Published:Updated:

ஊட்டிக்குப் போட்டி ஏற்காடு!

##~##

'எவர் க்ரீன் அழகாக இருக்கும் நீலகிரி மாவட்டம், மே மாதத்தில் கூடுதல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். காரணம், கோடை விழா! இவ்வருடம் மே மாதம் முழுக்க  நடந்த இந்த விழாவில் ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி என்று அரசுத் துறைகள் அசத்தி இருந்தன.

 குன்னூர் சிம்ஸ் பார்க்கில் நடந்த பழக் கண்காட்சியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக் கலைத் துறையினர் கலந்துகொண்டு தங்கள் மாவட்டத்தில் விளைந்த பழங்களை வைத்து பல்வேறு அலங்காரப் பொருட்களை செய்து இருந்தார் கள். குறிப்பாக, 25 ஆயிரம் சாத்துக்குடி பழங்களைக்கொண்டு ஒரு ரயில் நிலையத்தையே உருவாக்கி இருந்தார்கள். உள்ளே பரவசத்துடன் சுற்றிப் பார்த்துத் திரும்பும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு சாத்துக்குடி இலவசம்!

ஊட்டிக்குப் போட்டி ஏற்காடு!

மலை வனத்தில் கிடைக்கும் வாசனை பொருட்களைக் கொண்டு கூடலூரில் நடத்தப்பட்ட வாசனை திரவிய கண் காட்சிக்கும் இந்த ஆண்டு நல்ல ரெஸ்பான்ஸ். கண்காட்சியில் நுழைந்த அனைவர் மீதும் சென்ட் அடித்துப் பரவசப்படுத்தினார்கள். ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூக்களைக்கொண்டு முதலை, டைனோசர் என்று பிரமாண்டமான மிருகங்களை தத்ரூபமாக உருவாக்கி இருந்தார்கள். டைனோசரின் தோளில் கை போட்டு போட்டோ எடுக்க சுற்றுலாப் பயணிகளுக்குள் போட்டா போட்டி!

அரசு சார்பில் மட்டுமின்றி, தனியார் அமைப்புகளும் தங்கள் பங்குக்கு கலக்கி இருந்தார்கள். அதில் நாய்க் கண்காட்சியை அடுத்த கோடை விழா வரை யாரும் மறக்க முடியாது. பொது வாக ஊட்டியில் வசிக்கும் நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பு வீடுகளில் நாய் நிச்சயம். அதுவும் விலை உயர்ந்த  ரக நாய்களை வாங்கிப் பாசத்தைக் கொட்டி வளர்ப்பார்கள். பெடிகிரி, சிக்கன் என்று தினம் தினம் தீபாவளி சாப்பாடு சாப்பிடும் இந்த நாய்கள், கண்காட்சியில் கம்பீரமாக நடந்து வரும் அழகே தனிதான்.

ஊட்டிக்குப் போட்டி ஏற்காடு!

அடுத்த ஹைலைட், வின்டேஜ் கார் ஊர்வலம். கோவை, சேலம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என்று பக்கத்து மாநிலத்தவரும் தங்களது பழைமையான மோரீஸ் மைனர், பீட்டில், ஆஸ்டின் கார்களில் தங்கள் குடும்பத்துடன் பவனி வந்தார்கள்.

ஊட்டிக்குப் போட்டியாக நடந்தது ஏற்காடு கோடை விழா. ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவு, தம்பதியர் பிரிவு என்று தனித் தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் தத்தக்கா பித்தக்கா என்று துடுப்பு போட்டார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத் துறை சார்பில் ஏகப்பட்ட பரிசுகள். வழக்கமாக ஏற் காடு கோடை விழாவில் நாய்க் கண்காட்சி மட்டுமே நடத்தப்படும். ஆனால், இந்த முறை செல்லப் பிரா ணிகள் கண்காட்சி வைத்து அசத்திவிட்டார்கள். வாத்துக்களின் நடனம், வெள்ளாடுகளின் 'கேட் வாக்’, சேவல் சண்டை, விதவிதமான நாய்களின் அணிவகுப்பு என்று பார்வையாளர்களைத் திக்குமுக்காடச் செய்தன செல்லப் பிராணிகள்!

கோடை விழா முடியும்போது ஊட்டியிலும் சரி... ஏற்காட்டிலும் சரி... கால்வைக்க இடம் இல்லை. மீண்டும் எப்போது வரும் கோடை விழா என்ற ஏக்கம் தொனித்தது ஒவ்வொரு சுற்றுலா பயணியின் கண்களிலும்!

- எஸ்.ஷக்தி, டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: எம்.விஜயகுமார், ஜாக்சன்

ஊட்டிக்குப் போட்டி ஏற்காடு!
பின் செல்ல