Published:Updated:

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

Published:Updated:
##~##

மிழகத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறு உறங்கிக்கொண்டு இருக் கிறது, செய்யாறில் உள்ள இந்தப் புத்தக அலமாரிகளில்!

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற, முன்னாள் தலைமை ஆசிரியர் பொ.அ.அண்ணாமலை சேகரித்துவைத்து இருக்கும் புத்த கங்களேஇந்தப் பொக்கிஷங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அறிஞர் அண்ணா படித்த, மு.வ. பேராசிரியர் ஆகப் பணியாற் றிய பச்சையப்பன் கல்லூரியில்தான் நானும் படித்தேன். திராவிட இயக் கத்தின் ஆரம்ப காலகட்டம்,      தமிழகத்தில் அரசியல் உணர்வையும் அறிவு சார்ந்த தேடலையும் விதைத்த காலகட்டம்.

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

தெருக்கள்தோறும் படிப்பகங்களை ஏற்படுத்தி, அரசியலையும் உலக வரலாற்றையும் சித்தாந்தங்களையும் எளிய மக்களுக்கும் கற்றுக் கொடுத்தது திராவிட இயக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், குத்தூசி குருசாமி, நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, டி.கே.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முன்னோடிகளின் புத்தகங்கள் ஏராளமான தமிழக இளைஞர்களை வாசிக்கத் தூண்டின. அப்படி உருவான நான் படித்து முடித்த புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கி, இப்போது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என் அல மாரியில். சில புத்தகங்களை நண்பர்கள் வாங்கித் திருப்பித் தருவது இல்லை. ஆனால், நட்பு முறிந்தாலும் பரவாயில்லை என்று விடாப்பிடியாகப் போராடி, அந்தப் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுவிடுவேன்.

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

அண்ணாவின் 'ஓர் இரவு’, 'ரங்கூன் ராதா’ தொடங்கி அவர் திரைக்கதை எழுதிய புத்தகங்கள், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், சட்டமன்ற உரைகள் என அண்ணா தொடர்பான சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. இதேபோல் 1925-ல் இருந்து 1972 வரையிலான காலகட்டத்தில் வெளியான தந்தை பெரியாரின் புத்தகங்களையும் சேகரித்துவைத்து உள்ளேன். வே.ஆனைமுத்துவால் வெளியிடப்பட்ட பெரியார் தொகுப்பு தொடங்கி, சமீபத்தில் வெளியான புத்தகங்கள் என 200-க்கும் மேற்பட்ட பெரியார் தொடர்பான புத்தகங்கள் என்னிடம் உள்ளன. பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து மற்றும் தமிழின் முக்கியமான கவிஞர்களின் புத்தகங்களும் என்னிடம் உள்ளன. ஐந்து உலகத் தமிழ் மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், சமீபத்திய செம்மொழி மாநாடு வரை என்னிடம் உள்ளன.

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் பலியான துயரம் தோய்ந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷனில் நானும் இடம்பெற்றிருந்தேன்.  இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,750 பள்ளிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். நாங்கள் பார்வையிட்ட பள்ளிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறைகள், விபத்தில் இருந்து தப்பிப்பதற்கான வசதிகள் என அந்தப் புள்ளிவிவரங்களையும் சேகரித்துவைத்து இருக்கிறேன். சட்டப் பேரவைத் தொடர்பான ஆவணங்கள், தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் தொடர்பான செய்திகள், ஜெயலலிதா, கருணாநிதி மீது போடப்பட்ட வழக்குகளின் விவரங்கள், ஈழப் பிரச்னை தொடர்பான செய்திகள், புத்தகங்கள், பேப்பர் கட்டிங்குகள் எனப் பலவற்றையும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இதனால் பி.ஹெச்டி ஆய்வு

நூற்றாண்டுகளைப் பாதுகாக்கும் குடும்பம்!

மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பவர்கள் என்னிடம் வந்து குறிப்புகள் எடுத்துச் செல்வது உண்டு.

அவ்வளவு ஏன், 1980-ல் செய்யாறு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பாபு ஜனார்த்தனத்துக்குப் பென்ஷன் கிடைக்க வில்லை. பிறகு, என்னிடம் இருந்த பேப்பர் கட்டிங்குகளை ஆதாரங்களாகச் சமர்ப்பித்து பென்ஷன் பெற்றார்!'' என்கிறார் அண்ணாமலை சிறு புன்னகையுடன்.

''தாத்தாவுக்கு இந்தச் சேமிப்பில் ஆர்வம் என்றால் பேரக் குழந்தைகளின் ஆர்வம் வேறு திசை யில்!'' என்கிறார் அண்ணாமலையின் மனைவி விஜயகுமாரி. இவரும் பேரன் சூர்யா, பேத்தி வர்ஷினி மூவரும் பழைய நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டு உள்ளனர். 1800-ம் ஆண்டு தொடங்கி இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளின் அஞ்சல் தலைகளும் 1855-ல் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சிலோன், பர்மா ஆகிய நாடுகளின் அஞ்சல் தலைகளையும் இவர்கள் சேகரித்து இருக்கிறார்கள்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism