Published:Updated:

ரஜினிக்குப் பிடித்த சுக்குமல்லி காபி!

##~##

கோடம்பாக்க நட்சத்திரங்களின் ஃபேவரைட் ப்ரிவியூ தியேட்டர் நுங்கம்பாக்கம் ஃபோர் ஃபிரேம்ஸ். தயாரிப்பாளரும், இயக்குனருமான பிரியதர்ஷனுக்குச் சொந்தமான இந்தத் தியேட்டரின் மேனேஜர் 'கணீர்க் குரல்’ கல்யாணம்.  அமிதாப் முதல் ரஜினி வரை 'ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம்’ என்றால் தெரியும். வைரமுத்து தன் 1,000 திரைப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட

ரஜினிக்குப் பிடித்த சுக்குமல்லி காபி!

புத்தக விழாவில், வைரமுத்துவின் அப்பாவையே அடையாளம் தெரியாமல் காவலாளிகள் உள்ளேவிட மறுத்தனர். இதைத் தூரத்தில் நின்று கவனித்த கல்யாணம், 'யோவ்... அவரு கவிஞரின் அப்பாய்யா!’ என்று  சொல்லி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். இப்படி, கல்யாணத்துக்கும் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் உள்ள நெருக்கத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ரஜினிக்குப் பிடித்த சுக்குமல்லி காபி!

''இந்தியாவில் சிறந்த ப்ரிவியூ தியேட்டர்கள்னா... எல்லோரும் மும்பைனு சொல்வாங்க. அதைவிடச் சிறப்பான ஃப்ரிவியூ தியேட்டரை சென்னையில் கொண்டுவரணும்னு எங்க டைரக்டர் ப்ரியதர்ஷனுக்கு ஆசை. பொது ஏலத்தில் வந்த இந்தத் தியேட்டரை வாங்கி பிரமிக்கவைக்கும் வகையில் மாற்றினார். அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயும் இங்கே ஏகப்பட்ட படங்களைப் பார்த்திருக்காங்க. வழக்கமா, 'ரஜினி சார் லெமன் டீதான் விரும்பிச் சாப்பிடுவார்’னு எல்லாரும் சொல்வாங்க. நான் ஒரு தடவை அவருக்கு சுக்குமல்லி காபி கொடுத்தேன். அதுக்கப்புறம் இங்கே வந்தார்னா, 'கல்யாணம் முதல்ல சுக்குமல்லி காபி கொடுங்க’னு அவரே கேட்டு வாங்கிக் குடிப்பார். 'எந்திரன்’ ப்ரிவியூ ஷோ அன்னைக்கு, 'யப்பா ஃபோர் ஃபிரேம்ஸ்ல படம் பார்க்கிறது மட்டும் எஃபெக்ட் இல்லை, கல்யாணம் கொடுக்கிற சுக்குமல்லி காபியைக் குடிச்சுப் பாருங்க. அதோட எஃபெக்ட் இன்னும் ஜாஸ்தியா இருக்கும்’னு ரஜினி சார் பாராட்டிச் சொன்னார். அப்புறம் என்ன, சுக்குமல்லி காபிக்கு ரசிகர் மன்றமே உருவாயிடுச்சு.

ரிலாக்ஸ்டாகப் பாப்கார்ன் கொறித்தபடி பிளாக் டீ குடிப்பதும் படத்தை ரசித்தபடியே முந்திரியைக் கொறிப்பதும் கமலின் வழக்கம். சூர்யாவுக்கு சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்'' என்று ஸ்டார்களின் ஃபேவரைட் அயிட்டங்களைச் சொல்லும் கல்யாணம், பிரியாணி, ஜூஸ், ஸ்நாக்ஸ் என நட்சத்திரங்கள் கேட்கும் அயிட்டங்களை அரை மணி நேரத்துக்குள் வரவழைத்து வாயடைக்க வைப்பார். ஆனால், இதுவரை கல்யாணம் ஃபோர் ஃபிரேம்ஸிலோ... மற்ற தியேட்டர்களிலோ... எந்த ஸ்டார்களின் படங்களையும் பார்த்ததே இல்லை!

- எம்.குணா

பின் செல்ல