோயிலைச் சுற்றி வந்தவர்கள், கரகத்தை இறக்கிவைத்துவிட்டு பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். ஆங்காங்கே ஆடு, கோழிகள் வெட்டப்பட்டன. ஒரு மணி நேரத்தில் கமகமத்தது கறிக் குழம்பு வாசனை. பொங்கலை இறக்கிவைத்ததும் படையல் போட்டார் பூசாரி.

நாங்கள் அழகு... நாக்கில் அலகு!

''நாங்க எந்தக் கோயிலுக்குப் போனாலும், வித்தியாசமாப் பார்க்குறாங்க. ஏளனமாப் பேசறாங்க. சில கோயில்ல விபூதி பிரசாதம்கூட கொடுக்க மாட்டேங்குறாங்க. அதனாலதான் எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு கோயில் வேணும்னு நினைச்சோம். மும்பை தட்டாங்குட்டை மாரியம்மன் கோயில் ரொம்பவும் பிரபலம். எப்பவும் கூட்டம் 'ஜேஜே’ன்னு இருக்கும். அந்தக் கோயில்ல அனுமதி வாங்கிட்டு, இங்கே இந்தக் கோயில் கட்டி இருக்கோம். இது எங்களுக்கான கோயில். எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது!'' கம்பீரக் குரல் கொடுக்கிறார்கள் திருநங்கைகள்!

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism