Published:Updated:

ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு  என்ன  பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

நீங்கள் உங்கள் சகோதரிகளுக்கு இந்த ரக்‌ஷா பந்தனுக்கு என்ன பரிசுக் கொடுத்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ராஜஸ்தானில் ஒரு சகோதரர்,  நாம் யாரும் யூகிக்க முடியாத ஒரு பரிசைத் தந்து இருக்கிறார். அது பரிசு மட்டும் அல்ல... இந்தத் தேசத்துக்கான பாடம். ஆம். ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரைச் சேர்ந்த பிரேம் சந்த் ஷர்மா, தன் சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் பரிசாகக் கழிப்பறையைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார்.

ஆச்சர்ய சகோதரன்!

35 வயதான பிரேம் சந்த் ஷர்மா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரின் ஏழு சகோதரிகளில் ஒருவரை ராஜஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரோகிணி கிராமத்தில் திருமணம் செய்துகொடுத்துள்ளார். அங்கு வீட்டில் கழிப்பறை இல்லை. அதனால், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஊருக்கு வெளியே அவர் தங்கை சென்று வந்திருக்கிறார். இதை அறிந்த பிரேம், ரக்‌ஷா பந்தன் பரிசாக ரூபாய் 92,000 மதிப்பிலான நவீன வசதிகள் கொண்ட கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

''திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், இங்குள்ள பெண்கள் அதிகாலையிலும் மற்றும் இரவு நேரங்களிலும்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஊருக்கு வெளியே செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது விஷப்பூச்சிகள் கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, பகல் நேரத்தில் ஏதேனும் அவசரம் என்றால்கூட அவமானத்தால் வெளியே செல்வதில்லை. இதனால் உடல்நலச் சீர்க்கேடு ஏற்படுகிறது.இந்த நிலையில்தான் எப்படியாவது எனது சகோதரிக்குக் கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ரக்‌ஷா பந்தனுக்கு ஒவ்வொரு சகோதரனும், தனது சகோதரிகளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். நான் இந்தக் கழிவறையை எனது சகோதரிக்குப் பரிசளித்தேன். மேலும், வரும் ஆண்டுகளில் எனது அடுத்தடுத்த சகோதரிகளுக்கும், எனது மகளுக்கும் நிச்சயம் கழிவறை கட்டிக் கொடுப்பேன்” என்று ஒரு சிறந்த சகோதரனாக பெருமிதத்தோடு கூறுகிறார் பிரேம் சந்த் ஷர்மா.

முன்னத்தி ஏர்:

இதனை அறிந்த அந்த ஊரின் மற்ற இளைஞர்களும்... ''நாங்களும் எங்கள் சகோதரிகளுக்கு வருகிற அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுப்போம். எங்கள் சகோதரிகளுக்குக் கழிவறையை கட்டித்தருவது எங்களின் முதல் கடமையாகும்'' என்று உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.

விவரம் அறிந்த உதயப்பூர் கலெக்டர் ரோஹித் குப்தா, பிரேம் சந்த் ஷர்மாவை பாராட்டியதுடன், ''தங்கள் வீடுகளில் கழிவறை கட்டிப் பெண்களுக்குப் பரிசாகக் கொடுப்பவர்களுக்குப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திலிருந்து ரூபாய் 12,000 வழங்கப்படும்'' அறிவித்துள்ளார்.

'தனது சகோதரிகளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி வீணாகப் பணம் செலவு செய்து, தேவை இல்லாத பல பொருட்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்கும் சகோதரர்களைவிட, இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்து விடுபடுவதற்காகவும், மேலும் தன் சகோதரியின் மானம் போய்விடக் கூடாது என்பதற்காகவும் கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுத்த இந்த பிரேம் சந்த் ஷர்மா மற்றும் அந்த ஊர் இளைஞர்களைப்போலச் செயல்படும் ஒவ்வொருவரும், சகோதரிகளின் உண்மையான பாசம்வைத்த சகோதரர்களே..!

- ஜெ.அன்பரசன்

அடுத்த கட்டுரைக்கு