உள்துறை அமைச்சர் ஜெகன்னாத் ராய் பதவி பறிக்கப்பட்டதும், ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில்

ஈடுபடுகிறார். அவரது பர்சனல் டெலிபோன் உரையாடல்கள் தொடர்கிறது...

அடிபட்ட பாம்பு!

''பையாஜி... ஒரு நல்ல நியூஸ்... ஒரு கெட்ட நியூஸ்!''

''நல்ல நியூஸை முதல்ல சொல்லு, திரிபுராரி!''

''நமக்கு வேண்டிய மிச்சம் ஒரு எம்.எல்.ஏ-வையும் கரெக்ட் பண்ணியாச்சு.''

''உடனே அத்தனை பேரை யும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல கொண்டுபோய் ஹவுஸ் அரெஸ்ட்ல வையி. அவனுங்களுக்கு என்ன வேணும்னா லும் கொடு. ஆனா, செல்போனை மட்டும் கொடுக்காதே. அத்தனை

பேர் போனையும் புடுங்கி வெச்சிடு! கவர்னர் கூப்பிடுற வரைக்கும் அவனுங்க எங்கே இருக்கா னுங்கனு யாருக்கும் தெரியக் கூடாது. அது உன் பொறுப்பு!''

''எல்லாம் நான் செஞ்சு முடிச்சிட்டேன் பையாஜி. ஏ.ஸி. பஸ்ல மொத்தமாப் போட்டு, பாடிகார்டுகளையும் கூடவெச்சு கெஸ்ட் ஹவுஸுக்கு அத்தனை பேரையும் 'பேக்' பண்ணிட் டேன்.''

''அப்புறம் என்ன... கெட்ட நியூஸைச் சொல்லு!''

''எதிர்க் கட்சித் தலைவர் திவாரி இப்பத்தான் பேசினாரு. நம்ம கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை நீங்க கரெக்ட் பண்ணி வெச்சிருந்தாலும், இது வரை முதல்வருக்குக் கொடுத்திருந்த ஆதரவை உங்களுக்குக் கொடுக்க முடியாதாம்!''

''என்னய்யா குண்டைத் தூக்கிப் போடுற? நேத்துக்கூட நானே போன்ல பேசுனேனே... முதல்வரை ஒழிச்சிட்டு என்னை முதல்வராக்குறதுல ரொம்ப சந்தோஷம்னு சொன்னாரே அந்த ஆளு?''

''இருக்கலாம் பையாஜி. ஆனா, அவங்க கட்சியோட தலைமை நிர்வாகக் குழுவுல நேத்து சாயங்காலம் மீட்டிங் போட்டாங்களாம். உங்களை எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரிக்கிறதுபத்தி தனிப்பட்ட முறையில் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனா, உங்க பையன் விவேக் விக்கி ராய் பற்றி மீடியாக்கள் நடத்துற விமர்சனங்கள்தான் யோசிக்கவைக்குதாம். ரூபி கில் கொலை கேஸ்ல விவேக் விக்கி ராய் 'நிரபராதி'னு விடுதலை ஆனது பத்தி ஜனங்க மனசுல இருக்கிற கேள்விகளும் வெறுப்பும் எதிர்க் கட்சிக்காரங்களைப் பின்வாங்க வைக்குது. இந்தச் சூழ்நிலையில் உங்களை முதல்வராக்க அவங்க ஆதரவு காட்டுனா, ஜனங்களோட வெறுப்பு அவங்க கட்சி மேலேயும் திரும்பிடும்னு பயப்படுறாங்க! கட்சிக்கு இமேஜ் போயிடும்னு நடுங்குறாங்க!''

''(பிறப்பு தொடர்பான கடும் வார்த்தையுடன்) இப்ப மட்டும் என்னய்யா அவனுங்களுக்கு பெரிசா இமேஜ் வாழுது? அவனுங்க கட்சிக்காரன் ஆளும்போது பண்ணாத ஊழலா? இப்ப மட்டும் ஜனங்க இவனுங்களை புனித சிகாமணியா நினைச்சுக் கிட்டு இருக்காங்களாமா?''

