Published:Updated:

என் ஊர்!

''கடலூர் என்பது மழைப் பிரதேசம்!''

என் ஊர்!

''கடலூர் என்பது மழைப் பிரதேசம்!''

Published:Updated:
##~##

''பில்லி ஹாப்கின்ஸின் 'பிவீரீலீ பிஷீஜீமீs’ படித்து இருக்கிறீர்களா? இங்கிலாந்தின் லான்சாஷைர் எனும் கிராமத்தில் பிறந்து ஆசிரியரான ஹாப்கின்ஸின் கதை அது. தனது ஊரின் ஏதாவது ஒரு விஷயத்தோடு ஒப்பீடு செய்யாமல் அவருக்கு எதையுமே வகுப்பில் நடத்தத் தெரியாது. அதேபோல, எங்கள் ஊரின் வரலாற்று நிகழ்வுகளை வைத்து யாருக்கு வேண்டுமானாலும் என்னால் பாடம்  நடத்த முடியும்!'' என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் புனைவு இலக்கியத்திலும் சிறுவர் இலக்கியத்திலும் அபார பங்களிப்பைச் செலுத்தி வரும், எழுத்தாளர் இரா.நடராசன்.

 ''முதன்முதலில் ராபர்ட் கிளைவ் என்னும் தேடப் பட்ட குற்றவாளி இந்தியா வந்து பிரிட் டிஷ் ஆட்சிக்கே வித்திட்டது கட லூரில்தான். எங்கள் ஊர் செயின்ட் டேவிட் கோட்டைதான் வெள் ளைக்காரர்களின் முதல் இந்தியத் தலைமை அலுவலகம். இன்று சிதிலம் அடைந்து கேட்பாரற்று இருக்கும் இந்தக் கோட்டையில் ஒரு குகை இருக்கிறது. அது இங்கு இருந்து 150 கி.மீ. தூரம் உள்ள வேலூர் வரை போகும் சுரங்கப் பாதைகொண்டது என்பதில்  இருந்து மேல் மாடம், குதிரை லாயம்,  கைதிகளை அடைத்து சித்ர வதை செய்த இடம், எந்த இடத் தில் கிளைவ் தனது பரிவாரத்தோடு உணவு அருந்தினார், எந்த அறையில் உடை மாற்றி உறங்கினார் என்பது உள்பட அனைத்தும் என் மூளையில் பதியப்பட்டுவிட்டது. எனது சிறுவர் இலக்கியப் பதிவுகளில் இக்கோட்டை ஒரு அங்கமாகியது இப்படித்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

கடற்கரை ஊரான கடலூர் மீனவர் கிராமங் களின் பூங்கொத்து. எங்கள் கடல் அன்னை வாரி வழங்கும் மீன் வளத்தைக்கொண்டு உலகுக்கே மீன் வழங்கலாம். ஒவ்வொரு வரலாறும் இரண் டாகவே பகுக்கப்படுகிறது. உலக வரலாறுகூட கிறிஸ்து பிறப்புக்கு முன், பின் என பார்க்கப் படுகிறது. 2004 டிசம்பர் 26-ல் நாங்கள் அனுப வித்த ஆழிப் பேரலை வேதனையை மற்றவர் களால் கற்பனையிலும் உணர முடியாது. எங்கள் கடல் தோழர்கள் குடும்பங்களுடன் கொத்துக் கொத்தாக அபகரிக்கப்பட்ட அந்த துயரம் எங்களை எத்தனை வேகமாக ஆக்கிர மித்ததோ, அதைவிட வேகமாக எங்கள் மீனவத்

என் ஊர்!

தோழர்கள் அதில் இருந்து மீண்டு வந்தார்கள். துவளாத உற்சாகத்தோடும் அயராத உழைப் போடும் அழிந்த ஊர்களை மீண்டும் கட்டினார் கள். அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது ஒசாமா தாக்குதல் நடத்தி அழித்ததை வைத்து இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 20 ஆயிரம் நாவல்கள் எழுதப்பட்டுள்ளதுபோல சல்மான் ருஷ்டி வரை எங்கள் கடலூர் சுனாமி யைப் பல எழுத்தாளர்கள் பதிவு செய்து உள் ளார்கள்.

பெருங்கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய மாணவர்கள் சிலி நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிறைச்சாலை நோக்கிப் பயணிப்பதை  இலக்கி யப் புனித யாத்திரையாகவே மேற்கொள்கிறார் கள். மாபெரும் புரட்சிக் கவி பாப்லோ நெருடா சிறை வைக்கப்பட்ட சிறை அது. எங்கள் கட லூரிலும் 1918-ல் தனது 36-வது வயதில் நமது தேசியக் கவி பாரதி சிறை வைக்கப்பட்டான். கடலூர்வாசிகளான நாங்கள் அவன் அடைக்கப்பட்ட அறையை சிறைக் கைதிகளுக்கான நூலகம் ஆக்கி, சிறைவாசலில் பாரதிக்கு ஒரு சிலையும் வைத்தோம்.

கடலூரின் சிறப்புகளை எழுத மழைபோல வார்த்தைகள் கொட்டுகின்றன. கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய 'நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலில் வருமே... அந்தப் பல வருடங்கள், பல மாதங்கள், பல நாட்கள் கொட்டியபடியே இருக்கும் மழை. அதை அனுபவிக்க ஒருவர் கடலூர் மழையை அனுபவித்தாலே போதும். மழையைக் கண்டு வீட்டுக்குள் பதுங்குகிறவன் கடலூர்வாசி அல்ல. மழையோடு கலந்து, கரைந்து வாழ உலகுக்கே கற்றுத் தரும் ஒரு பட்டறைபோல மழைவாழ் வாழ்க்கையை நான் இங்குதான் கற்றேன்.

அப்படிப்பட்ட எங்கள் கடலூரின் மண்ணும் காற்றும் தண்ணீரும் இன்று சுற்றுச்சூழல் பாதிப்பால் மிக வேகமாக சிதைந்து வருவதாக க்ரீன் பீஸ் அமைப்பு அறிவித்து இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுத்த சிப்காட் தொழிற்சாலைகள் ஊரின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, கைகட்டி நிற்கவும் முடியவில்லை, கைதட்டி ஆதரிக்கவும் முடியவில்லை. ஒருவேளை கடல்கொண்டு கடலூர் அழியும்போது, கப்பலில் நோவா வந்து, ஒவ்வொரு படைப்பினத்திலும் ஒன்று ஏறிக்கொள்ளலாம் என்று அழைத்தால்... அப்போதும் அதில் ஏறித் தப்பாது, 'நோ தேங்க்ஸ்’ சொல்லி இந்தக் கடலூர் மண்ணோடு இருந்துவிடவே விரும்புகிறேன். ஜெயகாந்தன் தனது நாவல்களில் பதிவுசெய்த எங்கள் ரயில் நிலையம், தந்தை பெரியார் நேசித்த கெடிலம் ஆற்றங்கரை, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் உலாவிய எங்கள் மைதானம், பழைய பாடலிபுத்திர சமண அடையாளங்களைக் கைவிட முடியாத பாடலி கோயில், எல்லா வற்றுக்கும் மேலாக கல்கியின் 'பொன்னி யின் செல்வன்’ நாவலில் இடம்பெற்ற அந்த அரச மரம்... இப்படி புத்தகங் களாக வாழ்வதைவிட வேறு எது முக்கியம்?''

-படங்கள்: ஜெ.முருகன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism