Published:Updated:

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage
உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!  

உலகின் பெரும் ஆளுமைகள் அனைவரும் தனித்துவமான உடல்மொழியை  கொண்டவர்கள். நம் அருகாமை உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் முதல் காட்சி சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த். உடைமைகளை பெற்றுக்கொண்டு சிறை வாசலுக்கு நடந்து வர கதவுகள் திறக்கின்றன.அவர் நடந்து வருவது மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. ஆனாலும் அவரின் முகத்தைக் காட்டும் வரையில் கூட பொறுத்திருக்காமல் எழுந்து நின்று கைதட்டி விசிலடிக்கிறோம் என்றால். அது அவரது உடல்மொழி செய்யும் மேஜிக். உங்கள் உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதற்கான சில சிம்பிள் டிப்ஸ் இங்கே...

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

1. நம்மில் பெரும்பாலானோரும்  பேசுகையில் கைகளை மார்புக்கு குறுக்காக  கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்போம். கைகளை காட்டிக்கொள்வது என்பது நம் எதிராளியிடம்  நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.  மேலும் அந்த உரையாடலில்  கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செய்கிறோமாம்.

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

2. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.   

3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள்  உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். 

5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.   

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

6. போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள். 
 
7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர்  காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை  சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான்.  ஆனால் நம் உடலை , நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!

- க.பாலாஜி 

அடுத்த கட்டுரைக்கு