Published:Updated:

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses
வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

மாற்றுவகை வீடுகள்

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

நல்லா இருக்கே” என ஆச்சரியப்பட்டு ஒரு மொபைல் வாங்கினால் அடுத்த நாளே இன்னும் சிறப்பான வசதிகளோடு வேறொரு மாடல் வந்துவிடுகிறது.கடந்த 20 வருடங்களில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் அசுரப்பாய்ச்சலை நாம் பார்த்து வருகிறோம். அதிகம் மாறாத வெகு சில துறைகளில் முதன்மையானது கட்டுமானத்துறை. இன்றும் வீடு கட்ட பழைய முறைகளையே கையாண்டுக் கொண்டிருக்கிறோம். ”வாழுற இடமாச்சே. எதுக்கு ரிஸ்க்” என்ற நம் மனநிலை இதற்கு முக்கிய காரணம்.

கட்டுமான வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மணல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இன்னும் சில காரணங்களால் வேறு வழியின்றி நாம் இத்துறையிலும் சில மாற்றங்களை அனுமதித்தே ஆக வேண்டியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் செங்கல் சுவர்கள் கிடையாது. சிமெண்ட் வைத்து சுவர் முழுக்க பூச மாட்டார்கள். நம் நாட்டில் வெப்பநிலை வேறு என்பதால் அவர்கள் பின்பற்றும்முறை அப்படியே ஒத்துவராது. இதற்காக சில மாற்றங்கள் செய்து புதிய முறைகளை கண்டறிய வேண்டும். கண்டுபிடித்தும் இருக்கிறார்கள்

ஸ்டீல் வீடுகள்:

பல நூற்றாண்டுகளாக சிமெண்ட், மரங்களால்தான் நம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இதற்கு மாற்றாக ஸ்டீல் வீடுகளை காலம் தந்திருக்கிறது. பிரபல டிசைனர் ஜதீந்தர் சிங் (ஸ்டீல் வீட்டில்3 ஆண்டுகளாக வாழ்கிறார்) “சுவத்துல ஆணி அடிக்க முடியாதென்றத தவிர எனக்கு வேற வித்தியாசம் தெரில” என்கிறார். கட்டுவதற்கான நேரமும் 70% வரை குறைகிறது. ஸ்டீலின் விலை இப்போது சற்று அதிகமாக தெரிந்தாலும் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது கான்க்ரீட் வீடுகளை விட மலிவாகவே கிடைக்கும்/

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

ஸ்டீல் வீடுகளின் நன்மைகள்:

  1. டிசைன்: கான்க்ரீட் வகை வீடுகளை விட ஸ்டீல் வீடுகளை 3%-6% அதிகமாக இடத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், அழகாகவும் கட்ட முடியும்.

  2. Energy saving: உட்புற சுவர்களில் insulated panel பதிப்பது மூலம் வீட்டின் வெப்பநிலையை குறைக்க முடியும். இதனால் 50% வரை மின்சாரத்தை சேமிக்கலாம்

  3. எடை குறைவு: கான்க்ரீட் வகை வீடுகளை விட 75% குறைவான எடை கொண்டது. நிலநடுக்கம் போன்ற அபாயங்களை தாங்க கூடியது.

  4. நேரம்: ஸ்டீல் வீடுகளை கட்ட 60%-70% குறைவான காலமே ஆகிறது. இதனால் பணமும் மிச்சமாகிறது.

  5. சுற்றுச்சூழல்: மறுசுழற்சிக்கு உள்ளாகும் ஸ்டிலையே பயன்படுத்துவதால் இவ்வகை வீடுகள் environmental friendly எனலாம்

பாலி கார்பனேட் கூரைகள்:

கையாள எளிதான பாலி கார்பனேட் கூரைகள் வேயவும், தரைகள் அமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் எடை குறைவு. அதே சமயம் எடை தாங்கும் திறன் ஸ்டீலை விட அதிகம். இதனால் கூரையை மாற்றுவதோ, பிரித்து மீண்டும் அமைப்பதோ எளிதானது. ஸ்டீல் முறையாக பரமாரிக்கப்படாத போது துருப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனா பாலி கார்பனேட்டில் அந்த பிரச்சினையும் இல்லை. 200 டிகிரி வரை வெப்ப தாங்கக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. சென்னையிலே தயாரிக்கப்படுவதால் விலையும் குறைவு. இந்த வகை வீடுகளின்சுவர்கள் கான்க்ரீட்டிலும், தரையும் கூரையும் பாலி கார்பனேட்டிலும் கட்டப்படுகின்றன

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

ஜிப்சம் பேனல் வீடுகள்:

ஜிப்சம் பேன்களலால் கட்டப்படும் வீடுகளுக்கு beam, column எல்லாம் தேவையில்லை. அதனால் விரைவாக கட்டலாம். மணல், நீர் செங்கல், ஸ்டீல் என எதுவும் தேவையில்லை. உரத்தொழிற்சாலைகளின் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ஜிப்சம் பொருட்களை கொண்டு இவ்வகை வீடுகள் கட்டப்படுகின்றன. 12 மீட்டர் *3 மீட்டர் அளவுகளில் இந்த பேனல்கள் கிடைக்கின்றன. அடித்தளம் மட்டும் வழக்கமான முறையில் கான்க்ரீட்டால் போடப்படுகின்றன.சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஜிப்சம் பேனல் வீடுகளால் நிலநடுக்கத்தை தாங்கும் வீடுகள் என Building materials and technology council of india அங்கீகரித்திருக்கிறது.தற்போது 8 மாடிகள் வரை கொண்ட ஜிப்சம் வீடுகளை கட்டியிருக்கிறார்கள். இந்த அடுக்காடியின் தரைத்தளத்தை வெறும் நான்கே நாட்களில் முடித்திருக்கிறார்கள்.

வீடுன்னா சிமெண்ட்லதான் கட்டணுமா? #AlternateHouses

- கார்க்கிபவா