Published:Updated:

விதியினை நிதியால் வெல்வோம்! - #PersonalFinance

விதியினை நிதியால் வெல்வோம்! - #PersonalFinance
விதியினை நிதியால் வெல்வோம்! - #PersonalFinance

விதியினை நிதியால் வெல்வோம்! - #PersonalFinance

விதியினை நிதியால் வெல்வோம்! - #PersonalFinance

2000 வருஷத்துக்கு முன்னாடியே

"அருள் இலார்க்கு அவ்வுலகமில்லை பொருளிலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு "-ன்னு சொன்னார் வள்ளுவர்

1970-ஸ்ல

" காசே தான் கடவுளடா, அது கடவுளுக்கும் தெரியுமடான்னு” சொல்லிட்டாங்க 

அப்பவும் நமக்கு புரியல, தெரியல, உரைக்கல.....

லேட்டஸ்டா விஜய் சேதுபதி  "காசு பணம் துட்டு மணி, மணி....ன்னு "

இந்த பாட்டுல ரெண்டாவது பத்தில

" நல்லவங்க சம்பாதிச்சத நாறவாயன் தின்னுறான், கணக்கு போடத் தெரியாதவன் காச வாரி எறக்கிறான் "ன்னு சொல்லி இருப்பாங்க

பாட்டுல சொன்ன கணக்கு.... கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தலா தான் இருக்கும்,

ஆனா எப்படி காசு குவியுதுன்ன கேட்டா... அவங்க டிசைன்-ல இருக்குன்னு சொல்லுவாங்க... டிசைன்ல இருக்குறது எல்லா நூத்துல ஒரு பர்சன்ட் தான்.

இப்புடி காசு கொட்டுதுன்னா அவங்களுக்கு எங்க போட்டா என்ன கிடைக்குங்குற கணக்கு சூப்பரா தெரிஞ்சிருக்கும். எங்க போட்றதுங்குறது மட்டும் முக்கியமில்லை, எப்போ போடணும், எப்ப எடுக்கணும்குறதும் முக்கியம் தான்.

நல்லவிதமா சம்பாதிக்கணும்னாலும் ரெண்டு வழி தான். 1 .சம்பளம். 2 . வருமானம்

"என்னங்க சொல்றீங்க சம்பளம் தான வருமானம் " ன்னு அப்பாவியா கேட்டீங்கன்னா

சம்பளம் வேற வருமானம் வேற.

மறுபடியும் சொல்றேன். சம்பளம் வேற வருமானம் வேற.

சம்பளம்ங்கிறது நீங்க செய்யுற வேலைக்கு உங்க முதலாளி கொடுக்குற காசு.  வருமானம்ங்குறது உங்க கை காச எதுலயாச்சம் போட்டு, அதுல இருந்து வர்ற காசு. 

நம்மள்ல பலர்  மாத சம்பளக்காரங்க தான். மாசம் பொறந்தா எப்ப சம்பளம் வரும்ன்னு தான் ஆஃபீஸ் முழுக்க பேச்சா இருக்கும். சம்பளம் வந்த உடனே பேச்சுலரா இருந்தா வீட்டுக்கு இவ்வளவு, நம்ம ரூமுக்கு இவ்வளவுன்னு எடுத்து வெச்சிடுவோம். குடும்பமா இருந்தா சொல்லவே வேணாம். சம்பள கவர அப்படியே தூக்கிட்டு போய் வீட்டுக்கு சமர்ப்பணம் செஞ்சுட வேண்டியது தான். இப்படியே எங்க பொழப்பு ஓடிக்கிட்டிருக்கு தம்பி என்று பெருமுச்சு விடுபவராக இருந்தால் இனி வரும் காலங்கள்ல என்ன செய்வீங்க பாஸ். 

இப்ப இன்னொன்னும் தெரிஞ்சுக்குங்க.......!

சேமிப்புங்குறது வேற, முதலீடுங்குறது வேற.

 எப்படியோ காச மிச்சப்படுத்தி பருப்பு டப்பால, உங்க பெட்டீல, கல்லா பெட்டிக்கு உள் பாக்ஸ் வச்சிருக்குறது பேரு தான் சேமிப்பு.

காசு எதுல போட்டா நல்ல வருமானம் கிடைக்கும்னு தேடிப் பிடிச்சு அதுல காச போட்டு நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தோட எடுத்தா அதுக்கு பேர் முதலீடு.

இவ்வளவு வித்தியாசம் இருக்கா என்று ஆச்சர்யப்படாதீங்க இன்னமும் இருக்கு.

முதலீட்டுலயும், ரெண்டு இருக்கு

1. நிதி சார்ந்த முதலீடு - பணமா போட்டு திரும்ப பணமாவே எடுத்தா அதுக்கு பேர் நிதி சார்ந்த முதலீடு. பங்குச் சந்தை, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள் எல்லத்தையும் நிதி சார்ந்த முதலீடுன்னு சொல்லலாம். பொதுவா இது மாதிரியான முதலீடுகள ஈஸியா பணமா மாத்திடலாம்.

2. சொத்து சார்ந்த முதலீடு - ஒரு சொத்தை வாங்கிப் போட்டு தேவையானப்போ, இல்ல நல்ல விலைக்கு வர்றப்போ வித்தா அதுக்கு பேர் சொத்து சார்ந்த முதலீடு. தங்கம், வெள்ளி, நிலம் வாங்குறது எல்லாம் சொத்து சார்ந்த முதலீடுன்னு சொல்லலாம். இந்த வகையான முதலீட்ட அவ்வளவு ஈஸியா பணமா மத்த முடியாது. கொஞ்சம் பேரம் பேசி விலையை கரெக்ட் பண்ணி விக்கணும்.

சரி இப்போ என்ன பண்ணணும்னு சொல்றீங்க.. முதலீடு செய்யணுமா இல்ல சேமிக்கணுமா

.

.

.

.

சேமிக்கணும்னு சொன்னா 10% சரி, முதலீடுன்னு சொன்னா 90 % சரி.

அப்ப எது தான் 100 % சரி

உங்கள் எமர்ஜென்சிக்கு எப்பவுமே கையில ஒரு 10 சதவிகித சேமிப்பு இருக்கணும், மீதமுள்ள தொகையைத்தான் முதலீடு செய்யணும்.

ஐ ரிப்பீட்.

10 % சேவ் பண்ணணும், 90 % முதலீடு பண்ணணும்.


-மு.சா.கெளதமன்.

அடுத்த கட்டுரைக்கு