Published:Updated:

என் ஊர்!

சென்னை நெருப்புவிளக்கும் ஏற்றலாம்... வீட்டையும் எரிக்கலாம்!

என் ஊர்!

சென்னை நெருப்புவிளக்கும் ஏற்றலாம்... வீட்டையும் எரிக்கலாம்!

Published:Updated:
##~##

'பொல்லாதவன்’ மூலம் அறிமுக முயற்சியிலேயே முத்திரை பதித்து, இரண்டாவது படைப்பான 'ஆடுகளம்’ மூலம் தேசிய அங்கீகாரம் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், தான் வளர்ந்த, தன்னை வளர்த்த சைதாப்பேட்டையின் பெருமை பேசுகிறார்!

 ''கடலூரில் இருந்து சென்னைக்கு வரும்போது எனக்கு 12 வயசு. சென்னைதான் எனக்கு வாழ்க்கையையும், மனிதர்களையும் அறிமுகப்படுத்தியது. அதுதான் என் ஊராக மாறியது. நான் பார்த்து, ரசித்த எல்லாப் பெரு நகரங்களையும்விட சென்னை அழகானது. வெளியூர்களில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் 'இதெல்லாம் ஒரு ஊரா, எங்க ஊர் மாதிரி வருமா?’ எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். ஆனால், அவர்களே ஆறு மாதம் சென்னையில் இருந்து பழகிவிட்டால், பிறகு  அவர்களால் இந்நகரத்தை விட்டு விலக முடியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

எனக்கு என்னவோ, சென்னையின் வளங்களும், நலங்களும் வந்து குடியேறியவர்களுக்குத்தான் கிடைக்கிறது எனத் தோன்றுகிறது. அப்படி வந்து குடியேறியவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கெட்ட பெயரையும் சம்பாதித்துக்கொள்கிறது சென்னை.

நான், அம்பத்தூரில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல்.  என் வீட்டில் இருந்து யாரும் உடன் வந்து தங்க முடியாத நிலைமை. என் இக்கட்டான சூழலை உணர்ந்த காமராஜ் என்ற நண்பன் என்னை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அம்பத்தூரில் அது ஒரு ஒண்டுக் குடித்தன வீடு. அவன் தன் அம்மா, அப்பாவிடம், 'இது வெற்றி. என் நண்பன். இனி இங்கே தங்கித்தான் படிப்பான்’ என்று மட்டும் சொன்னான். முழுதாக இரண்டு வருஷம் அங்கே தங்கிப் படித்தேன் நான். 'காமராஜால படிக்க முடியலை. எனக்கு  இன்னொரு பிள்ளை இருக்கு. அது படிக்குதுன்னு நினைச்சிட்டுப்போறேன்’னு அந்த அம்மா என்னைப் பார்த்துக்கிட்டாங்க.  

என் ஊர்!

சைதாப்பேட்டை பக்கத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. பேன் பேட்டை ஏரியா. அங்கேயும் ஒண்டுக் குடித்தன வீடுதான். 'லேட்டா வர்றே, நண்பர்கள் வர்றாங்க, ரொம்ப நேரம் லைட் எரியுது, பேசிக்கிட்டு, சிரிச்சுகிட்டே இருக்கீங்க’ன்னு ஏகப்பட்ட புகா ரோட ஹவுஸ் ஓனர் திட்டிட்டே இருப்பாங்க. ஆனாலும் கிருஷ்ணவேணி அம்மா அன்பா இருப்பாங்க. அங்கேதான் அஞ்சு வருஷம் தங்கி இருந்தேன். காலி பண்ணிட்டு வரும்போது, 'ஏன்டா வெற்றி, எங்களைவிட்டுப் போறே?’னு கட்டிப்புடிச்சு அழுதாங்க அந்தப் பெரியம்மா. நான் இப்ப இருக்கிற வீட்டின் சொந்தக்காரர் வட சென்னையைச் சேர்ந்தவர். 'வெற்றி நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போனால், சொந்த வீட்டுக்குத்தான் போக வேண் டும். அது வரை இந்த வீட்டைக் காலி செய்யக் கூடாது’ எனச் சொன்ன நல்ல மனசுக்காரர்.

என் ஊர்!

இங்கே கலாசாரச் சீரழிவு, மக்கள் உண்மையாக இல்லை என்று சொல்பவர்கள், இரவுகளில் பார்க் ஷெரட்டன் பாஷாவில் இருப்பார்கள். மிடில் கிளாஸ்தான் இதில் இக்கட்டில் இருப்பதாக உணர் கிறேன். சென்னையின் எளிய மனிதனுக்கு எந்த விகல்பங்களும் இல்லை. சென்னையின் மரபு இசை கானா. அதில் எவ்வளவோ பதிவுகள் இருக்கு. இது மாதிரி எந்த நகரத்துக்கு இருக்குன்னு சொல்லுங்க? இங்கே பதிவு செய்ய வேண்டிய சில திருவிழாக்கள் உண்டு. உண்மையும், நட்பின் ஆழ மும் பாசமும் புழங்குகிற இடங்கள் அவை. நான் சைதாப்பேட்டையில் இருந்தபோதுதான் வாழ்க் கையைப் படித்தேன். 40 சிகரெட்டும், 50 டீயும் இருந்தால், மாசத்துல பாதி நாட்களை ஓட்டிவிடலாம்னு இருந்த அருமையான நாட்கள் அவை.

இங்கே இருக்கிற அஸ்லாம் டீக்கடைக்கு விடியற்காலை இரண்டே முக்கால் மணிக்குப் போய் கடைசி டீயைக் குடிப்போம். கடையை மூடிவிடுவார்கள். மறுபடியும் மூணே காலுக்குத் திரும்பி வரு வோம். கடையைத் திறந்துவிடுவார்கள். அஸ்லாம் கடையை மூடுவதும் திறப்பதும் நாங்கள்தான். பல பரீட்சைகளுக்கு அந்த டீக்கடை பெஞ்சில்தான்  படித்து இருக்கிறேன். மற்ற நேரங்களில் துரத்தி அடிக்கும் வரை செஸ் ஆடிக்கொண்டு இருப்பதும் அங்கேதான். வாழ்க்கையைக் கத்துக்கிட்டதும், தெரிஞ்சுக்கிட்டதும் அங்கேதான். மீதிப் பாடத்தை லயோலா கல்லூரி கத்துக்கொடுத்தது. ராஜநாயகம் ஆசிரியரைப் பார்த்ததும், பாலுமகேந்திராவைப் பார்த்ததும் அங்கேதான் நடந்தது.

அசல் சென்னைவாசிகள் சிக்கனமானவர்கள். அரை பக்கெட் தண்ணீரில் குளியலை சுத்தபத்தமாக முடித்துக்கொள்வார்கள். 10 பக்கெட் தண்ணீரில் குளித்துவிட்டு, 'இதெல்லாம் ஊரா... தண்ணிக் கஷ் டம் தாங்கலை’னு புலம்புறவங்க, நிச்சயம் வேற ஊர்ல இருந்து வந்தவங்களா இருப்பாங்க.

'ரோட்ல யாரும் மயங்கி விழுந்தா, அவரைத் தூக்கிவிடுறது யாருன்னு கவனிங்க. நிச்சயம் அவர் சென்னைக்காரராகத்தான் இருப்பார்’னு என் நண் பர் ஒருவர் சொன்னார். இதைப் பல தடவை சோதித் துப் பார்த்து 'ஆமால்ல’ன்னு ஆச்சர்யப்பட்டு இருக் கேன். என்னைப் பொறுத்தவரை, சென்னை உங்க கனவுகளுக்கு வண்ணம் சேர்க்கும் இடம். சென்னை சரியான நெருப்பு. அதில் அடுப்பும் எரியவைக்கலாம். சாமி விளக்கும் ஏத்தலாம். வீட்டையும் எரிக்கலாம். அந்த நெருப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கு!''

- நா.கதிர்வேலன், படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism