Election bannerElection banner
Published:Updated:

உப்பின் கதை!

மரக்காணத்தில் கரிப்பு மணிகள்

##~##

ப்பில்லாத உணவை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், உப்பு எப்படி தயார் ஆகிறது என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

கோலத்துக்கு வைக்கும் புள்ளிகள¤ன¢ நேர¢த¢த¤யுடன¢ ஒரே நேர் கோட்டில் பாத்தியின் வரப்புகளில் வரிசையாகக் கொட்டிவைக்கப்பட்டு இருக்கின்றன சிறிய சிறிய உப்புக் குவியல்கள். அதை ஒட்டியவாறே உப்பளத்தின் கரையோரம் வெண்ணிற பிரமிடுகளாக,  உப்புக் குவியல்கள். சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியை அடுத்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது மரக்காணம். 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள உப்பளம், மத்திய அரசுக்குச் சொந்தமானது. உப்பு அள்ளுவதற்காகக் குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது.

உப்பின் கதை!

''முதலில் வரப்புகளைச் சரிசெய்து பாத்திகளை ஒழுங்கு செய்வோம். பிறகு பாத்திகளுக்குள் படிந்து இருக்கும் அழுக்கு மற்றும் சேற்றை அப்புறப்படுத்தி, ஆட்களை வைத்து கால்களால் மிதித்து பாத்தியை ஓரளவுக்குப் பக்குவப்படுத்துவோம். பிறகு, மரப் பலகையால் ஆன திம்ஸ் கட்டையால் அழுத்தி சமன்செய்வோம். இதைச் செய்து முடிக்க 25 நாட்கள் முதல் 30 நாட்கள் ஆகும். அதன்பிறகுதான் பாத்திக்குள் தண்ணீரை விடுவோம். அதற்கு முன்பு அந்தத் தண்ணீரை வாய்க்காலில் சுற்றி வரச் செய்வோம். ஏனென்றால், நிலத்தடியில் இருந்து இறைத்த தண்ணீரின் வெப்பத்தின் அளவு வெறும் ஆறு டிகிரிதான் இருக்கும். இந்த அளவு உப்பு இறங்கப் பயன்படாது. அதனால் அந்தத் தண்ணீரை மூன்று அல்லது நான்கு நாட்கள் சுழற்சி முறையில் விட்டவுடன் 16 முதல் 18 டிகிரி வரை வெப்பத்தின் அளவு அதிகம் ஆகும். இதை ஹைட்ரோ மீட்டரால் அளந்துகொள்வோம். அப்போதுதான் உப்பின் வீழ்படிவுத் திறன் அதிகமாகும்'' என்கிறார் கண்காணிப்பாளர் ராஜேந்திரன்.

உப்பின் கதை!

  2,000 பேர் இங்கு வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வருடத்தில் எட்டு மாதங்கள்தான் இவர்கள் இங்கு வேலை செய்ய முடியும். மழைக் காலம் ஆரம்பித்துவிட்டால், இவர்களின் நிலைமை கவலைக்கிடம்தான். அந்தச் சமயங்களில் இவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

''எனக்கு 58 வயசு ஆகுதுங்க. 40 வருஷமா இந்த உப்பளத்துலதான் வேலை செய்றேன். மழைக் காலம் ஆரம்பிச்சிடுச்சுனா, ரெண்டு வேளைதான் சாப்பாடு. அதுலயும் ஒருவேளை கஞ்சிதான். அந்தச் சமயத்துல கொஞ்சம் பேர் வெவசாயக் கூலி வேலைக்கும், கட்டட வேலைக்கும் போயி சமாளிச்சிடுவாங்க.  என்னை மாதிரி வயசானவங்களும், மத்த வேலை தெரியாதவங்களும் போக மாட்டாங்க'' என்கிறார் ராஜு. இதில் இன்னொரு சோகம், இவர்கள் அந்த நான்கு மாதங்கள்தான் வேலைக்கு வருவார்கள் என்பதால் இவர்களுக்கு விவசாய வேலை கொடுப்பதிலும் தயக்கம் காட்டுவார்களாம்.

''மழைக் காலத்துல உப்பளத்துக்குப் போக முடியாததால், எங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும். அந்த மாதிரி நேரத்துல எங்களோட முதலாளிங்கக்கிட்டதான் போயி 500, 1000-னு அட்வான்ஸ் வாங்கிக் குடும்பத்தை ஓட்ட வேண்டி இருக்கும்'' என்கிறார் காமாட்சி.

''பாத்தியில இருந்து எடுக்கும் உப்பை, வரப்பில்தான் முதலில் கொட்டுவோம். அப்புறம்தான் கூடையில் வைத்து வரப்பு மேல நடந்து கரைக்குப் போய் கொட்டுவோம். அப்படி வரப்பு மேல நடக்கும்போது, வரப்பு முழுக்க செதறிக்கெடக்குற உபரி உப்புங்க பாதத்துல பட்டு புண் ஆயிடும். சில சமயங்கள்ல ரத்தம் கொட்டும். அந்த மாதிரி நேரத்துல வரப்பு மேல மறுபடியும் நடக்கும்போதும், உப்புத் தண்ணில கால் வைக்கும்போதும் வலியில உயிரே போயிடும்'' என்கிறார் பொன்னி.

உப்பைப்போலவே இவர்கள் வாழ்க்கையும் கண்ணீரின் சுவையோடு கரிக்கத்தான் செய்கிறது!

- ஜெ.முருகன்

உப்பின் கதை!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு