Published:Updated:

’எங்களுக்கு இந்த பைக்கு தான் எல்லாம்!” #YouthsChoice

Vikatan Correspondent
’எங்களுக்கு இந்த பைக்கு தான் எல்லாம்!” #YouthsChoice
’எங்களுக்கு இந்த பைக்கு தான் எல்லாம்!” #YouthsChoice


"நம் சிறகுகளே..இந்த பைக்குங்கதானே
இந்த உலகினிலே.. முதல் தேவையே”


காலேஜ் கேம்பஸுக்குள் அதிகம் கேட்கும் ரிங்டோன் இந்தப் பாட்டுதான். ”என் பைக்க போல யாரு மச்சான்”ன்னு பாடுற அளவுக்கு அப்படி என்னப்பா உங்க பந்தம் என சில யூத்ஸிடம் கேட்டோம்.


விஜய பிரபாகரன் -மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்
 "ஒரு வித்தியாசமான பைக் வாங்கனும்னு மனசு ஓரத்துல ஒரு ஆசை. அந்த நேரத்துலதான் KTM RC200 சென்னை,பெங்களூருவில் அறிமுகமாகி இருந்துச்சு. உடனே மதுரைல ஷோரூமில் முதல் ஆளா புக் பண்ணிட்டேன்.வீட்டில் முதல்ல ’நோ’ சொன்னாங்க. உண்னாவிரதம்லாம் இருந்து ஒரு வழியாக ஒகே வாங்கிட்டேன். மதுரையில் முதல் KTM RC200 என்னோடதுதான்,இந்த பைக்க ஷோரூமில் இருந்து வாங்கிட்டு வரும்போது கிட்டத்தட்ட 7,8 பேர் பைக் பின்னாடியே விரட்டி வந்து இந்த பைக்க பத்தி விசாரிச்சிட்டு போனாங்க. அப்போவே ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு எண்ணம்.அதுக்கு அப்புறம் நான் என் பைக்கோட facebookல் போடும் படங்களை பார்த்துட்டு நிறைய நன்பர்கள் கிடைக்க ஆரம்பிச்சாங்க. போட்டா ஷூட்டுக்கு  கூப்பிட ஆரம்பிச்சாங்க,ஜீரோ மாதிரி இருந்த என்னை ஹீரோ ஆக்குனது என் செல்ல பைக்தான், இந்த பைக்கல எனக்கு பிடிச்ச விஷயமே இதோட Faceதான்,பாக்க எதோ ஒரு கோவமான பார்வை பாக்குற மாதிரி இருக்கும்,ஒரு வெறித்தனம் தெரியும்" என்று கூறி வாஞ்சையாக பைக்கை தடவி குடுத்தார் 

நிர்மல் குமார். -பொறியியல் கல்லூரி மாணவர் 
"Yamaha FZ version 2 தான் நம்ம பைக். இதன் பிக் அப் பவர் செம. வண்டியில் உட்காரும் பொழுது நமக்கு கிடைக்கும் posture ரொம்ப அழகாய் இருக்கும். ரோட்டுல ஓட்டிட்டு போகும் போது சாதரண லுக் இருக்குற ஆளை கூட இந்த வண்டி அசாதாரணமாக காட்டும். அதுதான் Fz கெத்து. என் முதல் காதலி என் பைக்தான். மகிழ்ச்சியோ துக்கமோ பைக்ல ஒரு ரைட்தான் அதற்கான சொல்யூஷன் "என்கிறார் 

பிரதீப் குமார் -ஐடி ஊழியர்
"ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு ட்ரீம் பைக் இருக்கும். அப்படிதான் எனக்கு Yamaha R15. கல்லூரியில் படிக்கும் போதே என் சேமிப்பு பணத்தை வைச்சு அட்வானஸ் கட்டிட்டேன். அப்புறம்தான் வீட்டில் சொன்னேன். என் அப்பா வந்து வண்டியை பார்துட்டு நீ எந்த வண்டி வேணும்னாலும் வாங்கிக்கோ இது மட்டும் வேண்டாம். இதை பார்த்தாலே பயமா இருக்குனு சொல்லிட்டார். லவ் மாதிரி பல போராட்டங்களுக்கு பிறகுதான் என் R15 எனக்கு கிடைச்சுது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு சின்ன விபத்து,எனக்கு ஒரு அடி கூட இல்லை,எனக்கு விழ வேண்டிய அடி முழுவதும் வண்டி வாங்கிடுச்சு. வண்டி சரி பண்ணி வர 3 மாதம் ஆயிடுச்சு. அந்த 3 மாசத்துல பாக்குறவங்க எல்லாம் என்ன வண்டி இல்லாமல் வறீங்க?வண்டி என்ன ஆச்சுனு? கேட்டப்பதான் என் வண்டி என்னுடைய பெரிய அடையாளமாக  மாறி இருக்குனு புரிஞ்சது.  இப்ப வண்டியை இன்னும் கவனமாக ஓட்டுறேன்".

தீபன் ராஜ் -பொறியியல் பட்டதாரி
"நம்ம ஆளு Pulsar 220ங்க. 220 ccல் இந்த அளவு நல்ல விலையில் வேறு எந்த வண்டியும் மார்க்கெட்ல இல்லை. இந்த வண்டியில் இருக்கிற கம்ஃபர்ட் வேற எந்த வண்டியிலும் என்னால் உணர முடியல.  ஒரு நாளில் குறைந்தபட்சம் 15-18மணி நேரம் வரை என் பைக் கூடதான் ஸ்பெண்ட் பண்றேன். இப்ப என் பைக்கும் என்னுடைய உடலின் ஒரு பார்ட்டாவே நினைக்கிறேன். ஸ்மார்ட்ஃபோன விட என் பைக்தான் எனக்கு பெருசு.


-தொகுப்பு, படங்கள் - க.விக்னேஷ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்).