Published:Updated:

மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே!

கிராமத்து கில்லிகள்!

மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே!

கிராமத்து கில்லிகள்!

Published:Updated:
##~##

கிராமத்துத் தோப்புகளையும் வறண்ட வயல் வெளிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது கிரிக்கெட். மீதம் இருக்கும் நேரத்தை டி.வி. பெட்டிகள் தின்றுவிடுகின்றன. மண் மணக்கும் விளையாட்டுகளைப் பார்ப்பதே அபூர்வம் ஆகிவிட்டது. அப்படி  தர்மபுரியின் குக்கிராமங்களில் நம் கண்ணில்பட்ட விளையாட்டுகளின் நேரலை இங்கே.    

 பச்சனம்பட்டி கிராமத்தில் 'அஞ்சாங்கல்’ ஆடிக்கொண்டு இருந்தன வாண்டு பட்டாளம். வட்டமாக அமர்ந்து ஐந்து சிறு கற்களைக் கீழே உருட்டி, ஒவ்வொரு கல்லாகத் தலைக்கு மேல் தூக்கிப் போட

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே!

வேண்டும். அந்தக் கல் கீழே வருவதற்குள் இன்னொரு கல்லைத் தூக்கிப் போட்டு ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து கற்களையும் கேட்ச் பிடிக்க வேண்டும். இடையில் பாடிக்கொண்டே இத்தனையையும் செய்ய வேண்டும்.

''மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே; சோளப் பொரி மூணு... சொக்காட்டம் நாலே; எம் பேரு அஞ்சு... ஏலக்கா பிஞ்சே; கூழுக்கு மாங்கா... கொப்பரைத் தேங்கா; ஒடைச்சா பருப்பு... தின்னா கசப்பே; எலுமிச்சங் கொத்தே... எம்பேரு முத்தே!'' என்று பாடிக்கொண்டே சிறுமி சரஸ்வதி வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்க, கெட்டியம்மா அடுத்து தொடர்ந்தாள்.

'சுக்கு சுக்கு சோள சுக்கு... குந்தியம்மா கோழிக் குண்டு; அவரை துவரை கின்னம் கிழுக்கு...’ என்று பாடும்போதே ஒரு கல்லைத் தவறவிட... அவளது ஆட்டம் அவுட். பாட்டும் பாதியிலே டிராப். தொடர்ந்த தேவயானி, 'கொத்தேலக்கா கோழியான்... வெச்செடுப்பான் வாரிக் கொண்டான் சொக்கே!’ என்ற வரிகளையே திரும்பத் திரும்ப பாடி ஐந்து கற்களையும் வெற்றிகரமாகத் தூக்கிப் போட்டுப் பிடித்தாள்!

மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே!

ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் 'ஆபியம்’ விளையாடிக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள். ஒரு சிறுவன் குனிந்தபடி யானைபோல நிற்க... அணிவகுத்து நிற்கும் மற்ற சிறுவர்கள் வேகமாக ஓடி வந்து குனிந்து நிற்பவனின் நடுமுதுகில் கைகளை ஊன்றி தாண்டிக் குதிக்கிறார்கள். இப்படி தாண்டும் சிறுவனின் கால், குனிந்து நிற்பவனின் தலை அல்லது இடுப்பை உரசிவிட்டால் தாண்டிய சிறுவன் அவுட். பிறகு, அவன்தான் குனிந்து நிற்க வேண்டும். இந்த ஆட்டத்துக்கும் பாட்டு உண்டு. 'மணி... மணி ஆபியம்; லகரம்... லகரத்தின் கொக்கே; சபாஷ் மண் அள்ளி... குடுகுடுப்பான் மண்ணைத் தொட்டு; எட்டி உதைப்பான்... ஏறி உட்கார்ந்தான்...’ என்று பாடுகிறார்கள். பொருள் புரியா விட்டாலும், ராகம் இழுத்துப் பாடுவதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம், பம்பரத்தை வைத்து விதவிதமாக வித்தைகள் காட்டிக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள். பக்கத்து மைதானத்தில் தூள் பறந்தது கில்லி. இதில் முதல் நிலை, இரண்டாம் நிலை விளையாட்டு உண்டாம். குழியின் குறுக்காகப் படுக்கவைக்கும் குச்சியை, இன்னொரு நீளமான குச்சி மூலம் தூரமாகச் சுண்டிவிடுவது முதல் நிலை ஆட்டம். குழியில் குச்சியைவைத்து, இன்னொரு குச்சியால் தட்டி, அது எகிறும் போது அடிப்பது இரண்டாம் நிலை ஆட்டம். இதில் இரண்டாம் நிலை ஆட்டத்துக்கே மரியாதை அதிகம்.

'செவன் ஸ்டார்’ விளையாட்டை 'லகோரி’ என்கிறார்கள். இரு அணியாகப் பிரிந்து வட்டத்தினுள் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும் ஏழு கற்கள் மீது பந்தை எறிகிறார்கள். எதிர் அணியி னர் பந்தைக் கைப்பற்றும் முன்பு கற்களை அடுக்க வேண்டும். கைப்பற்றிவிட்டால், பந்தால் செம அடி விழுகிறது!

கட்டங்கள் வரைந்து அதில் சிறு ஓடுகளை வீசி எம்பிக் குதித்து விளையாடும் நொண்டி ஆட்டத்தை, 'ஜம்ப்பா... பம்ப்பா?’ என்று கூவிக்கொண்டே விளையாடுகிறார்கள். இரு சிறுவர்கள் கைகளைக் கோத்துக்கொண்டு, அதன் உள்ளே மற்றொரு சிறுவனை நுழைத்து, அலேக்காகத் தூக்கி சக்கரம் போலச் சுற்றுவது 'சோடா போடும்’ விளையாட்டாம்!

கெட்டூர் கிராமத்தில், 'மச்சி என்னைத் தொடுடா, பார்க்க லாம்’ என்று கிணற்றையே கிறுகிறுக்கவைத்துக்கொண்டுஇருந்தது ஒரு விடலை குரூப். நீச்சல் அடித்தபடியே துரத்தித் தொடுவது, நீருக்குள் மூழ்கி ஆழத்தில் இருந்து மண் எடுத்து வருவது, தென்னை மரத்தில் ஏறி, அங்கு இருந்து கிணற்றில் குதிப்பது, 'குளித்தது போதும்’ என்று கிளம்பினால் அவர்கள் முதுகில் சேற்றை வாரிப் பூசுவது என்று அழிச்சாட்டி யம் செய்துக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள். நாம் கிளம்பும்போது ஊர்ப் பெருசு ஒருவர் சொன்னார்... 'அடிக்கடி நீச்சல் அடித்தால் இடுப்பு வலியே வராதாம்.’ அடேங்கப்பா!

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

மடிமடி ஒண்ணு... மத்தாப்பு ரெண்டே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism