Published:Updated:

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

Published:Updated:
##~##

''இப்போது எனக்கு 72 வயது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கை நம் உடல் மீது வெவ்வேறு வகையான சித்திரங்களைத் தீட்டும். மனித உடல் களைக் கவனித்தால், இந்த நுட்பத்தை அறிய முடி யும்!'' என்கிறார் மாணிக்கம்.

 புதுவை அரசின் கலை மாமணி, தேசிய விருது எனப் பல விருதுகளைக் குவித்த ஓவியர் மாணிக்கத்தின் ஓவியங்கள் இன்றும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''
''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

''பிறந்தது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம். எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து முது நிலைப் பட்டயப் படிப்பு முடித்தேன். பிறகு, அங்கும் இங்கும் அலைந்துவிட்டு, கடைசியாக புதுச்சேரி தாகூர் அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அன்று முதல் இந்தப் புதுவை மண்ணில்தான் வாசம்!'' என்று சிறிது நேரம் கண் களை மூடி யோசித்தார்.

''கோட்டோவியர் ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, புதுதில்லி அகாடமி சேர்மன் கே.பி.பாஸ்கரன், சென்னை ஓவியக¢ கல¢லூரி முதல்வராக இருந்த அல்போன்ஸ், கைத்தறி நெசவாளர் இயக¢ககத்தின் இயக¢குநர¢ ராஜேந¢த¤ரன¢, 'டிராட்ஸ¢க¤’ மருது, நடிகர¢ ச¤வகுமார¢, வ¤ஸ¢வம¢ ஆகியோர் என் கல்லூரித் தோழர்கள். கல்லூரி நாடகங்களில் சிவகுமாருடன் சேர்ந்து நடித்ததும் உண்டு. நாடகத்தில் நடிக்கும் போதே ஒரு நடிகனுக்கான உடல் மொழி சிவகுமாரிடம் இருக்கும். டீ, காபி சாப்பிடக் கூட எங்களுடன் வர மாட்டார். உடல் நலம் பற்றிய கவனம் எப்போதும் சிவகுமாரிடம் அதிகம். ஒவ்வொரு ஓவியர்களும் ஒவ்வொரு ஓவியப் பாணிகளைத் தேர்ந்துகொள்வார்கள். நான் அப்ஸ்ராக்ட் எனப்படும் அரூப ஓவியங்களிலும் சர்ரியலிஸ ஓவியங்களிலுமே கவனம் செலுத்துகிறேன்.

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

இந்த இரண்டு ஓவியங்களும் விரிவான கற்பனைகளுக்கு இடம் அளிப்பவை. மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைச் சித்த ரிப்பவை. உலகின் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் ஒன்று மனித மனம். அத்த கைய மனித மனத்தின் விசித்திரமான உணர்வுகளையே என் சித்திரங்கள் சித்த ரிக்கின்றன!'' என்று விளக்கும் மாணிக் கத்தின் ஓவியங்களுள் பெரும்பாலும் குதிரைகள் இடம் பெறுகின்றன.

காரணம் கேட்டதும் சின்னப் புன்ன கையுடன் தொடர்ந்தார். ''குதிரை என்பது வேகத்துக்கான குறியீடு. மனிதர்களைப் பொறுத்தவரை எல்லாமே வேகமாக நடை பெற வேண்டும். வேகமாகச் செல்வம் சேர்க்க வேண்டும், வேகமாக வெற்றி பெற வேண்டும், வேகமாக உயர வேண்டும். வாழ்க்கையைப் பந்தயமாகப் பார்க்கும் மனிதர்களுக்குக் குதிரைப் பிடித்துப் போகிறது. என வேதான் என் ஓவியங்களில் எப்போதும் குதிரைகள் ஓடுகின்றன.

கே.சி.எஸ்.பணிக்கர் தொடங்கிய ஓவியக் கிராமம் இப்போது வளர்ச்சி அடைந்து உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் கள் மட்டும் அல்லாது, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு தங்கி ஆர்வமுடன் கற்றுக்கொள்கின் றனர். ஓவியம் என்பது எப்போதும் நுட்பமானது. இந்த நுட்பத்தை இளம் ஓவியர்கள் கற்றுக்கொண் டாலே தேர்ந்த ஓவியர்கள் ஆகிவிடலாம்!'' என்று சொல்லும் மாணிக்கம், இதுவரை இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஓவியப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி இருக்கிறார். மாணிக்கத்துக்கு இருக்கும் மனக் குறை புதுவையில் லலித் கலா அகாடமி இல்லாததுதான்.

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''

''சிறிய மாநிலங்களான கேரளா, மணிப்பூரில் எல்லாம் லலித் கலா அகாடமி உள்ளது. ஆனால், புதுவையில் இல்லாதது நமக்குப் பெரும் பின்னடைவு. அரசின் சார்பில் கேலரிகள் இல்லாததால், தனியார் கேலரிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல ஓவியர்களின் படைப்புகள் மக்களின் பார்வைக்கே வராமல் போகின்றன. நான், ஆதிமூலம், தட்சணாமூர்த்தி மூவரும் புதுவையில் லலித் கலா அகாடமி கொண்டுவரத் தீவிர முயற்சி எடுத்தோம். புதுவை கவர்னராக இருந்த ஹர் சொரூப்சிங்கும் அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்குள் அவர் மாற்றப்பட்டுவிட்டார். ஆதிமூலமும் மரணம் அடைந்துவிட்டார். புதிய அரசாவது இதை நிறைவேற்றித் தர வேண்டும்!'' என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார் மாணிக்கம்.

- ஜெ.முருகன்    

''என் ஓவியங்களில் குதிரைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன!''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism