Election bannerElection banner
Published:Updated:

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!

##~##

ர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முத லில் அந்த இனம் பற்றிய புத்தகங்களை  அழித்தாலே போதுமானது என்பார்கள். தமிழர்களின் வாழ்க்கை யைப்பற்றி அறிந்துகொள்ளக்கூடிய முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்க நூல்களில் முதல் இரண்டு சங்க கால நூல்கள் அழிந்துவிட்டன. மிச்சம் இருந்த கடைச் சங்க நூல்களை வைத்துத்தான் தமிழனின் வரலாறு அறியப்படுகிறது!

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!

அப்படியான அரிய நூல்கள் பலவற்றை நாமக்கல் லைச் சேர்ந்த நா.ப.ராமசாமி பாதுகாத்து வருகிறார். எந்த நூலகத்திலும் கிடைக்காத அரிய பொக்கிஷங் கள் அவை. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங் கள்கூட இவரது நூலகத்தை அலங்கரிக்கின்றன.

''ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பூஞ்சோலை, ஜில்ஜில், வானதி பதிப்பகத்தின் பாப்பா, பாலர் மலர், திருநாவுக்கரசுவின் அம்புலி மாமா புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற இதழை இலவசமாக கொடுப்பார்கள். அதேபோல், சோவியத் நாட்டின் இதழும் வரும். அவற்றையும் படிப்பேன்.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பின்பு, திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன். அப்போது திராவிட நாகரிகம் சார்ந்த புத்தகங்களும், உலக புரட்சியாளர்களின் வரலாறும், பொதுவுடமைச் சிந்தனைகொண்ட புத்தகங்களையும் படித்தேன். இது ஒரு வெறிபோல பல்கிப் பெருகவே, புத்தகங்களை படிப்பதுடன் மட்டும் இல்லாமல் தேடித் தேடி சேகரிக்கவும் ஆரம்பித்தேன்!'' என்று புன்னகை பூக்கிறார் நா.ப.ராமசாமி.

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!

கலை, பண்பாடு, நாகரிகம், உலக வரலாறு, மருத்துவம் என எல்லா வகையான புத்தகங்களும் என்னிடம் உள்ளன. 1890-ல் வந்த திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகமான ஜான்ட்ரூ, ராட்லர் என்பவர் எழுதி 1834-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்-ஆங்கில அகராதி, 1900-ல் ஜி.யு.போப் எழுதிய திருவாசகம், 1858-ல் ஆப்பிரிக்கா பற்றி தமிழில் வந்த புத்தகங்கள், கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் மூலப் பதிப்பு, 1933 முதல் வெளிவந்த ஆனந்த விகடன் தொகுப்பு ஆகியவை என் நூலகத்தின் அரிய பொக்கிஷங்கள்.

கடந்த 2002-ம் ஆண்டு ஈழத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது, யாழ் நூலகத் துக்காக இலங்கை சமூக வளர்ச்சித் துறை அமைச்சர் சந்திரசேகரனிடம் 3,800 புத்தகங் களைக் கொடுத்து அனுப்பினேன். தற்போது 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் என் னிடம் இருக்கின்றன. பழ.நெடுமாறன், வே.ஆனைமுத்து, திலகவதி, காந்தி கண்ணதாசன், க.பா.அறவாணன், தாயம்மாள் அறவாணன் போன்ற தமிழ் ஆர்வலர்கள் என் வீட்டுக்கு வந்து புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு செல் வார்கள்!'' என்று பெருமிதம் தெரிவிப்பவரின் கவலையும் இந்தப் புத்தகங்கள் பற்றியதே!

''எனக்கு வயதாகிவிட்டது. எனக்குப் பின் இந்தச் செல்வங்களை பாதுகாப்பது யார் என்ற கவலையே இப்போது தினமும் என்னை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது. பிரபாகரன் தலைமையில் ஈழம் மலரும்; அப்போது இந்தப் புத்தகங்களை தாய் மொழியை மதிக்கும் அந்த நாட்டுக்கு கொடுத்துவிடலாம் என்று இருந்தேன். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து அந்த நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள்.

தமிழகத்திலேயே ஒப்படைக்கலாம் என்றால் இந்தப் புத்தகங்களின்   மதிப்பும் மரியாதையும் தெரியாமல் தூக்கி மூலையில் போட்டுவிடுவார் கள். இங்கு தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மதிப்பு இல்லை. என்னைப் போன்ற பல தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டுக்குக்கூட அழைப்பு விடுக்கவில்லை. எனக்குப் பின்பு இந்தச் சமுதாயம் பயனுறும் வகையில் இந்தப் புத்தகங்களைப் பாதுக்காக்கத் தகுதி உள்ள நபர் என்னிடம் வந்து உத்தரவாதம் கொடுத்தால், இவற்றை அளிக்கத் தயாராக இருக்கிறேன்!'' என்கிறார் ராமசாமி!

- வீ.கே.ரமேஷ், படம்: க.தனசேகரன்

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு