Published:Updated:

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

Published:Updated:
##~##

க்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்னைகள்? ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் நடக்கும் 'மக்கள் குறை தீர்க்கும் நாள்’ கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் நடந்த 'கலெக்டர் தர்பார்’ நிகழ்ச்சியில் ஆஜரானோம்.

 காலை 9 மணிக்கே கலெக்டர் அலுவலக வளாகம் களை கட்டுகிறது. அதிகாரிகளும் மக்களும் கலெக்டர் ஜெயராமன் வருகைக்காக காத்திருக்கிறார்கள். மக்களின் பிரச்னைகளை மனுவாக எழுதிக் கொடுப்பதையே சிலர் தொழிலாக செய்கிறார்கள். அவர்களிடம்  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலெக்டர் தர்பார்!

5 கொடுத்து, பிரச்னையை சொல்லிவிட்டால், ஐந்தே நிமிடங்களில் மனு ரெடி. வரிசையில் நின்று மனுக்களை ஆட்சியரிடம் அளிக்கிறார்கள் மக்கள். அவர் அதனைப் படித்துப் பார்த்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு பாஸ் செய்கிறார். ''இந்த பிரச்னையை இன்னும் ஒரு வாரத்தில் சரிபண்ணிடுங்க!'' என்ற ஆட்சியர் உத்தரவிட்டதும், மனு அளித்தவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம். கையெடுத்துக் கும்பிட்டு நகர்கிறார்கள்.

கலெக்டர் தர்பார்!

வாசுதேவநல்லூரில் இருந்து வந்திருந்தார் ராமர் அம்மாள். வரிசை நீண்டுகிடந்ததால், தரையில் கால் நீட்டி அமர்ந்து வெற் றிலை இடிக்க ஆரம்பிக்கிறார். ''எனக்கு 70 வயசாயிடுச்சு. முதியோர் உதவித் எங்க தாலுகா ஆபீஸுக்கு பல தடவை அலைஞ்சுட்டேன். இன்னும் கிடைச்சபாடு இல்லை. அதான் பஸ் ஏறி மனு குடுக்க வந்துட்டேன்!'' என்கிறார்.

மனு கொடுத்துவிட்டு டீக்கடைப் பக்கம் ஒதுங்கி நின்ற கோடாரங்குளத்தைச் சேர்ந்த பாபநாசம், ''ஊர்ல அனுமதி இல்லாம கிரானைட் குவாரி நடக்குது. விதிமுறையை மீறி தாமிரபரணி ஆத்துக்குப் பக்கத்திலேயே இந்த குவாரி இருக்கு. அதனால் ஆற்றின் போக்கே மாறி எங்க கிராமத்தின் விவசாயமே அழியும் நிலைமையில் இருக்கு!'' என்றார்.

திடீர் என ''பட்டா இங்கே... நிலம் எங்கே?'' என்று கோஷமிட்டபடி ஒரு கும்பல் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய, பரபரப்பு அடைகிறார்கள் காவலர்கள். வழி மறிக்கப்பட்ட பிறகு, தணிந்த குரலில் கோஷம் போடுகிறார்கள். ''பாலா மடையில் இருந்து வர்றோம். 2001-ல் அரசாங்கம் எங்களுக்கு இலவசப் பட்டா கொடுத்துச்சு. ஆனா, அதுக்கான இடம் எங்கே இருக்குன்னு அளந்து காட்ட மாட்டேங்கிறாங்க. தாலுகா ஆபீஸுக்கு நடையா நடந்ததுதான் மிச்சம். அதான் பட்டாவோட வந்துட்டோம். எங்களுக்குச் சரியான பதில் கிடைக்கலைன்னா, பட்டாவை திரும்பக் கொடுத்திருவோம்!'' என்று கும்பலின் தலை ஆவேசம் காட்ட, அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி மனுவைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைக்கிறார்கள்.

சுரண்டையில் இருந்து குழந்தையுடன் வந்திருந்த மீனாட்சிக்கு ஏறுவெயிலில் தலை கிறுகிறுத்துவிட்டது. ஒரு டீயை வாங்கி குழந்தைக்கு பாதியைப் புகட்டிவிட்டு, மீதியை தான் குடித்து ஆசுவாசப்படுகிறார்.

மனுக்களுக்கும் பிரச்னைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கம் சைனா பொருட்களின் விற்பனை ஜோராக நடக்கிறது. டார்ச் லைட்டை எடுத்துக்காட்டும் கடைக்காரர், ''இந்த டார்ச்சைப் பாருண்ணே... ஒரு மைல் தூரத்துக்கு லைட் அடிக்கும். காடு மேடுன்னு அலையுற உங்களுக்கு ரொம்பத் தோதா இருக்கும். உனக்காக சல்லிசா கொடுக்கு றோம்ணே!'' என வலை வீசிக்கொண்டே இருக்கிறார். மதியம் மனு கொடுத்த சாதனையே, அந்த மனுவின் வேண்டுகோள் நிறைவேறிவிட்ட திருப்தி அளிக்க, சின்ன உற்சாகத்துடன் கலைகிறது கூட்டம்!  

- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism