Published:Updated:

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

Published:Updated:
##~##

ரை டவுசரும், நீலப் பாவாடையும் இல்லாததுதான் குறை. மற்றபடி 25 வருடத்துக்குப் பின்னால் போய்விட்டார்கள் அந்த முன்னாள் மாணவர்கள். சிலர் கோலிக் குண்டு ஆடினார்கள். ஸ்பிரிங் துப்பாக்கியைக் கொண்டுவந்திருந்த ஆவல்பீர், ''அப்போ இதை வெச்சுத்தானே என்னை பயமுறுத்துவே. ஹேண்ட்ஸ் அப்!'' என்று வேலவனை விரட்டிக்கொண்டு இருந்தார்.

குடும்பம், அலுவலகம், வியாபாரம் என்று பரபர டென்ஷனில்  ஓடிக்கொண்டு இருக்கும் 35 ப்ளஸ் வயதுக்காரர்கள் மீண்டும் தங்கள் குழந்தைப் பருவத்துக்கே திரும்பினால், எப்படி இருக்கும்? அந்தக் கற்பனையை நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள் மதுரை நரிமேடு நேரு வித்யாசாலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். 'ஞாபகம் வருதே’ என்ற பெயரில் 1982-ல் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து 1992-ல் 10-ம் வகுப்பு முடித்தவர்களின் 'கெட் டு கெதர்’ சந்திப்பு அது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

அப்போது ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் குழப்பியடித்த இரட்டைச் சகோதரர்களான ராமன், லட்சுமணன் இப்போ தும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள். ''மாப்ள... நீ கறுப்பா குண்டா இருக்க. உன் தம்பி குண்டா கறுப்பா இருக்கான்!'' என்று இரண்டு வித்தியாசம் கண்டுபிடித்துச் சொன்னார்கள் செந்தில் அண்ட் கோ.

ஹலோ எஃப்.எம். ஆர்.ஜே ஜெயராமும் முன்னாள் மாணவராக அங்கே ஆஜர்.    நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அவர் மைக் பிடித்தபோது, கரவொலியில் அரங்கு அதிர்ந்தது. ''ம்ஹூம்... இன்னிக்கு நீங்க எவ்வளவு நேரம் கை தட்டிட்டே இருந்தாலும் நான் பேசி முடிக்காம மேடையைவிட்டு  இறங்குறதா இல்லை!'' என்று அவர் டைமிங் கமென்ட் அடிக்க, செம சிரிப்பலை.

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!

பள்ளிக்கூடம் வந்ததும் பலரும் தேடியது சின்ன வயதில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்ட 'அங்கு’ கடையைத்தான். அவர்களின் ஆசை யைப் பூர்த்திசெய்வதற்காக விழா ஏற்பாட் டாளர்களே, 'அங்கு மாதிரிக் கடை’ ஒன்றை அமைத்திருந்தார்கள்!

சின்ன வயதில் சாப்பிட்ட புளி மிட்டாயை யும், கடலை உருண்டையையும் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் நந்தினி. ''அப்போலாம் ஸ்கூலுக்கு வந்ததும் அங்கு கடையில, புளி மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளப்பூ, ஹார்லிக்ஸ் மிட்டாய், ஜவ் மிட் டாய், சக்கர மிட்டாய், பொரி உருண்டை, எள்ளுருண்டை, தட்டு, ஜாம், இலந்தைப் பழ ஜூஸ்  எல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன். இப்ப இந்த ஐட்டம் எல்லாம் கிடைக்கிறது இல்லை. இதை எல்லாம் எங்கே இருந்தோ தேடிக்கொண்டு வந்திருக்காங்க. இன்னிக்கு விட்டா கிடைக்காதுல்ல, அதான் களம் இறங்கிட்டேன்!'' என்கிறார் சந்தோஷமாக.

'தெருவோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது’ என்று அறிவுரை கூறும் டாக் டர் இளவஞ்சி, அந்தக் கடையில் தன் குழந்தைகள் தின்பண்டம் சாப்பிடுவதைத் தடுக்காததை ஆச்சர்யமாகப் பார்த்தார் அவரது டாக்டர் கண வர் இளையகுமார். ''அங்கு கடை அப்பளத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? இங்கே வந்ததும் எனக்குக் குப்பி பாட்டி ஞாபகத்துக்கு வந்துட்டாங்க.  அவங்ககிட்டதான் மாங் காய் துண்டு வாங்கிச் சாப்பிடுவேன். அந்தப் பாட்டிக்குச் சரியா கணக்கு வராதுன்னு அவங்களுக்கு கேஷியர் வேலையும் பார்த்திருக்கேன்!'' என்று கணவரைச் சமாதானப்படுத்துகிறார் இளவஞ்சி.

தமிழ்த் தாய் வாழ்த்து, ப்ரேயர் சாங் பாடும்போது முன்னால் நிற்பவரின் தலையில் கொட்டுவது, ஜடையைப் பிடித்து இழுப்பது என சிறு வயது சேட்டைகளை மீண்டும் அரங்கேற்றினார்கள் இந்த முன்னாள் மாணவர்கள். பள்ளிப் பருவத்தை பிரதிபலித்த புகைப்படக் கண்காட்சியில் தங்களோடு பயின்று மறைந்த சிலரது புகைப்படங்களைக் கண்டதும் கண் கலங்கி அவர்கள் நின்றது நெகிழ்வான தருணம். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க, அவர்கள் பதிலுக்கு குரூப் போட்டோ எடுத்து உடனடியாக அனைவருக்கும் வழங்க, அன்-லிமிடட் சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்கள் அனைவரும்!

-கே.கே.மகேஷ்,  படங்கள்:க.கார்த்திக்

புளி மிட்டாய்.. பொரி உருண்டை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism