Published:Updated:

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

Published:Updated:
##~##

ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்வீடன், போர்ச்சுக்கல்... என திசைக்கு ஒரு நாட்டில் இருந்து உளியோடு சுற்றுலா கிளம்பி வந்து இருக்கும் கலைஞர்கள் குழு, மாமல்லபுரத்தில் மையம்கொண்டு இருக்கிறது. கலை ப்ளஸ் ஆன்மிகக் கைகோப்பில் அழகாக நிற்கும் கடற்கரைக் கோயிலின் நுணுக்க மான சிற்ப வேலைப்பாடுகளில் லயித்துப் போன இவர்கள், மாமல்லபுரத்திலேயே தங்கியிருந்து சிலை வடிக்கத் தொடங் கியது, ரசனைக்கு அவர்கள் அளிக்கும் ஆச்சர்ய மரியாதை!

 அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்துக்கொண்டு இருந்த சிற்பக் கலை உற்பத்தியாளர் சங்கப் பொருளாளர் பாஸ்கரன், ''எங்கள் சிற்பக் கலைக்கூடத்தில் உருவான கலை நுணுக்கம் மிகுந்த சில சிலைகள், அயர்லாந்து 'விக்டோரியா வே’ பூங்காவில் இருக்கிறது. அந்தச் சிலை களின் வேலைப்பாடுகளில் மனதைப் பறிகொடுத்த வெளிநாட்டவர்களில் ஒரு பகுதியினர்தான் ஒரு சுற்றுலாக் கலைக் குழுவாக இங்கே வந்து இருக்கிறார்கள். இந்தக் குழுவில் ஓவியர், சிற்பி, டாக்டர் எனப் பலரும் இருக்கிறார்கள்.  கற்க வந்திருக்கும் இவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது!'' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

இந்தச் சுற்றுலா கலைக் குழுவை வழிநடத்துபவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்ஃடெபனோ. ஸ்வீடனில் சிற்பக் கலைக்கூடம் நடத்திவரும் இவர், ''கலைக்கு இனம், மொழி பேதம் கிடையாது என்பார்கள். ஆனால், உண்டு என்பதுதான் என் வாதம். உலகில் வேறு எந்த சிற்பக் கலைஞர்களிடமும் இல்லாத தனித்துவம் தென்னிந்திய சிற்பக் கலைஞர்களிடம் உண்டு. மாமல்லபுரக் கற்கோவில் சிற்பங்களே இதற்கு உதாரணம். இதன் உயிரோட்டத்தை வேறு எங்கும் காண முடியாது. இதற்கு சிற்பிகள் மட்டுமே முழுக் காரணம் என சொல்லி விட முடியாது. இயற்கையாகவே இந்தியா, சிற்ப வேலைப் பாடுகளுக்கு ஏற்ற கற்கள் கிடைக்கும் பகுதியாக உள்ளது!'' என்கிறார்.

மல்லையில் மனம் தொலைத்த வெள்ளை!

இங்கிலாந்தின் ஃபிசியோதெரபிஸ்ட் ஃபிரான்சிஸ் உலோக வேலைப்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். ''மருத்துவம் என் தொழில். கலைநயம் மிக்க உலோக வேலைப்பாடுகளில் நேரத்தைச் செலவிடுவது என் பொழுதுபோக்கு. வாழ்க் கைப் பயணத்தில், மனதை எப்போதும் புத்துணர்வோடு வைத்துக்கொள்ள இதுபோன்ற பயிற்சிக் களங்கள் தேவைப்படுகின்றன. தசைகளையும் எலும்புகளையும் மட்டுமே தெரிந்துவைத்து இருந்த எனக்கு, இப்போது கற்களின் வகைகளையும் கலையின் வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு!'' என்கிறார் பூரிப்பு ததும்பும் வார்த்தைகளில்.

இந்தக் குழுவினரோடு பயிற்சி பெற்று வரும் 24 வயது எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரான கமலக்கண்ணனின் சொந்த ஊர், சென்னை அயனாவரம். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால், தமிழ் பேசத் தடுமாறுகிறார். சித்தப்பா, அத்தை என சொந்த பந்தங்களின் கவனிப்பில் சென்னையில் தங்கியிருப்பவர், தினமும் பயிற்சிக்காக மாமல்லபுரம் வந்து செல்கிறார். இன்னும் அடுத்தடுத்து பல குழுக்களாக வெளிநாட்டு வெள்ளைக் கலைஞர்கள் சிற்பக் கலையை கற்று உணர மல்லை மண்ணில் கால் பதிக்க வருகிறார்களாம்.  வரவேற்போம்!

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism