Published:Updated:

அருள்மிகு வேலூர் 80 கி.மீ! கல்லுச்சாமியின் 'தரிசனம்'

அருள்மிகு வேலூர் 80 கி.மீ! கல்லுச்சாமியின் 'தரிசனம்'
அருள்மிகு வேலூர் 80 கி.மீ! கல்லுச்சாமியின் 'தரிசனம்'
அருள்மிகு வேலூர் 80 கி.மீ! கல்லுச்சாமியின் 'தரிசனம்'

சாலையோரங்களில் பெரிய மரங்களுக்கு அடியில் இருக்கும் சிறு கல் கூட சாமியாகி கல்லுச்சாமி ஆகிவிடும். காஞ்சிபுரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தில், வேலூர் செல்வதற்கான மைல்கல் வைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும், மைல்கல்லில் போஸ்டர்களை ஒட்டி , அதை மறைப்பது தான் ஊர் வழக்கம்.

ஆனால், திடீரென 80கிமீ என குறிப்பிட்ட ஒரு மைல்கல்லில் சிறு துணி கட்டி அதை யாரோ சாமியாக்கிவிட்டு இருக்கிறார்கள்.தேங்காய், பால், பழம்  வைத்து பூஜையும் செய்து இருக்கிறார்கள். அப்பகுதியில் நிறைய விபத்துக்கள் நடப்பதால், சிலர் இப்படி செய்து இருக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.