''நீங்க சொல்றதும் நியாயம்தான் பையாஜி. ஆனா, விவேக் விக்கி ராய் விஷயத்துல எதிர்க் கட்சி தவிர, சில சுயேச்சை எம்.எல்.ஏ-க்களேகூட ஆரம்பத்துல இந்தக் கருத்துதான் சொன்னாங்க. இந்த நேரத்துல விக்கி ராய் பத்தி ஆர்ப்பாட்டமா, படாடோபமா நியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குறது நமக்கு நல்லது. அதே சமயம், எதிர்க் கட்சித் தலைவர் திவாரி வேறு ஒரு ஆஃபர் உங்களுக்கு வைக்கிறார்!''

''அதென்னது?''

''உங்களை முதல்வர் ஆக்கி, உங்க ஆட்சிக்கு ஆதரவு கொடுக்குறது மட்டும்தான் பிரச்னையாம். அதே சமயம், இந்த ஆட்சிக்கு ஆதரவா நிக்குற தன்னோட ஹோதாவைப் பயன்படுத்தி, அவரே போயி முதல்வர்கிட்டே பேசுறாராம். உங்களை உள்துறை அமைச்சர் பதவியிலேயே தொடரச் செய்யும்படி சிபாரிசு பண்றாராம். ஆனா, அதுக்கு நீங்க

1 கோடி தரணும்னு கேக்குறாரு!''

''நீ என்ன நினைக்குற?''

''புள்ளைங்க பண்ற தப்புகளை, பெத்தவங்க சுமக்குறது புதுசில்ல பையாஜி. இனியாச்சும் விக்கி ராயை கொஞ்சம் அடக்கியே வாசிக்கச் சொல்லுங்க. நீங்க உள்துறை அமைச்சர் பதவியை மறுபடி தக்க

வெச்சுக்கிட்டாத்தான் உங்களுக்கும் பாதுகாப்பு. இல்லாட்டி, முதல்வர் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமா நோண்டி நொங்கெடுத்து ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாரு. இன்னொரு சமயம் வரும்போது அந்த ஆளைக் கவுத்துட்டு, நீங்க ஆசைப்பட்டபடியே முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கலாம்!''

''ஒரு கோடி குடுத்துடலாம்னு சொல்றியா?''

''ஆமா பையாஜி!''

''உடனே முடியாதே!''

''நீங்க வாக்கு கொடுத்தாலே போதும். பேங்க்ல போட்ட மாதிரினு திவாரிக்குத் தெரியும் பையாஜி!''

''ஒழியுது. அப்படியே செய்!''

''சீமாக் கண்ணு... இப்பவும் டெல்லியில்தான் இருக்கியா?''

''ஆமா... டி.வி. ரிப்போர்ட்டர் வேலையில் இருந்து விடுபட்டு, லக்னோவில் இருந்து இங்கே வந்த பிறகு தான் தாராளமா மூச்சுவிட முடியுது. லக்னோ ஒரு கல்லறை மாதிரி இருந்தது எனக்கு.''

''அப்படி சொல்லாதே கண்ணு. உன்னையே நினைச்சுக்கிட்டு நான் லக்னோவில் இருக்கேன்ல? என் மனசுக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லக்கூடிய குருஜி... ஏதோ ஃபெதர்லாந்தாமே... அங்கே போயிட் டாரு!''

''ஃபெதர்லாந்து கிடையாது. நெதர்லாந்துனுதான் ஒரு நாடு இருக்கு.''

''ஃபெதரோ... நெதரோ... உன்னைப் பாக்காம என் உடம்புதான் உதறுது! நான் வேணா உன்னைப் பார்க்க டெல்லிக்கு வரட்டா? பிரமாதமான ஹோட் டலுக்கு எல்லாம் நான் ரெகுலர் கஸ்டமர். நம்மைப் பொத்திவெச்சுப் பார்த்துக்கிட்டு, பத்திரமா வெளியே அனுப்புவான்!''

