Published:Updated:

உண்மை.. உழைப்பு... உணவகம்!

உண்மை.. உழைப்பு... உணவகம்!

உண்மை.. உழைப்பு... உணவகம்!

உண்மை.. உழைப்பு... உணவகம்!

Published:Updated:
##~##

'வீட்டுச் சாப்பாடுபோல ஹோட்டல் சாப்பாடு கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு  விழுப்புரம்வாசிகளின் பதில், 'கம்பன் நகர் மகளிர் மன்றத்தினர் நடத்தும்  உணவகத் தில் கிடைக்கும்’ என்பதாக இருக்கும்!

 விழுப்புரம் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தான்  இந்த உணவகம் உள்ளது.  இதன் உரிமையாளர்கள் 15 பெண்கள். காலை 6.30 மணிக்கே களை கட்டிவிடுகிறது உணவகம். சமையல் செய்வது  தொடங்கி பரிமாறுவது வரை அனைத்துப் பணிகளையும் செய்வது பெண்களே.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மை.. உழைப்பு...  உணவகம்!

''சாருக்கு சாம்பார் ஊத்து!'', ''சிக்கன் குழம்பா, மீன் குழம்பா?'' போன்ற விசாரிப்புகளுக்கு இடையே நம்மிடம் பேசத் தொடங்கினார் குழுவின் தலைவி செண்பகம். ''ஆறு வருஷமாச்சு ஹோட் டல் தொடங்கி. கனவு மாதிரி இருக்கு. பொதுவா வீட்டுச் சாப்பாடுன்னாலே பொம்பளைங்க சமைப்பதுதான். ஆனா, கல்யாணத்துக்குச் சமைக்கிறதா இருந்தா லும் சரி, ஹோட்டலில் சமைக்கிறதா இருந்தாலும் ஆண்கள்தான் சமைக்கிறாங்க.

ஒரு குடும்பத்துக்கு சமைக்க மட்டும்தான் பெண்கள் உதவுவாங்க,  அதுவே பெரிய அளவில் வருமானம் ஈட்டும் வகையில் சமையல் செய்யணும்னா ஆண்கள்தான் சரிப்படுவாங்கன்னு இருக்கிற நிலைமையை மாத்தணும்னு நினைச்சோம்.

உண்மை.. உழைப்பு...  உணவகம்!

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலமா ஒரு ஹோட்டலை எப்படி நிர்வகிக்கிறதுன்னு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அதே ஆர்வத்தோட அவங்ககிட்டேயே, 'சொந்தமாத் தொழில் செய்யணும், உதவி செய்யுங்க’ன்னு கேட்டோம். 'ஹோட்டல் நடத்த ரெடியா’ன்னு கேட்டாங்க. முதல்ல கொஞ்சம் மலைப்பா இருந்தது. ஆனாலும், சரி சொன்னோம்.

இதே பூமாலை வணிக வளாகத்தில் ஒரு சின்ன இடத்தை எங்களுக்குக் கொடுத்தாங்க.  சமையல், சாப்பாடு பரிமாறுவதுன்னு சின்ன இடத்தில் மூச்சை இழுத்துப் பிடிச்சு கடை நடத்திட்டு இருந்தோம். கொஞ்ச நாள்லயே பிக்கப் ஆகிடுச்சு. இப்போ 500 பேருக்கு மேல் எங்க ஹோட்டலுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களே உண்டு!

உண்மை.. உழைப்பு...  உணவகம்!

காலையில் இட்லி, பொங்கல், பூரி வடை. மதியம் சாப்பாடு, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை. ராத்திரி புரோட்டா, இட்லி, தோசை, ஆம்லேட். பஸ் ஸ்டாண்ட் பக்கங்கறதால நல்லா வியாபாரம் நடக்கும். சமயங்களிலே போதையில வர்றவங்க 'காசு தர மாட்டோம்’னு கலாட்டா பண்ணுவாங்க. அப்போ மட்டும் மனசு கொஞ் சம் சங்கடப்படும். அதையும் இப்போ நேக்கா சமாளிக்கக் கத்துக்கிட்டோம்.

எனக்குக் கணவர் கிடையாது. எங்க குழுவுல இருக்கிற மத்த 14 பெண்களோட கணவர்களுக்கும் நிரந்தரமான வேலைன்னு எதுவும் கிடையாது. இந்த ஹோட்டல் வருமானம்தான் 15 குடும்பங்களுக்கும் கை கொடுக்குது. கேஸ் அடுப்பில் சமைச்சது கட்டுப்படி ஆகலைன்னு இப்போ விறகு அடுப்பு சமையல்தான்!

செவ்வாய், சனிக் கிழமைகளில் மட்டும் கூட்டம் குறைவா இருக்கும். அந்த நாளில் அசைவம் சாப்பிடுறவங்க கடைப் பக்கம் வர மாட்டாங்க. எங்க வாடிக்கையாளர்களில் பாதிக்கும் மேல அரசு ஊழியர்கள். வர்றவங்க வயிறும் மனசும் நிறைய நிறைய, எங்க வாழ்க்கைத் தரம் உயருது. அதானே எங்களுக்கு வேணும்!'' என்று மலர்ச்சியுடன் சொல்கிறார் செண்பகம்.

''சார், சாப்பாடு அருமையா இருக்கு. சுத்தி இருக்குற பெரிய ஹோட்டல்களில் காசு புடிங்கிக்குவாங்களே தவிர, வயித்துக்கு நல்லது பண்ணாது சாப்பாடு. அதான் இங்கேயே எப்பவும் வந்துடுறது. வெளியூர்லயும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி!'' என்றார் அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த வசந்த்.

''சாருக்கு 24 ரூபா வாங்கிக்கோ!'' என்றபடி சாம்பார் வாளியுடன் நகர்கிறார் செண்பகம்!

- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

உண்மை.. உழைப்பு...  உணவகம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism