Published:Updated:

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

காதல் கிராமம் காளிதிம்பம்

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

காதல் கிராமம் காளிதிம்பம்

Published:Updated:
##~##

''காதலித்துப் பார்... உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்!' என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. அந்த வரிகளின் வழியில் காதலுக்கு ஜே சொல்கிறது மலைக்கிராமம் ஒன்று. சதியால், சாதியால், விதியால் என்று காதல் மடிவதற்குக் காரணங்கள் பல உண்டு. ஆனால், சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலை உச்சியில் இருக்கும் காளிதிம்பம் கிராமத்தில் யாராவது காதலித்துவிட்டால்போதும், பெற்றவர்களே எதிர்த்தாலும் ஊர் கூடி மணம் முடித்துவைக்கிறார்கள்!

காளிதிம்பம் கிராமத்தில் வீட்டுக்கு வீடு காதல் தம்பதி கள். ''எனக்கு இந்த ஊர்தான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு விடுமுறையில நீலகிரியில் இருக்கிற சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனேன். அங்கேதான் மகேஸ்வரியைப் பார்த்தேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சு. மூணு வருஷம் காதலிச்சோம். அவங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சதும், கடுமையா எதிர்த்தாங்க. அவங்க வசதியான குடும்பம்கிறதால, பெண் கொடுக்க மறுத்துட்டாங்க. எங்க ஊர் கௌடா (ஊர் தலைவர்) உள்பட பலர் போய்ப் பேசியும் மசியலை. அப்புறம் ஒருநாள் ஊரே சேர்ந்து பெண்ணைத் தூக்கிட்டு வந்து, கல்யாணம் செஞ்சுவெச்சிட்டாங்க...'' என்கிறார் ஜீவ பாரதி.  இப்போது இரண்டு குடும்பங்களும் சுமூகமாகி விட்டதாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ராமசாமி - லதா தம்பதியினரிடம் பேசினோம்.  ''நான், நீலகிரி மலை. இவரு, எங்க ஊர்ல இருக்கிற அவங்க சின்னம்மா வீட்டுக்கு வருவார். இவரைக் கொழுந்து (தேயிலை) பறிக்க அவங்க சின்னம்மா காட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நாங்களும் கொழுந்து பறிக்க காட்டுக்குப் போவோம். அப்ப அடிக்கடி  கிண்ட லாப் பேசி எல்லோரையும் சிரிக்கவைப்பாரு. அப்பதான் அவரு மேல எனக்குக் காதல் வந்துடுச்சு. அவர்கிட்ட சொன்னப்ப, அவர்தான் பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு சிரிச்சார். நாங்க காதலிச்சாலும் ரொம்ப கட்டுப்பாடா இருந்தோம். வெளி இடத்தில் தனியாச் சந்திக்கக் கூட மாட்டோம்.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ரெண்டு வருஷம் கழிச்சு, அவரும் அவங்க சின்னம்மாவும் வீட்டுக்கு வந்து முறைப்படி பொண்ணு கேட்டாங்க. ஆனா, எங்க வீட்டுல கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. அப்புறம் அவங்க ஊரே திரண்டு வந்து, எங்க அப்பாவைப் பார்த்து பேசினாங்க. 'ராமசாமி நல்ல பையன். ஏதாவது பிரச்னைனா ஊரே திரண்டு வந்து நிற்போம். பொண்ணைக் கடைசி வரைக்கும் கண் கலங்காமப் பார்த்துக்கணும்கிறது எங்க ஊர் கட்டுப்பாடு. அதனால் தாராளமா நீங்க பொண்ணைத் தர லாம்’னு சொன்னதும் எங்க அப்பா ஒப்புக்கிட்டார்'' என்று தன் கல்யாணக் கதை சொல்கிறார் லதா.

இத்தனை ஆண்டுகளாக இங்கே சிறுசிறு மனஸ்தாபங்களைத் தவிர, கணவன் - மனைவிக் குள் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. தம்பதியில் யாராவது ஒருவர் முரண்டு பிடித் தாலும் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி அறிவுரை கூறி ஒன்றுசேர்த்துவிடுகிறார்கள். அதேபோல், மனைவியைக் கணவன் அடிக்கக் கூடாது. கண வன், குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். மனைவியும் கணவர் பேச்சைக் கேட்டு, குடும்பத்தை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. விதிகள் மீறப்படும்போது, விஷயத் தைப் பஞ்சாயத்துக்குக்கொண்டு வரலாம். குடும் பப் பிரச்னை ஊருக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தால், குறிப்பிட்ட சில ஊர்ப் பெரி யவர்களிடம் சொன்னால் போதும்; வீடு தேடி வந்து பஞ்சாயத்து (கவுன்சிலிங்) செய்கிறார்கள். இதனால், இதுவரை இங்கு விவாகரத்து என்ற பேச்சே இல்லை!

கிராமத்து மூதாட்டி அரசம்மா ''சின்னச்சிறுசுங்க விரும்பினா, பெரியவங்க நாமதான் புரிஞ்சுக்கிட்டு அவங்களைச் சேர்த்துவைக்கணும். அதைவிட்டுட்டு நாமே மல்லுக்கட்டுனா, அவங்க எங்கே போவாங்க? ஊரைவிட்டு ஓடிப் போனா, குடும்பத்துக்கு அசிங் கம்.  அவங்க தற்கொலை செஞ்சிக்கிட்டா, பழி நம்ம மேலதானே விழும். அதனால், காலங்காலமா எங்க ஊர்ல யாரு காதலிச்சாலும் பஞ்சாயத்துக் கூட்டி அவங்களை ஒண்ணுசேர்த்து வெச்சிடு வோம்'' என்கிறார்!  

எல்லா ஊரும் இப்படி இருந்தா... சூப்பர்ல!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism