Published:Updated:

தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தேவையில்லை: குரேஷி

தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தேவையில்லை: குரேஷி
தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தேவையில்லை: குரேஷி
தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தேவையில்லை: குரேஷி

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவையில்லை என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் நடத்தை விதிகளை இன்னும் நேர்த்தியாக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவையில்லை. தேர்தல் நடத்தை விதிகள் போதுமானவை. ஆனால் அதை இன்னும் நேர்த்தியாக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள்மீறல் குற்றத்துக்கு கடும் அபராதம் விதிக்கத்தக்க அளவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான சில மாற்றங்களை செய்யவேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிகள் மீறலுக்கு ரூ.500 மட்டுமே அபராதமாக விதிக்க முடியும். தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப, இந்தத் தொகையை அதிகரிக்க தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும்.

தேர்தலின்போது ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதற்காக அரசியல் கட்சிகளால் கொண்டு வரப்பட்டது தான் தேர்தல் நடத்தை விதிகள். அது தனித்துவம் வாய்ந்த ஒன்று. அது சரியான வலுவுடன் செயல்படுத்தப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகளை உலகம் ஆச்சரியமாகப் பார்க்கிறது. அத்தகைய தனித்துவம் வாய்ந்ததுதான் தேர்தல் நடத்தை விதிகள். தேர்தல் நடத்தை விதிகளை யாரும் சூழ்ச்சி செய்து சிதைத்து விடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை சட்டப்பூர்வமாக்குவது என்பது கொஞ்சம் கூட தெளிவில்லாத யோசனை.

தேர்தல் நடத்தை விதிகள் என்பது உடனடி நடவடிக்கை, தீயணைப்பு வீரர் தீயை அணைப்பது போலத்தான் இதுவும். ஆனால் இது கோர்ட்டுக்கு போனால் அதில் தீர்வு வர 6 முதல் 7 வருடங்கள் வரை ஆகும்," என்றார் குரேஷி.