Published:Updated:

கனவை வெல்ல ஒரு முயற்சி!

கனவை வெல்ல ஒரு முயற்சி!

கனவை வெல்ல ஒரு முயற்சி!

கனவை வெல்ல ஒரு முயற்சி!

Published:Updated:
##~##

மயங்களில் கோடம்பாக்கம் படங்களைவிட அழகாக அமைந்துவிடுகின்றன குறும்படங்கள். கண்களில் கனவுகளோடும் கைகளில் கதைகளோடும் களம் இறங்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்துபவர்களில் ஒருவர்... 'நிழல்’ பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசு.

இதுவரை 5, 000-க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுக்குக் குறும்படப் பயிற்சி அளித்துள்ள, திருநாவுக்கரசு, கடந்த வாரம் 21-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையை அரும்பாக்கம் நடுவங்கரை யு.பி. ஹாலில்  நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவை வெல்ல ஒரு முயற்சி!

''குறும்படம் எடுக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் என்ன என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களும் திரைப்படக் கலை பற்றி தெரிந்து, தெளிந்து நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் பயிற்சிகளை நடத்து கிறோம். சினிமா பற்றிய எந்த அறிமுகமும் இன்றி ஆர்வம் ஒன்றையே முதலீடாகக் கொண்டுவரும் கிராமப்புற இளைஞர்கள், பயிற்சி முடித்து வெளியே செல்லும்போது நம்பிக்கையுடன் செல்வது எனக்குத் திருப்தி அளிக்கிறது. குறும்பட ஆர்வம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, 'இதுதான் குறும்படம்’ என்ற தெளிவு இல்லை. 'சினிமாவிலேயே சின்ன சினிமா செய்கிறோம்’ என்று புரிந்து கொண்டு, காமெடி, காதல் எனக் குறும் படங்களிலும் சுருங்கிவிடுகிறார்கள். குறும்படம் என்பது மாற்று ஊடகம். திரைப்படத்தில் இருந்து பெரிதும் மாறுபட்டது. சினிமாவில் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படங் களில் சொல்கிற அளவுக்கு,  பிரான்ஸ், இலத் தீன்-அமெரிக்க நாடுகளில் இதை மாற்று ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள். புதிய தொழில்நுட்ப உதவியுடன் வித்தியாசமான கதைகளைச் எளிதாகக் குறும்படங்களில்  சொல்லலாம். பார்வையாளர்களும் பங்கேற்பாளராக மாறுவதும் இதில் மட்டுமே சாத்தியம்'' என்கிறார் திருநாவுக்கரசு.

கனவை வெல்ல ஒரு முயற்சி!

'படைப்பாற்றல்’ என்ற தலைப்பில் பேச வந்த இயக் குநர் பாலுமகேந்திரா, ''இளை ஞர்களே!  பேனாவை மூடி விட்டு, கேமராவைக் கையில் எடுங்கள். நீங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதும் கட்டுரை களோ, கவிதைகளோ படிக்கத் தெரியாதவர்களை போய்ச் சேர்வது இல்லை. பிறகு எதற்கு அந்த எழுத்துகள்? உலக மொழியான சினிமாவை, கேமரா மூலம் சொல்லுங்கள். இனம், நாடு கடந்தது சினிமா மொழி'' என்றவர் தொடர்ந்தார்.

கனவை வெல்ல ஒரு முயற்சி!

''பெண்களின் அறிவை, சுய சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறோம். பெண்களை தேவி, தெய்வம் என்று சொல்லி 'ஆமாம் சாமி’ போடவைத்துவிடுகிறோம். தனித்தன்மையோடு, தனி அடையாளத்தோடு பெண்களை வளர்க்க வேண்டும்'' என்றவர் சிறிது இடைவெளிவிட்டு, ''தன் சுய விருப்பு வெறுப்புகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவன் தீவிரவாதி. அப்படி என்றால், கண்ணகி தான் முதல் தீவிரவாதி. அவள் தன் சுய கோபத்துக்காக மதுரையை எரித்தாள். அவளுக்குச் சிலைவைத்து இருக்கி றோம்'' என்று பேசியது பலருக்குப் புதிய பார்வையாகப் பட்டது,

''சமரசத்துக்கு உட்பட்டே 'அழியாத கோலங்கள்’, 'மூன்றாம் பிறை’ எடுத்தேன். 'வீடு’, 'சந்தியாராகம்’ போன்ற படங்கள் சமரசத்துக்கு உட்படாமல் எடுக்கப்பட்டவை. இவை தமிழ் சினிமா உள்ள வரை நான் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு.   படைப்பாற்றல் என்பது கனவை வெல்லும் ஒரு முயற்சி.  சமீபத்தில் தேசிய விருது அறிவித்த நாள் அன்றுதான் என் பிறந்த நாள். என் பிள்ளை கள் வெற்றிமாறனும் சீனுராமசாமியும் தேசிய விருது அறிவிப்பு செய்தியோடு என்னைப் பார்க்க வந்தனர். வணிகச் சினிமாவை ஏளனமாகப் பார்க்காமல், அதற்குள் இருந்தே அற்புதமான சினிமாவைப் படைக்கலாம் என்பதற்கு என் பிள்ளைகளே உதாரணம்'' என்றார் பாலுமகேந்திரா!

க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism