Published:Updated:

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

Published:Updated:
##~##

காத்துக்கிடக்கும் கண்கள் அனைத்திலும் நம்பிக்கை பூத்துக் கிடக்கிறது. மாற்றுத் திறனாளிகள், மழிக்கப்படாத முகத்துடன் கிரா மத்து விவசாயிகள், கைக்குழந்தை யுடன் பெண்கள் எனக் கலவை யான கூட்டம். திங்கள் கிழமை காலைகளில் 9 மணிக்குத் தொடங் கும் கலெக்டர் குறை தீர்க்கும்கூட் டத்துக்கு வந்தவர்கள்தான் அவர் கள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள்.

 9 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கும் என்றாலும் காலை 7.30 மணிக்கே கூட்டம் குவியத் தொடங்குகிறது. ''ஏம்பா சின்ராசு மத்தியானம் 1 மணிக்கெல்லாம் கூட்டம் முடிஞ்சிடுமாமே... நம்ம கருப்பையா ஆரணியில இருந்து வர்றேன்னு சொன்னானே... வந்து சேர்ந்திருவானா? இல்லீன்னா ஒரு போன் பண்ணி 'வராதே’ன்னு சொல்லுப்பா'' என்றார் சம்சுதீன். ''அட இல்லைப்பா, கூட்டம் அதிகமாயிடுச்சுன்னா 3 மணி வரைக்கும் கூட்டம் நடக்குமாம். அதெல்லாம் கேட்டுட்டேன்பா!'' என் கிறார் சின்ராசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலெக்டர் தர்பார்!

கைக் குழந்தையோடு காத்திருக்கும் தாய்மார்களின் கைகளில் பால்புட்டி. ''அராத்து, இங்க வந்து ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கு பாரு!'' என்று தன் மகனை ஓடிப் பிடித்து விரட்டிக்கொண்டு இருந்தார் கற்பகம். புகார் மனு எழுதிக் கொடுப்ப வர்கள் ஒருபுறம் மனு எழுதிக் கொடுத்துக்கொண்டு இருக்க, அவர்களைச் சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம். மனு எழுதிக்கொடுக்க கட்ட ணம்  

கலெக்டர் தர்பார்!

5.

''பொது மக்கள் முன்பே தனித் தாசில்தாரிடம் புகார் மனுக்களைக் கொடுத்துவிட்டால், அலுவலக வாரியாகப் பிரித்து, கம்ப்யூட்டரில் பதிந்துகொள்வார்கள். அதற்கான அத்தாட்சி ரசீதையும் கையோடு கொடுத்துவிடுவார்கள். குறை தீர்க்கும் நாளில் இதைக் கொண்டுவர வேண்டும். கலெக்டர், எஸ்.பி, ஆர்.ஐ எல்லோரும் வருவார்கள். பொதுமக்கள் வரிசையாக வந்து தங்கள் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். அவர் அந்தப் புகா ரைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாருக்கான விளக்கம் கேட்பார். அவர்கள் அந்தப் புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அதன் நகலை மக்கள் குறை தீர்வுப் பிரிவுக்கு அனுப்புவார்கள். அதைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, 'என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்கிற விவரத்தையும் புகார் கொடுத்தவர் களுக்கு அனுப்பிவைப்பார்கள்!'' என்று விவரமாக விளக்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ஊழியர் கதிரேசன். அந்த நேரத்தில் திருவண்ணா மலை கலெக்டர் ராஜேந்திரன் வந்து சேர, கூட்டம் பரபரப்பானது.

கலெக்டர் தர்பார்!

தங்களுக்கு 'மூன்று சக்கர வண்டி வேண்டும்’ என்று கீழ்சிறுபாக்கம் கமலா, சளுக்கை அன்பு, கடலாடி பழனி மூவரும் மனு கொடுத்தனர். சம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களைக் கொடுத்த கலெக்டர், ''மதியத்துக்குள் வண்டிகளைக் கொண்டுவரச் சொல்லுங்க!'' என்று உத்தரவிட்டார். அடுத்தபடியாக வந்தவர் கண்ணப்பன். ''போன மாசமே வந்தேங்க ஐயா. பையன் ராணுவத்தில இருந்து இறந்துபோயிட்டான். அந்தப் பணம் வேணும்னு மனு கொடுத்திருந்தேங்க!'' என்று கண்ணப்பன் பணிவாக வேண்டுகோள் வைத்தார். ''பேரு சொல்லுங்க'' என்றார் அருகில் இருந்த தாசில்தார். ''கே.ராஜேஷ்குமார் சார்'' என்று சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில்  

கலெக்டர் தர்பார்!

50ஆயிரத் துக்கான காசோலை வந்து சேர்கிறது.

இதற்கு இடையில் பட்டா கேட்டு வந்தவர்கள், முதியோர் உதவித் தொகை கோரி வந்தவர்கள், பகுதி பிரச்னைக்காக மனு கொடுக்க வந்தவர்கள் என்று கூட்டம் மதியம் 1 மணியைத் தாண்டியும் நீண்டது.

மதியம் 1.30 மணி அளவில் மூன்று சக்கர வண்டிகள் வந்து சேர, அந்த மூவருக்கும் அதை வழங்கினார் கலெக்டர். ''வண்டியோட வேல்யூ 4,275 ரூபாம்மா. பத்திரமா வெச்சுக்கங்க!'' என்று சிரித்தபடி கூறினார் கலெக்டர் ராஜேந்திரன். ''ரொம்ப நன்றிங்கய்யா!'' என்று சொல்லும்போது அன்புவுக்கு நா தழுதழுத்தது. கூட்டத்திலேயே தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தவர்கள் மகிழ்ச்சியோடும், தீர்வு தள்ளிப்போனவர்கள் அலுப்போடும் கலைய, சிறிது நேரத்தில் வெறிச் சோடிப் போனது அந்த இடம்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

கலெக்டர் தர்பார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism