Published:Updated:

விலங்குகளை மனிதன் பாதுகாக்க வேண்டாம். ஏன் தெரியுமா? #WorldAnimalDay

விலங்குகளை மனிதன் பாதுகாக்க  வேண்டாம். ஏன் தெரியுமா?  #WorldAnimalDay
விலங்குகளை மனிதன் பாதுகாக்க வேண்டாம். ஏன் தெரியுமா? #WorldAnimalDay

விலங்குகளை மனிதன் பாதுகாக்க வேண்டாம். ஏன் தெரியுமா? #WorldAnimalDay

ன்ன தலைப்பை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறதா?. ஆம் விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அவைகள் தான் மனிதர்களை பாதுகாத்து, மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அவற்றை அழிவுக்கு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்.

இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது. அத்தகைய விலங்குகளை பாதுகாப்பதையும், அவற்றிற்கு எதிரான செயல்களை தடுப்பதையும், அவற்றின் வாழ்விடங்களை காப்பதுடன் விலங்கினங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுவதையும் நோக்கமாக கொண்டே உலக விலங்குகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் உள்ள காடுகளையும், கடல்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருபவை பல்லாயிரக்கணக்கான விலங்கினங்கள். மனிதர்களின் பேராசையாலும், பெருகி வரும் மக்கள் தொகை, அறிவியல் வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளாலும் உலகம் முழுவதும் வாழும் விலங்கினங்கள் அருகி வருகின்றன.

மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு இன்றியமையா காரணியாக திகழும் விலங்குகளை பாதுகாக்க இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் 1931ல் முதன் முதலாக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2003ம் ஆண்டு முதல் இத்தாலியை சேர்ந்த  புனித பிரான்சிஸ் அசிசி நினைவு நாளான  அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இறை தூதுவராகவும், புனிதராகவும் போற்றப்பட்ட அசிசி தனது வாழ்நாட்களில் விலங்குகள் மீது அன்பு கொண்ட ஆர்வலராக விளங்கியதுடன், அவற்றை காப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளார். இதன் காரணமாகவே அவரது நினைவு நாள் உலக விலங்குகள் தினமாக சுற்று சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் நம் இந்தியாவில் உள்ள விலங்கினங்களை பற்றியும் அறிந்து கொள்வோம். நம் நாட்டின் மொத்த காடுகளின் பரப்பளவு 6 லட்சம் ச.கி.மீட்டர். இதில் சுமார் 89,450க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உலகில் காணப்படும் விலங்கினங்களில் 7.31% ஆகும். இவற்றில் 372 வகையான பாலூட்டி இனங்களும், 1330 வகையான பறவை இனங்களும், 399 வகையான ஊர்வன இனங்களும், 60 ஆயிரம் பூச்சி இனங்களும், 181 வகையான நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும், 1693 மீன் இனங்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் 8% வன உயிரினங்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்து வருவனவாகும்.

இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் காடு வளம் இல்லாத நிலையில் அவற்றை மேம்படுத்த பல்வேறு வகையான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பு சட்டம் (1873), இந்திய காடுகள் பாதுகாப்பு சட்டம் (1927), வங்காள காண்டாமிருக பாதுகாப்பு சட்டம் (1932), பம்பாய் வன விலங்குகள் மற்றும் வன பறவைகள் பாதுகாப்பு சட்டம் (1951), பிராணிகள் வதை தடுப்பு சட்டம் (1960), வன விலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), காடுகள் பாதுகாப்பு சட்டம் (1980), காடுகள் மற்றும் இயற்கை சூழல்கல் பாதுகாப்பு சட்டம் (1994), பல்லுயிர் பெருக்க சட்டம் (2002) என பலவகையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் விலங்கினங்களுக்காக 44 தேசிய பூங்காக்களும், 247 வனவிலங்கு சரணாலயங்களும் நம்நாட்டில் இயங்கி வருகின்றன.
இத்தனை இருந்தும் காலநிலை மாற்றங்கள், வேட்டையாடப்படும் முறைகள், வறட்சி, நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல், பெருகிவரும் மக்கள் தொகை போன்றவற்றால் உலக விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே விலங்குகளை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் எந்த முயற்சியும் எடுக்கத்தேவையில்லை. அதன் அழிவுக்கு துணை போகாமல் இருந்தால் போதும்.

நாம் வாழ... விலங்குகள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.

- இரா.மோகன்.

அடுத்த கட்டுரைக்கு