''இப்ப நாம பார்க்க வேணாம். நானே அப்புறம் சொல்றேன். இங்கே ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன்!''

(பெருமூச்சு) ''சரி... ஒரு முத்தமாச்சும் இப்போதைக்குக் கொடேன்!''

(தயக்கத்துக்குப் பின்) பொச்... பொச்... பொச்!

''திரிபுராரி பேசுறேன், பையாஜி! எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை முதல்வர் கேட்டுக்கிட்டாரு. மறுபடி நீங்க உள்துறை அமைச்சர் ஆகப் போறீங்க. ஆனா, முதல்வரைக் கவுக்கிறதுக்கு எந்த சதியும் இனி செய்யக் கூடாது என்பது முக்கியமான கண்டிஷன்! முதல்வரே கட்சியில் சர்வ வல்லமைகொண்டவர் அப்படினு நீங்க ஒரு அறிக்கையும் விடணுமாம்.''

''என் தலைவிதி... விட்டுத் தொலைக்கிறேன்! என் கௌரவத்தை விட்டுக்கொடுக்காத மாதிரி நீயே வழவழா கொழகொழான்னு ஒரு அறிக்கை ரெடி பண்ணி ஃபேக்ஸ்அனுப்பு எனக்கு!''

''சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, பையாஜி... விவேக் விக்கி ராய் மட்டும் உங்களுக்கு மகனாப் பொறக்காம இருந்திருந்தா, இந்த சோதனைகள் உங்க பொது வாழ்க்கையில் வந்திருக்காது. முதல்வர் என்ன... நீங்க இந்திய தேசத்தின் பிரதமராகவே பதவியில உட்காரக்கூடிய அனுபவமும் தகுதியும் உள்ளவராச்சே! அதை எல்லாம் தாண்டி நீங்க பிளான் பண்ண ஆபரேஷன் செக்மேட் இப்படி ஆகிப்போச்சே!''

''யோவ் திரிபுராரி... நான் அடிபட்ட பாம்பு. எனக்குத் தோல்வியே கிடையாது. இப்போதைக்கு என்னோட செக்மேட் வெறும் ஸ்டேல்மேட்தான் ஆகி இருக்குது. சீக்கிரமே வேறு ஒரு காய் நகர்த்தத்தான் போறேன். அப்பப் பாருய்யா... அந்த முதல்வர் அப்படி இப்படி அசைய முடியாம, தானாவே பதவியில இருந்து இறங்கி ஆட்டத்தைவிட்டே ஓடிடுவாரு!''

''பையாஜி! நீங்க சொல்ற ரகம் இல்லை... செஞ்சு காட்டுற ரகம். இப்ப சொல்லியே காட்டிட்டீங்க. நானும் உங்களை முதல்வர் பதவியில் பார்க்கக் காத்துக்கிட்டு இருக்கேன்!''

''அப்பா! ரொம்ப சந்தோஷம். திரும்ப உள்துறை அமைச்சர் பதவியைப் பிடிச்சதுக்கு! கோடிக் கணக்குல காசைப் போட்டு லம்போர்கினி கார் வாங்கிவெச்சிட்டேனா... நீங்க அமைச்சர் பதவியில் இல்லாட்டி, அதை டெல்லி தெருவில் எப்படி நான் 150 மைல் வேகத்துல தைரியமா ஓட்ட முடியும்? (பெரும் சிரிப்பு)''

''விக்கி... நீ எத்தனை முக்கியமான தருணத்தில் என்னைக் கைவிட்டேனு இப்பக்கூட உனக்குப் புரியலை. அது போகட்டும்... மார்ச் 23 பார்ட்டி கொடுக்கப் போறேன்னியே... தேதி கன்ஃபர்ம்தானே?''

''ஆமாப்பா... ஆனா, என் செக்ரெட்டரி இருக்காளே... அவ ஒரு முட்டாள்! நான் என் ஃபைல்ல வெச்சிருந்த பழைய கான்டாக்ட் லிஸ்ட்டுக்கும் சேர்த்து பார்ட்டி அழைப்பிதழை அவ அனுப்பிட்டா! என்கிட்டே சம்பளத்தை வாங்கிக்கிட்டு, என் கம்பெனி விஷயத்துலயே மகாத்மா காந்தி வேஷம் போட்ட மோகன் குமாருக்கும் பார்ட்டி அழைப்பிதழ் போயிடுச்சு. அதே மாதிரி, உங்களுக்குப் பிடிக்காத அந்த சிங்கானியா குரூப் சேர்மனுக்கும் இன்விடேஷன் போயிருக்கு. இப்ப நான் என்ன செய்றது? அவங்களைக் கூப்பிட்டு, 'பார்ட்டிக்கு வர வேணாம்'னு சொல்லிடவா?''

''விக்கி! உன்கிட்டே பிரச்னையே இதுதான். நீ உன் செக்ரெட்டரிகளை எப்பவுமே மூளையை வெச்சுத் தேர்ந்தெடுக்கிறது இல்லே.... அழகைப் பார்த்து செலக்ட் பண்ணா இப்படித்தான் குழப்படி நடக்கும்!''

''இப்ப நான் என்ன செய்ய?''

''வரச் சொன்ன ஆட்களை வேண்டாம்னு தடுக்கிறது நாகரிகம் இல்லை. அப்படியே விடு. அதோட, அந்த மோகன் தன்னை மகாத்மா காந்தினு சொல்லிக்கிட்டு அந்தப் பார்ட்டியில் ஏதாச்சும் கேலிக்கூத்து பண்ணா... அதுவும் ஒரு டைம் பாஸ் மாதிரிதான் இருக்கும்!''

''நடுவுல ஒரு சந்தேகம் டாடி... மீடியாவெல்லாம் ஒரு கூச்சலா இருக்குதே... என் கேஸை மறு விசாரணைக்கு எடுத்துட மாட்டாங்கதானே?''

''அது எல்லாம் நடக்காது. நீ சந்தோஷமா இரு!''

''டாடி, ரொம்ப அவசரம்னு நீங்க பணம் கேட்டப்ப, நான் உதவ முடியாமப்போச்சு. என் மேல உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையே!''

''நிச்சயமா இல்லை. கடந்த காலத்தைப் புடிச்சுத் தொங்குற வழக்கம் எனக்கு எப்பவுமே கிடையாது.''

''இன்னொரு விஷயம்ப்பா! சீமானு ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் என்னைப் பார்க்க வந்தா... பேட்டி எடுப்பானு பார்த்தா, சினிமா சான்ஸ் கேக்குறா!''

''நீ என்ன சொன்னே?''

''அதெல்லாம் முடியாதுனு சொல்லத்தான் நினைச் சேன். அவ உங்களுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸான பொண்ணுன்னு சொன்னா. அதுவும் தவிர...''

''என்ன மகனே..?''

''அவ, எனக்கும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டாப்பா. எது கேட்டாலும் கோ-ஆபரேட் பண்றா. ஆளும் நல்லா 'கிண்'ணுன்னு இருந்தாளா... என்னால மறுத்து எதுவும் சொல்ல முடியாமப்போச்சு!''

''அது எச்சில் தட்டுடா மகனே...''

''இருக்கலாம்ப்பா! நீங்க என்ன காலாகாலத்துக்கும் அதிலேயே சாப்பிட்டு, பத்திரமா உங்க பீரோவுல பூட்டிவெச்சுக்கவா போறீங்க..? என்னிக்காச்சும் நீங்க தூக்கிப் போடப்போற தட்டுதானே! அதை நானும் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிட்டேன்!''

(மறு முனையில் அமைதி)

''டாடி... லைன்ல இருக்கீங்களா... ஹலோ...''

(டொக்!)